தமிழீழ விடுதலைப் புலிகளை பிளந்த ரணிலுக்கு இது மிகப்பெரும் சுலபம்! காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளை பிளந்த ரணிலுக்கு எமது போராட்டத்தையும் பிளப்பது சுலபம் என காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.  நாட்டில் நேற்றைய தினம் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் நேற்றிரவு நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது எனினும் இந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக நாடாளுமன்றத்தை கைப்பற்றும் முயற்சி முறியடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு காலிமுகத்திடல் பகுதியில் இருந்து கோட்டாகோகம போராட்டக்காரர்கள் நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளனர். காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற … Read more

கோட்டாபய ராஜபக்சவுக்காக சிங்கப்பூர் விமான நிலையத்தில் காத்திருக்கும் குழுவினர்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்காக சிங்கப்பூர் விமான நிலையத்தில் அதிகளவான ஊடகவியலாளர் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கிச் சென்றுள்ளதாக தரைவழி வட்டாரங்கள் மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் விமான நிலையத்தில் காத்திருக்கும் குழுவினர்  சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தினை அடுத்து கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியில் இருந்து நேற்று பதவி … Read more

அரச ஊழியர்களின் ஜூலை மாத சம்பளம் தொடர்பான அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கான ஜூலை மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.  தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமாக அரச ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான சம்பளத்தை வழங்க முடியாது என தகவல்கள் வெளியாகியிந்தன. எனினும், அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கான சூழல் இல்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு தேவையான பணம் பொதுவாக அந்தந்த நிறுவனங்களின் கணக்குகளில் வைப்பில் இருக்கும். இதுவரை எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லை எதாவது ஒரு நிறுவனத்தில் … Read more

கைப்பற்றியுள்ள இடங்களில் இருந்து வெளியேறி, அவற்றை உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள்

கைப்பற்றியுள்ள இடங்களில் இருந்து வெளியேறி அவற்றை உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு போராட்டக்கார்களிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கையொன்றை நேற்று (13) வெளியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமைதியான போராட்டங்களை தாம் அங்கீகரித்தாலும், சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு தமது சங்கம் ஆதரவளிக்காது என்றும் அந்த அறிக்கையில் சங்கம் சட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, கலவரச் சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என சங்கைக்குரிய ஓமல்பே சோபித தேரர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அமைதியான … Read more

நாடளாவிய ரீதியில் நடைமுறையிலிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் நிலவி வரும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு நேற்றைய தினம் ஊரடங்குச் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.  மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், நாடு முழுவதும் அவசர காலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று இரவு நாடாளுமன்றத்திற்கு அருகில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. நாடளாவிய ரீதியில் ஊரடங்கு … Read more

பிரதமர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடல்

நாட்டில் தற்பொழுது நிலவும் நெருக்கடி நிலையை தணிக்க ஒரு தீர்வாக பிரதமர் கூடிய விரைவில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என பாராளுமன்ற அலுவலகங்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற கட்சி தலைவர்களின் பங்குபற்றலில் நேற்று (13) பிற்பகல் பாராளுமன்றக் கட்டத் தொகுதியில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் குறித்து கௌரவ சபாநாயகர் விளக்கம் அளித்தார். நாட்டில் நிலவும் சூழ்நிலை தொடர்பில் கட்சித் தலைவர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், பாதுகாப்பு … Read more

நாட்டை சபாநாயகரிடம் ஒப்படையுங்கள்! சுயேட்சை கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கை

பிரதமர் உடனடியாக தனது பதவியை இராஜினாமா செய்து சபாநாயகரிடம் நாட்டை ஒப்படைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என சுயேட்சை கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த 9ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் கூடிய கட்சித் தலைவர்கள், பிரதமர் பதவி விலக வேண்டாம் என ஏகமனதாகக் கோரிய நிலையில், நாட்டில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், வன்முறையை நோக்கி நிலைமை உருவாகி வருவதை அவதானிக்கக் கூடியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனையடுத்து, பிரதமர் அலுவலகமும் செயற்பாட்டாளர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுயேட்சைக் கட்சிகள் வெளியிட்டுள்ள … Read more

கடந்த 6 மாதங்களில் வீதி விபத்துகள் காரணமாக 1,459 பேர் உயிரிப்பு

2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ,இடம்பெற்ற வீதி விபத்துகள் காரணமாக 1,459 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், 1,387 பாரிய வீதி விபத்துக்களில் 1,459 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் 3,326 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த காலகட்டத்தில், 4,309 சிறு விபத்துகளும், 2,229 விபத்துக்களில் … Read more

இலங்கைக்கான தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் கோரிக்கை

இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் புதன்கிழமை பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா மற்றும் பிற அவசரமற்ற பயணங்கள் ஊக்கமளிக்கவில்லை என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அரசியல் சூழ்நிலை குழப்பமடைந்துள்ளதுடன், பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலைமை மேலும் மோசமடை கூடும் என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் நியமனம் இதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள … Read more