சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று முதல் எரிபொருள்

QR குறியீட்டு முறையின் கீழான தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass) எரிபொருள் விநியோகத் திட்டம், எதிர்வரும் ஜூலை 25 முதல் நடைமுறைப்படுத்தப்பவுள்ளது. இந்த திட்டத்தில் இன்று மாலை வரை 20 இலட்சம் பேர் பதிவு செய்திருப்பதாக மின் சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass)  தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று முதல் எரிபொருள் விநியோகப்படுவதாக- அமைச்சர் காஞ்சன விஜேசேகர … Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகத்தை மேற் கொள்ளமுடியாத நிலை

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்துண்டி மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக 24 மணி நேரமும் சீரான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதனால் முன் அறிவித்தல் இன்றி நீர் விநியோக துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பூநகரி நீர் வழங்கல் திட்டமானது கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அதிக தொலைவில் இருப்பதன் காரணமாக அங்கு தேவையான நீரை விநியோகிப்பதில் ஏற்படுகின்றசிரமங்கள் காரணமாக தினமும் காலை … Read more

போராட்டக்காரர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்த கோடிக்கணக்கான பணம்! பொய்யான தகவல் என்று அறிவிப்பு

காலி முகத்திடலில் நடத்தப்படும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நான்கு போராட்டக்காரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வழங்கப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு போராட்டக்காரர்கள்  நான்கரை கோடி ரூபா பெற்றதாக சுமத்தப்படும்  குற்றச்சாட்டு  பொய்யானது என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளனர். புதிதாக  ஆரம்பிக்கப்பட்ட கணக்கில் பணம்  கொழும்பு காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சமூக ஊடக ஆர்வலர்களான ரட்டா, திலான் மற்றும் கொனார ஆகியோர் கொழும்பு யூனியன் பிளேஸில் அமைந்துள்ள அரச … Read more

பதிவு செய்யுமாறு இந்தியாவில் உள்ள இலங்கை மாணவர்களிடம் கோரிக்கை

சென்னையில் உள்ள இலங்கையின் துணை தூதரகமும் , மும்பையில் உள்ள இலங்கை துணைத் தூதரகமும் இணைந்து தற்போது இந்தியாவில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களின் விபரங்களைச் சேகரிக்கவும், தொடர்புடைய தரவுத்தளங்களைப் புதுப்பிக்கவும் திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் இலங்கை மாணவர்களுக்கான உரிய பதவிகள் அவர்களை சென்றடையவும், அவர்களுக்கு தேவைப்படும் போது உதவிகளை வழங்கவும் எதிர்பார்த்துள்ளதாக இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ஆகவே குறித்த மாணவர்கள் அவர்கள் வசிக்கும் பிரதேசத்திற்கிணங்க இணைய இணைப்புகளைப் பயன்படுத்தி தங்களைப் பதிவுசெய்யுமாறு … Read more

மீண்டும் கொரோனா தொற்று: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

இலங்கையில் தற்போது கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது விடுத்துள்ளது. அத்துடன் நேற்றையதினம் (17) நாடு முழுவதும் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர். சமிதா கினிகே எச்சரிப்பு விடுத்துள்ளார். மேலும் தடுப்பூசி போடாதவர்களை விட தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று ஏற்படும் விகிதம் குறைவாக உள்ளதாகவும் தடுப்பூசி போட்டவர்கள் வைரஸிலிருந்து … Read more

இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின்படி எரிபொருள் விநியோகம்! புதிய முறை தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Update – 1) Changes to the last Digit of Number Plate for Fueling – Will be effective from 21st … Read more

பிரபல இயக்குனர் மணிரத்னம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி! மனைவி சுஹாசினி வெளியிட்ட தகவல்

பிரபல இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குநர் மணிரத்னம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார். அதில் முதல் பாகத்தை வெளியிடுவதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மணிரத்னம் காய்ச்சல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவருக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மணிரத்னம் மனைவி சுஹாசினி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மணிரத்னத்திற்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ளது. இதன் … Read more

இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி! மனைவி சுஹாசினி வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். தற்போது மணிரத்னம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார். இவர், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி, ரோஜா, பம்பாய், இருவர், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால்,அலைபாயுதே, ஆய்த எழுத்து, குரு, ராவணன், ஓ காதல் கண்மணி ஆகிய படங்களை இயக்கி இந்திய சினிமாவில் தனிக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.  பொன்னியின் செல்வன் படத்தை வெளியிடுவதற்கான  பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், … Read more

ஜனாதிபதி தெரிவில் திடீர் திருப்பம் – பின்வாங்கும் வேட்பாளர்

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நான்கு வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய தயாராக உள்ளனர். வேட்பாளர்களில் பதில் ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் உள்ளார். நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தமது ஜனாதிபதி வேட்பாளரே தீர்வுகளை வழங்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தெரிவு ஜனாதிபதி வேட்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரும் இன்று வேட்புமனுக்களை சமர்ப்பிக்க … Read more

பாராளுமன்றத்தில் ஜனாதிபதித் தேர்தல்

பாராளுமன்றத்தில் நடைபெறப்போவது என்ன? சரியாகத் தெரிந்துகொள்ள   இந்நாட்டின் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பில் இதற்கு முன்னர் ஒருமுறை அனுபவம் இருக்கின்றபோதும் இம்முறை இது விசேடமாகக் காணப்படுகிறது. இதற்கு முன்னர் 1993ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச மறைந்ததைத் தொடர்ந்து அப்போதைய பதில் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க, பிரேமதாசவின் எஞ்சிய காலத்துக்காக வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். ஆனால் இம்முறை வேட்பாளர்கள் சிலர் போட்டியிட இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருப்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியிருக்கும். அப்படியாயின் அது எமது … Read more