ஜனாதிபதிப் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழிவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமான ஜனாதிபதிப் பதவிக்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இன்று (19) பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டன. அதற்கமைய, பதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அனுரகுமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் இவ்வாறு முன்மொழியப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்க்கட்சித்தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) … Read more