இலங்கையில் ஜனநாயக வழிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான ஒரு கட்டமைப்பின்  மூலமான துரிதமான தீர்வுக்கு இந்தியா ஆதரவு

ஜனநாயக வழிமுறைகள் மற்றும் பெறுமானங்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகள், மற்றும் அரசியலமைப்பு ரீதியான ஒரு கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக செழுமை மற்றும் முன்னேற்றத்திற்கான தமது அபிலாசைகளை நனவாக்குவதற்கு எதிர்பார்த்திருக்கும் இலங்கை மக்களுடன் தொடர்ந்தும் துணை நிற்பதாக இந்தியா மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றது. 2022 ஜூலை 14ஆம் திகதி இடம்பெற்றிருந்த ஓர் ஊடக சந்திப்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர், இலங்கையின் தலைமைத்துவம் மற்றும் அரசாங்கம் தொடர்பான தற்போதைய நிலைப்பாடுகளுக்கு ஜனநாயக பெறுமானங்கள் மற்றும் வழிமுறைகள், நிறுவனமயப்படுத்தப்பட்ட … Read more

ரணில் ஜனாதிபதியானதும் இலங்கைக்கு கிடைத்த பெருந்தொகை டொலர்

ஜி-7 நாடுகளின் ஒன்றியம் இலங்கைக்கு 14 மில்லியன் டொலர் உதவி வழங்கியிருப்பதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சமகாலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பிரச்சினையை தீர்ப்பதற்கே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இணையவழி ஊடாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே பதில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பணவீக்கம் அதிகரித்தனால் உணவு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மூன்றாம் உலக நாடுகள் வரிசைக்குள் … Read more

ஜப்பானுடனான இருதரப்பு ஆலோசனைகளை இலங்கை நிறைவு….

வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன, ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய விவகாரப் பிரிவின் உதவி அமைச்சர் கானோ டேகிரோ தலைமையிலான ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட பிரதிநிதிகளுடனான இருதரப்பு ஆலோசனைகளில், 2022 ஜூலை 15ஆந் திகதி, வெள்ளிக்கிழமை ஈடுபட்டார். மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை கடற்படை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கைத் … Read more

கல்லொழுவை அல் – அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு கருத்தரங்கு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு, தமக்கு உகந்த கல்வித் துறையைத் தெரிவு செய்ய வழி காட்டும் செயலமர்வு , அகில இலங்கை ஜம் – இய்யத்துல் உலமாவின் வழி காட்டலில், இன்று (17) ஞாயிற்றுக் கிழமை காலை 08 மணி முதல் கல்லொழுவை அல் – அமான் முஸ்லிம் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெறும். கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை இதனை அறிவித்துள்ளது. இச்செயலமர்வில், இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதி … Read more

எதிர்வரும் புதன்கிழமை புதிய ஜனாதிபதி தெரிவு

பாராளுமன்ற கட்சித் தலைவர்களால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய, எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தின் ஊடாகத் தெரிவுசெய்யப்படவுள்ளார். வாக்கெடுப்பு எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இதற்கான வேட்புமனுவை பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொள்ள இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். இதேவேளை, எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது பற்றிய இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்சிரஸ் அறிவித்துள்ளது. எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிப்பதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. பதில் … Read more

விசேட நகர்வுக்காக சரத் வீரசேகர! சவேந்திர சில்வாவை களத்தில் இறக்கும் ரணில் – இராணுவ ஆய்வாளர் தகவல்

ஒவ்வொரு துறையிலும் யார்யாரை தெரிவு செய்ய வேண்டுமோ அவர்களை தெரிந்தெடுத்து, எந்த துறையை நகர்த்த வேண்டும் என்பதை துல்லியமாக கணிப்பிட்டு செயற்படுவதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு விடயங்கள், அவர்களுக்கான மேலதிகமான விடயங்களை கையாள்வதற்கு உத்தியோகப்பற்றற்ற முறையில் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவை, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்திருப்பதாக கொழும்பு வட்டார … Read more