நிரந்தர தீர்வு அவசியம்! மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமின்மையை போக்கவும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உறுதிப்படுத்தும் அதே வேளையில் சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளையும் மீட்டெடுக்க உறுதியான நிரந்தர தீர்வுகள் இருக்க வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. நாட்டின் ஊழல் மற்றும் தோல்வியுற்ற அரசியலை மாற்றுவதற்கும், நாட்டில் நிலவும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், தற்போதைய எரிபொருள், உள்நாட்டு எரிவாயுவைக் கடப்பதற்கான வழியைக் காண நாட்டு மக்கள் விரும்புவதாக GMOA … Read more

கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கானஇ நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு2022 ஜூலை 15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ … Read more

நாளை (16) பாராளுமன்றம் கூடும்: சபாநாயகர் அறிவிப்பு

ஜனாதிபதி பதவியிலிருந்து திரு கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளதை அறிவிப்பதற்காக , நாளை (16) பாராளுமன்றம் கூடும் என்று சபாநாயகர் மஷிந்த யாப்பா அபேவர்தன இன்று (15) அறிவித்தார். ஜனாதிபதி திரு கோட்டாபய ராஜபக்சவின் ,ராஜினாமா ஜூலை 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என சபாநாயகர் மேலும் கூறினார். கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா தொடர்பாக அறிவிப்பதற்காக இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ,புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான அரசியலமைப்புச் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்படுவதாகவும் அவர் … Read more

ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ,ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை

ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை.ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை. அரசியலமைப்பின் 38வது சரத்தின் (1) உப சரத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 40வது சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமைக்கு அமைய பதவியை வறிதாக்கிச் செல்லும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுறாது எஞ்சியுள்ள காலத்துக்கு மாத்திரம் அப்பதவியை வகிப்பதற்கு பாராளுமன்றத்தினால் அதிலுள்ள உறுப்பினர்களில் ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்ந்தெடுப்பதற்குத் தகுதி உள்ள ஒருவர் ஜனாதிபதியாகத்  தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதன்போது … Read more

மாலைதீவு அதிசொகுசு ஹோட்டலில் பதுங்கியிருந்த கோட்டாபய – 2 கப்பல்களுடன் பலத்த பாதுகாப்பு

மாலைதீவுக்கு தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர் தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளனர். அதுவரை மாலைதீவு அரசாங்கத்தின் ஆதரவுடன் அதி சொகுசு ஹோட்டலான Waldorf Astoria Maldives Ithaafushi இல் கோட்டாபய பாதுகாப்பாக தங்கியிருந்தார். மாலைதீவின் சக்திவாய்ந்த தொழிலதிபரும், அந்நாட்டு வெளியுறவு அமைச்சரின் நெருங்கிய நண்பருமான முகமது அலி ஜானாவுக்கு சொந்தமான ஹோட்டலியே கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருந்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அங்கு தங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதற்கு அந்த ஹோட்டலின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக … Read more

திரு.கோட்டாபய ராஜபக் ஷ தனது ஜனாதிபதி பதவியில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகியிருப்பதாக சபாநாயகர் அறிவிப்பு

திரு.கோட்டாபய ராஜபக்க்ஷ தனது ஜனாதிபதி பதவியில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகியுள்ளார். சபாநாயகர் மஷிந்த யாப்பா அபேவர்தன இன்று (15)  இதனை அறிவித்தார். திரு.கோட்டாபய ராஜபக் ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து தான் உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்வதாக நேற்று (14) கடிதம் மூலம் சபாநாயகர் மஷிந்த யாப்பா அபேவர்தவுக்கு அறிவித்திருந்தார்;. இந்த கடித்தின் உண்மைத்தன்மையையடுத்து சட்ட ரீதிலான நடவடிக்கைகளை ஆராய்ந்த பின்னர் இன்று நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் மஷிந்த யாப்பா அபேவர்தன மேற்கொண்டிருந்தார். அதற்கு அமைவாக … Read more

சில மாவட்டங்களில் பல தடவைகள் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஜூலை15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஜூலை 15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது  நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 … Read more

ஜூலை 9 சம்பவம்: பொதுச் சொத்துக்கள் , தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் தொள்பொருள் சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை

பொதுச் சொத்துக்கள், நாட்டின் பாரம்பரியச் சின்னங்கள் மற்றும் புராதனச் சின்னங்கள் என்பன சேதப்படுத்தப்படுவதையோ அல்லது திருடப்படுவதையோ தடுக்க தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்… 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வுகளாலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலைகளாலும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட தொல்பொருள் … Read more