கோட்டாபயவின் சிங்கப்பூர் விஜயத்தில் திடீர் திருப்பம் – தனியார் ஜெட் விமானத்திற்காக காத்திருப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு அரசாங்கத்திடம் தனியார் ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையிலிருந்து வெளியேறியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இன்று அதிகாலை மாலைதீவை சென்றடைந்தார். இந்நிலையில், இன்றிரவு மாலைதீவில் இருந்து SQ437 விமானம் மூலம் சிங்கப்பூர் செல்லவிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. உள்ளூர் நேரப்படி இன்றிரவு 23.35 மணிக்கு சிங்கப்பூர் செல்லவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறன நிலையிலேயே, தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச … Read more

நாடாளுமன்றத்திற்கு அருகில் பெரும் பதற்றம் – 35 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நாடாளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சந்தியில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக 35 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமனம் இந்நிலையில், பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், … Read more

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நடைமுறை! வெளியானது வர்த்தமானி

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  இதன்படி நாளை காலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரான அறிவிப்பு இதேவேளை, இன்று காலை மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டிருந்தார். அத்துடன் நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் … Read more

பிரதமர் ,ஜனாதிபதியாக செயற்படுவதற்கு அதிகாரங்களை வழங்குவதற்காக வர்த்தமானி அறிவிப்பு

நாட்டின் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபபிரதமர்க்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (13)வெளியிடப்பட்டுள்ளது  

சிங்கப்பூரில் தரையிறங்கிய பின்னரே கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் அனுப்பப்படும்! தற்போது வெளியான தகவல்

சிங்கப்பூரில் தரையிறங்கிய பின்னரே பதவி விலகல் கடிதத்தினை கோட்டாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்படுகின்றது.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவியும் இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவை சென்றடைந்தனர்.  சிங்கப்பூரில் தரையிறங்கிய பின்னரே பதவி விலகல் கடிதம் இந்தநிலையில் ஜனாதிபதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.  இலங்கை அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி டொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தகவல் வெளியிட்டிருந்தது. தற்போது, சிங்கப்பூரில் தரையிறங்கிய பின்னரே பதவி விலகல் கடிதத்தை … Read more

கோட்டாபயவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலைதீவு ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்ட இலங்கையர்கள்

புதிய இணைப்பு மாலைதீவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கையர்களை கைது செய்யும் நடவடிக்கையை மாலைதீவு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.  முதல் இணைப்பு (17 : 12 Pm) மாலைதீவில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாலைதீவில் உள்ள மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் சோலியின் வீட்டிற்கு அருகில் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனாதிபதியை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் … Read more

பதில் ஜனாதிபதியாக பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு

  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதால்இ அரசியலமைப்பின் 31ஃ1 சரத்திற்கு அமைய ஜனாதிபதியினால் பதில் ஜனாதிபதியாக் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார். இன்றைய தினத்திற்குள் தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்கவுள்ளதாக தெரிவிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்ததாக சபாநாயகர் விசேட அறிக்கையொன்றை விடுத்து இதனை தெரிவித்தார்.

'ஜனாதிபதி இன்று ராஜினாமா செய்வதாக என்னிடம் தெரிவித்தார்'

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ , இன்று பதவி விலகவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அறிவித்துள்ளார். இதற்கமைவாக , திட்டமிட்டபடி எதிர்வரும் 20ஆம் திகதி பாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு இடம்பெறும் என்று சபாநாயகர் குறிப்பிட்டார். 

பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொலிஸ் முப்படைகளை உள்ளடக்கிய குழு – பதில் ஜனாதிபதி அறிவிப்பு

பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் செயல்பட அனைத்து அதிகாரங்களும் குழுவுக்கு வழங்கப்படும் என்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) விசேட அறிக்கையொன்றை விடுத்து இந்த விடயங்களை … Read more

தூர இடங்களில் இருந்து கொழும்புக்கு வரும் ரயில்கள்…..

பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மேல்மாகாணத்தில் தற்போது பொலிஸ டிஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, அமைவாக, தூர இடங்களில் இருந்து கொழும்புக்கு வரும் ரயில்கள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.