தண்ணீருக்குள் மூழ்கி போட்டோ எடுக்கலாம்… அச்சத்தலான வாட்டர் ப்ரூப் ஸ்மார்ட்போன்கள் இவை தான்

Best Waterproof Phones: ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிப்போன நிலையில், மக்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளை மனதில் வைத்து, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், தினம் தினம் புதுப்புது மாடல்களை களம் இறக்குகின்றன. அந்த வகையில் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மதிப்பீட்டில் சிறந்து விளங்கும் போன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். நீர் பட்டால் பாதிக்கப்படாத, தண்ணீருக்குப் பயப்படாத தொலைபேசியை வாங்க விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில், பல போன்கள் உள்ளன. நீருக்கடியில் புகைப்படம் எடுக்க அல்லது வீடியோக்களை எடுக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு,ஏற்ற … Read more

அதிநவீன விவோ வி40 5ஜி போன் மார்க்கெட்டுக்கு வந்தாச்சு! அறிமுகச் சலுகை விலை எவ்வளவு தெரியுமா?

vivo v40 5g :விவோ நிறுவனம் அண்மையில் வெளியிட்ட Vivo V40 5G போனின் விற்பனை இன்று (ஆகஸ்ட் 19, 2024) தொடங்கியது. இ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட்டில் மதியம் 12 மணிக்கு இந்த விற்பனை தொடங்கிய விற்பனையில் சிறந்த தள்ளுபடி சலுகைகளில் விவோ வி40 5ஜி போன்கள் கிடைக்கின்றன.  விவோ வி40 5ஜி ஸ்மார்ட்போனில் AMOLED டிஸ்ப்ளே மற்றும் குவால்காமின் சக்திவாய்ந்த செயலி பொருத்தப்பட்டுள்ளது.  50MP கேமராவுடன், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரிகொண்ட விவோ … Read more

82 நாட்களுக்கு வெறும் 485 ரூபாய் தான்! BSNL ப்ரீபெய்டின் சூப்பர் ப்ரீபெய்ட் பிளான்!

நாட்டின் ஒரே அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், மலிவான விலையில் அருமையான மலிவு ரீசார்ஜ் திட்டங்களுக்கு பெயர் பெற்றது. சமீபத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ரீசார்ஜ் பிளான்களின் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், பிஎஸ்என்எல் திட்டங்களை நோக்கி மக்களின் கவனம் திரும்பியது.   BSNL ரீசார்ஜ் திட்டம் நாட்டில் கோடிக்கணக்கானவர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். ஒரு காலத்தில் பிஎஸ்என்எல் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், காலப்போக்கில் தனியார் நிறுவனங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முன்னேறின. சமீபத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் … Read more

எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடி கொடுக்கும் அமேசான்! இன்றே கடைசி! முந்துங்கள்…

டெல், சாம்சங், ASUS, Noise, GoPro மற்றும் பல போன்ற பிரபலமான பிராண்டுகளிலிருந்து நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், லேப்டாப்கள், ஹெட்ஃபோன்கள், டேப்லெட்டுகள், கேமராக்கள், கணினி தொடர்பான பொருட்கள் என மின்னணு சாதனங்களுக்கு சிறந்த சலுகைகளை அமேசானின், மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் தருகிறது.  யெஸ் பேங்க், ஜே&கே வங்கி, ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, எச்எஸ்பிசி, ஒன்கார்டு மற்றும் ஐடிஎஃப்சி கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். ASUS TUF கேமிங் F17 லேப்டாப் … Read more

Airtel: குடும்பத்தினருக்கான ஒரே பிளான்… 190GB டேட்டா உடன்… OTT இலவச சந்தா

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம்: ஏர்டெல் நாட்டின் பிரபலமான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று. ஏர்டெல்லுக்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர். சில காலத்திற்கு முன்பு, ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல் தனது ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தியது. அதன் பிறகு மொபைல் வாடிக்கையாளர்கள் பலர் மலிவான ரீசார்ஜ் திட்டங்களை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  ஏர்டெல் அதன் பயனர்களின் வெவ்வேறு விதமான தேவைகளுக்கு ஏற்ப, வெவ்வேறு பிரிவுகளில் பல வகையான திட்டங்களை வழங்குகிறது. அவை வரம்பற்ற … Read more

வாட்ஸ்அப் தரவுகள் மற்றும் செய்திகளை வேறொரு போனுக்கு மாற்ற சுலபமான வழிமுறை!

