தமிழக முதலமைச்சருக்கு கொரோனா

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று இன்று (14)தெரிவித்துள்ளது.  தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார் இந்த நிலையில் 2 நாட்கள் தனிமைபடுத்தி கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சென்னை, காவேரி மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில் அவர் … Read more

ஜனாதிபதி ,பதவியில் இருந்து ராஜினாமா: சபாநாயகருக்கு கடிதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம்  அறிவித்துள்ளது. சபாநாயகரின் ஊடக செயலாளர் திரு.இடுனில் அபேவர்தன,  இதுதொடர்பாக அறிக்கையொன்றை இன்று (14) மாலை வெளியிட்டுள்ளார்.  

இ. போ. டிப்போ மூலமாக மட்டக்களப்பு விவசாயிகளுக்கு மீண்டும் எரிபொருள்

மாவட்ட செயலகத்தின் தலையீட்டினால் இலங்கை போக்குவரத்து சபை டிப்போ மூலமாக விவசாயிகளுக்கு  எரிபொருள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – வவுணதீவு விவசாயிகள் இலங்கை போக்குவரத்து சபை டிப்போ முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மாவட்ட செயலகத்தின் தலையீட்டினால் இலங்கை போக்குவரத்து சபை டிப்போ மூலமாக விவசாயிகளுக்கு  எரிபொருள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக வவுணதீவு பகுதியில் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டது. மண்டபத்தடி மற்றும் ஆயித்தியமலை ஆகிய பகுதிகளில் அறுவடையை … Read more

மன்னாரில் இன்று லிட்ரோ எரிவாயு விநியோகம்

மன்னார் மாவட்டத்தில் இன்று (14) லிட்ரோ எரிவாயு ( LITRO GAS) வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் குறித்த எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. போக்குவரத்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மன்னாரில் பொதுவான ஒரு இடத்தில் வைத்து எரிவாயு விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக லிட்ரோ நிறுவன விநியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக ஒரு தொகுதி எரிவாயு சிலிண்டர்கள் இவ்வாறு இன்று மக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளன. … Read more

இலங்கை புலனாய்வுத் துறையின் தகவலால் சிக்கவுள்ள பலர்! அரசியல் ஆய்வாளர் மயூரன்(Video)

தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள்  தீவிர நிலையை அடைந்து ஜனாதிபதி மாளிகை முற்றுகை மற்றும் பிரதமர் அலுவலகம்  முற்றுகை என்ற அளவுக்குச் சென்றிருக்கின்றது என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் மயூரன் தெரிவித்துள்ளார்.   அதிலும் குறிப்பாக இலங்கையினுடைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் மாளிகை முற்றுகையிடப்பட்டுள்ளது எனவும்  சுட்டிக்காட்டியுள்ளார்.   எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  இலங்கை புலனாய்வுத் துறை பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், அந்த அறிக்கையில், இவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்களால் … Read more

துப்பாக்கிகளை கண்டுபிடிப்பதற்கான மேலதிக விசாரணைகள்

பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் நேற்று (13) இடம்பெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலால் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலினால் இராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும், அவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவாய பகுதியில் உள்ள இராணுவ … Read more

பதவி விலகுவது தொடர்பில் கோட்டாபயவின் புதிய அறிவிப்பு! சற்று முன்னர் வெளியான தகவல்

தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர்  தனது முடிவினை அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பான அறிவித்தலை சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவுக்கு கோட்டாபய  அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.  கோட்டாபயவின் விசேட அறிவித்தல் இதன்படி,  தனது பதவி விலகல் கடிதத்தை இன்றைய தினத்திற்குள் வழங்குவதற்கான  ஏற்பாடுகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.  அந்த கடிதத்தை பெற்றுக்கொள்ளும் முறைமை மற்றும் அதன் சட்டரீதியான  செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.  Source link