போராட்டத்தின் போது திருடப்பட்ட 50 கண்ணீர் புகை குண்டுகளுடன் சந்தேக நபர் கைது

ஜூலை 13ஆம் திகதி பொல்துவ சந்தியில் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்துஇ ஆர்ப்பாட்டக்காரர்களால் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 50 கண்ணீர் புகை குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் வெலிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று (17) ஒபேசேகரபுர நாணயக்கார மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து பொரளை கோதமி வீதியில் உள்ள அவரது தற்காலிக இல்லத்தில் இருந்து 50 கண்ணீர் புகை … Read more

வவுனியா மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை அறுவடை ஆரம்பம்

வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 12,000 ஏக்கர்களில் மேறகொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கை அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் அறுவடைக்கு 20 லீற்றர் டீசல்  வழங்குவதற்கான நடவடிக்கைகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்முறை  சேதன பசளையை பாவித்தே சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அறுவடை சற்று குறைந்த போதும் ,சந்தையில் நெல் விலை அதிகரித்துக் காணப்படுவதன் காரணமாக தமக்கு அதிக இலாபம் கிடைப்பதாக பிரதேச விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் செல்லும் வரை கோட்டாபயவிடம் பேசினேன் – ரணில் விக்ரமசிங்க

இலங்கையின் நிதி நெருக்கடி பற்றிய உண்மைகளை நாட்டின் முன்னைய நிர்வாகம் மூடிமறைத்துள்ளதாக  பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் உண்மையைச் சொல்லவில்லை எனவும் இலங்கை திவால் நிலையை அடைந்துள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிஎன்என் செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ச கடந்த வாரம் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க … Read more

எரிபொருள் அட்டையை பெற்றவர்களுக்கான செய்தி…

தேசிய எரிபொருள் அட்டையை பெற்றுக்கொள்ள பதிவு செய்தவர்கள், எரிபொருள் ஒதுக்கீட்டை அறிந்து கொள்ள விசேட நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. FUEL BAL இடைவெளி வாகன இலக்கம் (உதாரணமாக: ABC 1234) என டைப் செய்து 076 6220 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ் செய்தி SMS அனுப்புவதன் மூலம் எரிபொருள் இருப்புத் தொகையை அறிந்து கொள்ள முடியும். அத்துடன் பொதுமக்கள் www.fuelpass.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று தேசிய எரிபொருள் அட்டையை பெறுவதற்கு பதிவு செய்ய முடியும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதே தமது நம்பிக்கை என்றும் அதற்கு அனைவரும் உடன்பாடு தெரிவித்தால்  பிரித்தானிய பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்வது தமது எதிர்பார்ப்பாகும் என்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நியாயமான அக்கறையுடன் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து பிரச்சினைகளுக்கான தீர்வை காண முடியும் என்று தெரிவித்த அவர் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் சக்திகள் சில சமூகத்திற்குள் இருப்பதாகவும் கூறினார். பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து, … Read more

பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகள் குறித்து சிஐடி விசாரணை ஆரம்பம்

பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் தலைமையகம், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) பணிப்புரை விடுத்துள்ளது. அவர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு தவறான பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்கள் மூலம் சில நபர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தங்கள் கொடுத்து அடுத்த ஜனாதிபதியை சுயமாக தெரிவு செய்வதற்கான உரிமைக்கு இடையூறு விளைவித்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். … Read more

கோட்டாபயவிற்கு எதிராக மலேசிய தமிழர்கள் போராட்டம்(Photo)

சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மலேசிய தமிழர்கள் அணிதிரண்டு குரல் எழுப்பியுள்ளனர். தலைநகர் கோலாலபம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் முன்னால் இவர்கள் அணிதிரண்டுள்ளனர். பினாங்கு மாநில துணை முதல்வர் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுப் பிரதிநிதி பேரா.இராமசாமி தலைமையில் அணிதிரண்ட தமிழர்கள், கோட்டாபயவை சிங்கப்பூரை விட்டு வெளியேற்றி சர்வதேச நீதிமன்றிடம் கையளிக்க வேண்டும் என்ற முழக்கத்தினை எழுப்பியுள்ளனர். மலேசிய தமிழர்களின் கோரிக்கை மலேசிய தமிழர் அரசியல் பிரதிநிதகளான … Read more

எரிபொருள் விநியோகம் குறித்து அமைச்சர் விளக்கம்

எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும் வரை சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என்று கூறப்பட்ட போதிலும், மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் காத்துக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. வரிசையில் நிற்கும் வாகனங்கள் அகற்றப்பட்டதன் பின்னரே ,அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்… எதிர்கால எரிபொருள் விநியோகத்தில் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை மற்றும் வாகன … Read more