ரணிலை பதவியில் இருந்து விரட்டும் நடவடிக்கைகள் தீவிரம்

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு வலியுறுத்த எதிர்வரும் இரண்டு நாட்களில் தீவிர நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்தார். இன்று முதல் தங்கள் அருகில் உள்ள நகரங்களில் போராட்டம் நடத்துமாறு மக்களை கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடே போராட்டக் களமாக மாறியிருப்பதால் பதில் ஜனாதிபதியும் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். … Read more

இம்மாதத்தில் லிற்றோ காஸ் விநியோகத்தில் 50 வீதத்தை நிறைவு செய்யமுடியும்

இந்த மாத இறுதியளவில் நாட்டில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் லிற்றோ காஸ் விநியோகத்தில் 50 வீதத்தை நிறைவு செய்யமுடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகம் தற்போது நாட்டின்பெரும்பாலான பிரதேசங்களில் இடம்பெறுகின்றன. மேல் மாகாணத்தில் எரிவாயுவின் தேவை குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களுக்கு லிற்றோ காஸைவிநியோகிக்கும் நடவடிக்கை 3 நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக லிற்றோ காஸ்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.  

ஜி-7 நாடுகளின் ஒன்றியம் ,உலக வங்கி இலங்கைக்கு 14 மில்லியன் டொலர் நிதி உதவி

ஜி-7 நாடுகளின் ஒன்றியம் மற்றும் உலக வங்கி ,இலங்கைக்கு 14 மில்லியன் டொலர் உதவி வழங்கியிருப்பதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உணவு பிரச்சினையை தீர்ப்பதற்கே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இணையவழி ஊடாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே பதில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் உர இறக்குமதி தடையின் காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இலங்கையின் அரிசி தேவை 20 மில்லியன் மெட்ரிக் தொன் களாகும் . ஆனால் … Read more

தடுப்பூசி ஏற்றிக்கொண்டதால் கொரோனா தொற்று பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை

மக்களின் அன்பு மற்றும் மருத்துவர்களின் கனிவால் தாம் நலமுடன் பணிகளை தொடர்வதாகவும் நாளை மருத்துவமனையிலிருந்து வெளியேற உள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 14 ஆம் திகதி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் நலமடைந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு மக்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும் முதலமைச்சர் … Read more

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இன்று (17) ஒரே நாளில் 2,316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி இருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அடங்கிய விவரத்தை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுவருகிறது. அதன்படி, இன்று ஒரே … Read more

2022 ,2023 ஆம் ஆண்டுகளில் உலகப் பொருளாதார வளர்ச்சி மேலும் வீழ்ச்சியடையும்

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் உலகப் பொருளாதார வளர்ச்சி மேலும் விழ்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, வளர்ந்து வரும் மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு வலுவான கொள்கைத் திட்டம் தேவை என்று நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டர்லினா ஜார்ஜீவா Kristalina Georgieva சுட்டிக்காட்டியுள்ளார். ஆகக்கூடிய கடன் மற்றும் வாழ்தாரக் கொள்கையைக் கொண்டுள்ள நாடுகளின் பொருளாதாரத்திற்கு இலங்கை எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்ட முடியுமென்றும்  முகாமையாளர் தெரிவித்துள்ளார். … Read more

காலாவதியாகும் நிலையில் பெருந்தொகை கோவிட் தடுப்பூசிகள்

நாட்டில் பெருந்தொகை கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் எட்டு மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் எதிர்வரும் மூன்று வார காலப் பகுதியில் காலாவதியாகும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நான்காம் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டும் மக்கள்  நாட்டின் மொத்த சனத் தொகையில் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலானவர்கள் மட்டும் நான்காம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மொத்தமாக 13000 பேர் மட்டுமே நான்காம் கோவிட் தடுப்பூசி … Read more

ஜனநாயக ஆட்சியைப் பாதுகாக்க பொது நலவாய அமைப்பு அழைப்பு  

பொது நலவாய அமைப்பு சாசனத்தின் விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்க, ஜனநாயக முறையில் ஆட்சி செய்தல், சட்டத்துறையின் சட்ட திட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்குமாறு, இலங்கையின் அரசியல் தலைவர்களுக்கு பொதுநலவாய செயலாளர் நாயகம் Rt Hon Patricia Scotland QC ஆலோசனை வழங்கியுள்ளார்.  அத்துடன் பொதுநலவாய அமைப்பில் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் அரசியலமைப்பு பற்றியும் நிர்வாகத்தை பாதுகாப்பதிலும் பலப்படுத்துவதிலும், பொருளாதார ஸ்திரத்தன்மையை எளிதாக்குவதிலும், இலங்கைக்கு தேவையான முழு ஆதரவினை வழங்குவதற்காக பொதுநலவாய செயலகம் அர்ப்பணிப்புடன் … Read more