அவ்வப்போது, நாம் நமது போனை பல காரணங்களுக்காக மாற்றுகிறோம். அப்போது, ஒரு போனில் உள்ள டேட்டாக்களை அதாவது தரவுகளை புதிய போனுக்கு மாற்ற வேண்டும். அதிலும், ஐபோனை விட்டுவிட்டு ஆண்ட்ராய்டு போனுக்கு மாறினால், உங்கள் வாட்ஸ்அப் அரட்டைகள் நீக்கப்படுமா அல்லது அதற்கு என்ன நடக்கும் என்று கவலை எழும். ஆனால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இப்போது உங்கள் பழைய மொபைலில் இருந்து புதிய மொபைலுக்கு அனைத்து அரட்டைகளையும் எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.  உடனடி செய்தியிடல் செயலியான வாட்ஸ்அப், உலகம் முழுவதும் … Read more

வாட்ஸ்அப் ஸ்பேம் மெஸ்சேஞ் தொல்லை இனி இருக்காது… வருகிறது புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலி, தகவல் பரிமாற்றம் மற்றும் ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பும் மீடியமாக மட்டுமல்லாமல், ஆடியோ வீடியோ அழைப்புகள் என அதனை பயன்படுத்தும் பயனர்கள் கோடிக் கணக்கில் உள்ளனர். இந்நிலையில், சாதாரண தொலைபேசி அழைப்புகளில் வரும் ஸ்பேம் கால்களை போலவே, வாட்ஸ் அப் செயலியிலும், மிக அதிகமாக ஸ்பேம் மெஸ்சேன்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தலும் உள்ளது.  வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அம்சங்களை வெளியிட்டு வரும் நிலையில், விரைவில் ஸ்பேம் தகவல் … Read more

ஸ்மார்ட்போனை 4 நிமிடங்களில் முழு சார்ஜ் செய்யும் சூப்பர் சார்ஜர்! 'நோ-வெயிட்' Realme சார்ஜிங்!!

Realme அதன் அடுத்த தலைமுறை 320W சார்ஜிங் தொழில்நுட்பத்தை வெளியிட்டது, இதுதான் உலகின் அதிவேக சார்ஜிங் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் Realme GT3 உடன் 240W சார்ஜரை அறிமுகப்படுத்திய ஒரு வருடத்திற்குப் பிறகு அதிவேக சார்ஜரை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய துரித சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட சார்ஜரின் பெயர் என்னவாக இருக்கும் என்பதை ரியல்மி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. டிரெயில்பிளேசிங் தொழில்நுட்பம் டிரெயில்பிளேசிங் தொழில்நுட்பம், உலகின் அதிவேக சார்ஜிங் பவர் … Read more

டிஜிட்டல் டைரி 7: மீட்டெடுக்கப்பட்ட முதல் தேடுபொறி ‘ஆர்ச்சி’

‘ஆர்ச்சி’ (Archie) என்பது இணைய உலகின் முதல் தேடுபொறி (search engine). இணையத்தில் இருந்து மறைந்துவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், ஆர்ச்சி தேடுபொறியின் சுவடுகளைத் தேடிக் கண்டெடுத்து மீட்டுருவாக்கம் செய்துள்ளனர் தொழில்நுட்ப வல்லுனர்கள். ஆர்ச்சியின் வரலாறு: ஆலன் எம்டேஜ் எனும் கல்லூரி மாணவரால் 1989ஆம் ஆண்டு ஆர்ச்சி தேடுபொறி உருவாக்கப்பட்டது. அப்போது கூகுள், இணையதளங்களின் பயன்பாடு இல்லை. ‘வேர்ல்டு வைடு வெப்’ என அறியப்படும் வைய விரிவு வலை 1991இல் உருவானபோதுதான், முதல் இணையதளம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு … Read more

இந்தியாவில் ஏஐ பயன்பாட்டை விரிவுபடுத்த கூகுள் திட்டம்

புதுடெல்லி: கூகுளின் அங்கமான டீப்மைண்ட் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை பிரிவு இயக்குநர் அபிஷேக் பாப்னா கூறியதாவது: இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ)தொடர்பான சேவைகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, மொழி மற்றும் வேளாண் துறை சார்ந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடுகளை அதிகரிக்கும் முயற்சியில் கூகுள் இறங்கியுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு மொழி மிக அவசியம். மொழி தடையால், ஒருவர் தன்மருத்துவப் பிரச்சினையை மருத்துவரிடம் விளக்க முடியாமல் போகக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். Source link