முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு யூரியா உரம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையினை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான யூரியா உர விநியோகம் கமத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (19) வழங்கப்பட்டுள்ளது. பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்திற்கு 25 மெற்றிக் தொன் யூரியா உரமும் , குமுழமுனை கமநல சேவை நிலையத்திற்கு 25 மெற்றிக் தொன் உரமும் உடையார்கட்டு கமநல சேவை நிலையத்திற்கு 23.5 மெற்றிக் தொன் யூரியா உரமும் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டன. 50 நாட்களுக்குட்பட்ட பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 40 கிலோ கிராம் வீதம் உரம் … Read more

பஸ் கட்டணங்கள் குறைப்பு

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதினால் ,நேற்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்  2.23%த்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரை நடைமுறையில் உள்ள குறைந்த கட்டணம் 40 ரூபா 38 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் கட்டண குறைப்பு தனியார் பஸ்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கும் பொருந்தும். அத்துடன், பொதவான சேவைகள், அரை சொகுசு சேவைகள், சொகுசு சேவைகள் மற்றும் அதி சொகுசு சேவைகள் உள்ளிட்ட … Read more

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான இரண்டாவது தன்னார்வத் தேசிய மீளாய்வை இலங்கை முன்வைப்பு

நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபையின் அனுசரணையில் கூடிய உயர் மட்ட அரசியல் மன்றத்தில், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான இரண்டாவது தன்னார்வ தேசிய மீளாய்வை இலங்கை  (15) முன்வைத்தது. ‘அனைவருக்கும் நிலையான அபிவிருத்தியடைந்த தேசத்தை நோக்கிய உள்ளடக்கிய மாற்றம்’ என்ற தலைப்பிலான அறிக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் மொஹான் பீரிஸ் மற்றும் இலங்கையின் நிலையான அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் சமிந்திரி சபரமாது ஆகியோரால் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. … Read more

கடற்பரப்புகளில் வானிலை,கடல் நிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஜூலை 20ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் இடைக்கிடையே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை … Read more

வரலாற்றுச் சிறப்புமிகு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம்

கிழக்கு இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிகு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று (19) திகதி நண்பகல் 12.00 மணிக்கு திருக்கொடியேற்றட்டத்துடன்  ஆரம்பமானது. முதல் நாள் கொடியேற்ற நிகழ்வில் பலர் கலந்துகொணடனர்.

புதிய ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்ட ரணில்! சூடுபிடிக்கும் காலிமுகத்திடலின் களநிலவரம் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை (Video)

புதிய ஜனாதிபதி ரணில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு நாடாளுமன்றில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. காலிமுகத்திடலில் போராட்டம் இந்த நிலையில் இன்று காலை முதல் காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ரணில் ஜனாதிபதியாக தெரிவானமைக்கு தமது எதிர்ப்பினை தொடர்ச்சியாக தெரிவித்து … Read more

அடுத்துவரும் ஜனாதிபதியாக , பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவு

பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் மாற்றீட்டு ஜனாதிபதி (அடுத்துவரும் ஜனாதிபதி)யாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அறிவித்துள்ளர். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 134 வாக்குகளைப் பெற்று பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாற்றீட்டு ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.இவர்களை தோற்கடித்து புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த … Read more

பாராளுமன்றத்தில் மாற்றீட்டு ஜனாதிபதி (அடுத்துவரும் ஜனாதிபதி)க்கான தேர்தல் இன்று

பாராளுமன்றத்தில் மாற்றீட்டு ஜனாதிபதி (அடுத்துவரும் ஜனாதிபதி)க்கான தேர்தல் இன்று (20) நடைறுகிறது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தமது பதவிகாலம் முடிவடைவதற்கு முன்னர்  பதவியை ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்ககாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பு இன்று முற்பகல் பத்து மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் மாற்றீட்டு ஜனாதிபதி (அடுத்துவரும் ஜனாதிபதி) பதவிக்காக போட்டியிடுகின்றார்கள். பாராளுமன்ற … Read more

பாராளுமன்றத்தில் மாற்றீட்டு ஜனாதிபதி (அடுத்துவரும் ஜனாதிபதி)க்கான தேர்தல்

பாராளுமன்றத்தில் மாற்றீட்டு ஜனாதிபதி (அடுத்துவரும் ஜனாதிபதி)க்கான தேர்தல் தற்போது நடைபெறுகிறது