இலங்கையிலிருந்து நான்கு நாடுகளுக்கு தபால் சேவைகள் நிறுத்தம்

அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கான தபால் ஏற்றுமதிகளை ஏற்றுக்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கைக்கான விமான சேவைகள் இடைநிறுத்தம் மற்றும் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள. விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு அஞ்சல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு வெளிநாட்டு விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். எவ்வாறாயினும், போதுமான எரிபொருளை வழங்குவதில் உள்ள சிரமம் … Read more

நிலையான அரசாங்கமொன்று இல்லாவிட்டால் இலங்கை செயலிழந்துவிடும் – மத்திய வங்கி ஆளுநர்  

நிலையான அரசாங்கமொன்றை விரைவில் அமைக்கத் தவறினால், இலங்கை செயலிழந்த நிலைக்கு தள்ளப்படும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்தியாவசிய எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்ளவது நிச்சயமற்ற சூழ்நிலையாக மாறியுள்ளது என்று பி பி சி க்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்க உள்ள கடன் தொகையை பெறுவது கூட தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் … Read more

பிரதமர் , பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பதில் ஜனாதிபதியாக ,பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று (14) பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நேற்றைய தினம் (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் இன்றைய தினம் (15) உத்தியோகபூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு யூரியா உரம்

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு யூரியா உரம் மற்றும் அறுவடைக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (14) நடைபெற்ற விவசாயிகளுடனான கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் காலம் பிந்திய விதைப்புகளை மேற்கொண்டுள்ள ஏறத்தாழ ஆறாயிரம் ஏக்கர் வரையான நிலப்பரப்புக்கு யூரியா உரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு உரிய … Read more

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கியின் அறிவிப்பு

இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 357.94 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 368.52 ரூபாவாக காணப்படுகிறது. ஸ்ரேலிங் பவுண்ட் ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 420.74 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை விற்பனை பெறுமதியானது 437.77 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குவைத் தினார் மற்றும் கட்டார் ரியால் குவைத் தினாரின் பெறுமதியானது 1172.47 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் … Read more

நாளை மறுதினம் தாங்கிய கப்பல்கள்

எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி எரிபொருள் தாங்கிய 04 கப்பல்கள் நாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதில் 40 ஆயிரம் மெட்ரிக்தொன் அடங்கிய மூன்று டீசல் கப்பல்களும்இ 35 ஆயிரம் மெட்ரிக்தொன் ஒக்டன் 92 ரக பெற்றோல் இறக்குமதியும் எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது

உலக அரசியல் வரலாற்றில் முக்கியத்தும் பெறும் இலங்கையின் புதிய ஜனாதிபதி

இலங்கையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறை உலக அரசியல் வரலாற்றில் முக்கியமானதாக காணப்படும் என  சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.  ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.  ஜனாதிபதியின் அதிகாரம் பிரதமரிடம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வழிமுறைகள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி தெரிவு நிறைவு பெறும் வரை ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள்,கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் ஆகியவற்றை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் செயற்படுத்துவார். இதேவேளை, தென்னாசியாவில் பழமையான ஜனநாயக நாடு என பெருமை … Read more

நாட்டின் நெருக்கடி தீர்க்க முடியாத பிரச்சினையல்ல: சரத் பொன்சேகா

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் யோசனை முன்வைத்தால், ஜனாதிபதி பதவியை ஏற்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவியை ஏற்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் விரும்பினால், பதவியை ஏற்க தயார். அனைத்தையும் கட்சியின் தலைவரிடம் கூற வேண்டிய அவசியமில்லை அப்படியான அழைப்பு வந்தாலும் அனைத்தையும் ஓடி சென்று ஐக்கிய மக்கள் … Read more

ஆர்ப்பாட்டக்காரரின் கோரிக்கைகள் நியாயமாகக் கையாளப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்வைக்கப்படுகின்ற நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கான புறச் சூழல்களை உருவாக்கி, குறித்த விவகாரம் நியாயமாக அணுகப்பட வேண்டும் என்று கடற்றொழில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று (14) கலந்துரையாடிய போதேஅமைச்சர் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் பிரஸ்தாபிக்க இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு மக்களினால் முன்வைக்கப்படுகின்ற … Read more

பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்

அனைத்து அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான விடுமுறை, ஜூலை 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இதுதொடர்பான தீர்மானம் இன்று (15) மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.