எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுத் திட்டம் ஆரம்பம்

புதிய நடைமுறையின் கீழ் ,தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்கான இணையதளம்  http://fuelpass.gov.lk  என்பதாகும். இந்த நடைமுறையின் கீழ் பதிவை மேற்கொண்ட பின்னர் ,சிபேட்கோ அல்லது லங்கா IOC எரிகொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் வாராந்தம் தேவையான எரிபொருள் கோட்டாவை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கங்சன விஜேசேகர தெரிவித்தார். தேசிய அடையாள அட்டை இலக்கம், வாகன Chassis இலக்கம் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய QR … Read more

மீண்டும் வருவேன் – கோட்டாபய அதிரடி அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினாலும் தொடர்ந்தும் சேவையாற்றுவேன் என, கோட்டாபய தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  இன்று நாடாளுமன்றம் கூடிய போது சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட பதவி விலகல் கடிதத்தை அதன் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க வாசித்தார். ஜனாதிபதியாக பதவியேற்ற 3 மாதங்களுக்குள் கோவிட் தொற்று உலகம் முழுவதையும் பாதித்துள்ளது. அந்த நேரத்தில் இலங்கையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க … Read more

ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களின் கைரேகைகளை சேகரிக்கும் அதிகாரிகள்

அண்மையில் இடம்பெற்ற போராட்டங்களின் காரணமாக அலரி மாளிகைக்கு ஏற்பட்ட  சேதங்கள் தொடரபில் விசாரணகைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  கொள்ளுபிட்டி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று இந்த இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  ஆர்ப்பாட்டக்காரர்களின் கைரேகைகள் சேகரிப்பு   இதேவேளை, காலி முகத்திடல்  மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தொடர்ந்தும் அங்கேயே தொடர்கின்றனர். அவர்கள் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் இருந்து வெளியேறிய பின்னர், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவர்களது கைரேகைகளை எடுத்துள்ளனர். அத்துடன் போராட்டக்காரர்கள் அலரி மாளிகையில் இருந்து … Read more

ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 2022 யூலை 14 ஆம் திகதி முதல் நடைமுறைக்குவருமாறு ஜனாதிபதிப் பதவியினை இராஜினாமாச் செய்திருப்பதனால் ஜனாதிபதிப் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் 05வது உறுப்புரைக்கு அமைய பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக இன்று (15) பாராளுமன்றத்தில் அறிவித்தார். அரசியலமைப்பின் 38(1) (ஆ) உறுப்புரைக்கு அமைய, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்தமை … Read more

ஒன்பது இலட்சம் இலங்கை மக்களின் உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் சராசரியாக ஒன்பது இலட்சம் குடும்பங்கள் தங்களது அன்றாட உணவைப் பெற்றுக்கொள்ளக் கூட வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் உள்ள 17 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் 9 இலட்சம் குடும்பங்கள் ஒரு வேளை உணவு அல்லது இரண்டு வேளை உணவு உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள இதனை  தெரிவித்துள்ளார்.  மூடப்படும் சிறுதொழில் நிறுவனங்கள்  இதேவேளை, … Read more

கடந்த 6 மாதங்களில் நீர்வெறுப்பு நோயினால் 12 பேர் உயிரிழப்பு

கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் நீர்வெறுப்பு நோயினால் (விசர்நாய்க்கடி நோயினால்) உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பொது சுகாதார கால்நடை சேவை பணிப்பாளர் டாக்டர். எல்.டி. கித்சிரி இது தொடர்பாக மேலும் கூறுகையில், ’95 வீதமான நோய்த்தொற்றுகள் நாய் கடிப்பதனால் ஏற்பட்டுவதாகவும், நாய்க்குட்டிகள் மூலம் குறித்த நோய் பரவி அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களில் 5 இலட்ச நாய்களுக்கு இலவசமாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 30 ஆயிரம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து … Read more

கோட்டாவின் வெளியேற்றத்தின் பின்னணியில் இந்திய -மேற்குலக புலனாய்வுப் பிரிவின் கரங்கள்?

 இலங்கையின் ஆட்சியில் இருந்து கோட்டாபாய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டது இலங்கையின் மக்களுக்கும், அவர்களினது உரிமைக்கான போராட்டத்திற்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை. இந்த விடயத்தில் இலங்கை மக்களின் அர்ப்பணிப்பையோ தியாகத்தையோ யாருமே கேள்விகேட்கமுடியாது. ஆனால், கோட்டாவின் வெளியேற்றத்தின் பின்னணியில் வேறு தேசங்களினது புலனாய்வுப் பிரிவின் கரங்கள் இருந்ததா என்கின்ற கோணத்திலும் நாம் பார்வையைச் செலுத்தவேண்டியது அவசியமாகின்றது. கோட்டாபாயவை வெளியேற்றுவதற்காக நடைபெற்ற ஆர்பாட்டங்களின் காட்சிகள், திடீர் திடீரென்று களத்தில் ஏற்பட்ட காட்சி மாற்றங்கள்- போன்றனவற்றை அடிப்படையாகவைத்து … Read more

ஜனாதிபதி வெற்றிடம்: அறிவிப்பதற்காக பாராளுமன்றம் இன்று கூடுகிறது

அரசியல் அமைப்பின்படி ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான விசேட அறிக்கையை வெளியிடுவதற்காக பாராளுமன்றம் இன்று முற்பகல் பத்து மணிக்குக் கூடவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நேற்று முன்தினம் (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் இதனையடுத்து ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும். அதன்படி, ஜனாதிபதி வெற்றிடம் தொடர்பில் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இன்று அறிவிக்கவுள்ளார். நேற்றுக் கூடிய கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் … Read more

பதவிப் பிரமாணம் செய்து சில மணித்தியாலங்களில் காயமடைந்த இராணுவ வீரர்களை பார்வையிடுவதற்காக கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு பதில் ஜனாதிபதி விஜயம்

கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வெள்ளிக்கிழமை (15) முதல் இலங்கையின் பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே புதன்கிழமை (13) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்திற்கருகில் ஆர்பாட்டகாரர்களின் செயல்களினால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இராணுவ வீரர்களைப் பார்ப்பதற்காக கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கு விஜயம் செய்தார். இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொழும்பு இராணுவ மருத்துவமனை வளாகத்தின் நுழைவாயிலில் புதிய பதில் ஜனாதிபதியை வரவேற்றனர். … Read more

எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என அறிவிப்பு (Video)

நாடாளுமன்ற சபை அமர்வு இன்று காலை பத்து மணிக்கு ஆரம்பமாகியிருந்தது. இதன்போது கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியமை தொடர்பில் சபையில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் அந்த பதவி வெற்றிடமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்றில் இன்று வெளியாகவுள்ள அறிவிப்புகள்! பலப்படுத்தப்படும் பாதுகாப்பு  Source link