மூன்று பிள்ளைகள் இருந்தும் தனிமையில் தவிக்கும் தாய்! உதவியின்றி போராடும் அவலம் (VIDEO)

இலங்கையில் தற்போதைய நிலையில் சாதாரண நிலையை உடைய மக்களே அன்றாட உணவிற்கு பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். வறுமை எந்த அளவுக்கு கொடுமையானது என்பது ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து உணர்ந்தவர்களுக்கே தெரியும். அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் உண்டு. இப்படி வறுமையில் வாழும் தாயின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், … Read more

இடைக்கால ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான மனு விசாரணையின்றி தள்ளுபடி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யக் கோரி இலங்கை விநிவித பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணை இன்றி உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற  நீதிபதிகள் காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. எதிர்தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான … Read more

எயார்மெயில் Airmails கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

விமானம் மூலமான அஞ்சல்களுக்கான கட்டணத்தை அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் அத்துடன் இந்த கட்டண உயர்வு 2022 ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டதன் விளைவாக அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவில் இருந்து தபால் பொருட்களை ஏற்றுக்கொள்வதை திணைக்களம் முன்பு நிறுத்தியிருந்தது. எவ்வாறாயினும், மூன்று நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக … Read more

கடைசி தருணம் வரை ஜனாதிபதி மாளிகையில் பதுங்கியிருந்த பசில் உட்பட பல முக்கியஸ்தர்கள்

கடந்த ஜுலை 09ஆம் திகதி கோட்டை ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்ட போது முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் ஜனாதிபதி மாளிகையின் அறையொன்றில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைவதை தடுப்பதற்காக இராணுவத்தினர் பயன்படுத்திய பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்த போது வெளிவிவகார அமைச்சு பக்கத்தில் அமைந்திருந்த வாயிலாக பசில் ராஜபக்ஷ வெளியேறியதாகத் தெரியவந்துள்ளது. அதற்கு அரை மணி நேரத்துக்கு முன்புதான் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளரும் முப்படைத் தளபதிகளும், … Read more

65 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு அபாய எச்சரிக்கை

நாடு முழுவதிலும் 65 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை அதிக ஆபத்துள்ள டெங்கு அபாய பிரிவுகளாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர அறிவித்துள்ளார். இதில் கொழும்பு மாவட்டத்தில் 17 MOH பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 13 MOH பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தில் 6 MOH பிரிவுகளும் , கண்டி மாவட்டத்தில் 6 MOH பிரிவுகளும், காலி மாவட்டத்தில் இரண்டு MOH பிரிவுகளும், மாத்தறை மாவட்டத்தில் இரண்டு MOH பிரிவுகளும், ஹம்பாந்தோட்டை … Read more

இலங்கையில் மீளவும் தீவிரமடையும் கோவிட் தொற்று

நாட்டில் பதிவாகும் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவுகள் எச்சரித்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் இருந்து தற்போது நாளாந்தம் சுமார் 30-40 கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகி வருவதாக தலைமை தொற்றுநோய் நிபுணர் டாக்டர் சமித்த கினிகே ஊடகங்களுக்கு தெரிவித்தார். எவ்வாறாயினும், கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் தினசரி நேர்மறை எண்ணிக்கை 10 முதல் 15 பேர் வரை இருந்ததாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், தடுப்பூசிகள் காரணமாக கொரோனா வைரஸிலிருந்து … Read more

நாளை ஆர்ப்பாட்டக்காரர்களின் செயற்பாட்டை அனுமதிக்க போவதில்லை! ரணில் அறிவிப்பு

ஆர்ப்பாட்டக்காரர்கள் புதன்கிழமை(நாளையதினம்) நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பை தடுப்பதற்கோ, அல்லது பொதுக் கட்டிடங்களை ஆக்கிரமிப்பதற்கோ அனுமதிக்கப் போவதில்லை என  பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் சட்டம் ஒழுங்கு ஒன்று காணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  சிஎன்என் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை  தெரிவித்துள்ளார். ஆயுதங்களை பயன்படுத்துவதை நாங்கள் தவிர்க்க விரும்புகின்றோம்.. தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றமும் தமது கடமைகளைச் செய்ய … Read more

இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல்

இலங்கையில் பணியமர்த்தப்பட்ட இந்திய அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கொழும்பில் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார் என இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் இருக்கும் இந்திய பிரஜைகள் இலங்கையின் சமீபத்திய நிலைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், அதற்கேற்ப அவர்களின் இயக்கங்கள் மற்றும் செயல்பாடுகளைத் திட்டமிடுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக பொது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இந்திய இலங்கை மக்களிடையிலான உறவு அன்பும் நட்பும் நிறைந்தது. … Read more

பிரித்தானியாவை வாட்டியெடுக்கும் கடும் வெப்பம் – ஆயிரம் பேர் வரை மரணிக்க கூடும் என கணிப்பு

கடும் வெப்பம் காரணமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கூடுதல் இறப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். 2000-2019 க்கு இடையில் சராசரியாக ஒவ்வொரு கோடையிலும் வெப்பம் தொடர்பான காரணங்களால் இறந்தவர்களை விட, இந்த வாரம் அதிக மக்கள் வெப்பத்தால் இறப்பது அதிகரிக்கும் என பத்திரிகையாளர் கீரன் டிவைன் தெரிவிக்கிறார். இந்த மாதிரியானது ஜூலை 17 முதல் 22 வரையிலான வானிலை முன்னறிவிப்புகளை எடுத்து, முந்தைய வெப்ப அலைகளில் பதிவு செய்யப்பட்ட அதிகப்படியான இறப்புகளுடன் பொருந்தியது. 85 வயதிற்கு … Read more

கூட்டமைபின் சிலர் ரணிலுக்கு ஆதரவு – அமைச்சர் ஹரின் தகவல்

ஜனாதிபதித் தேர்தலுக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டுவார் என தாம் நம்புவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், “இது ஒரு இரகசிய வாக்கெடுப்பு, ஐக்கிய மக்கள் சக்தியின் பல உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கத் தீர்மானித்துள்ள போதிலும், அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பார்கள். பதில் ஜனாதிபதி … Read more