சார்ஜ் தீர்ந்துபோகும் என கவலையே படவேண்டாம்! அப்படியொரு போனை இறக்கிய சாம்சங்

Samsung Galaxy F15 5G இந்தியாவில் அறிமுகம்: சாம்சங் பிரியர்களுக்கும் ரசிகர்களுக்கும் நல்ல செய்தி. சாம்சங் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் பிரிவில் சக்திவாய்ந்த சாம்சங் ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இப்போது உங்களுக்கு புதிய விருப்பம் வந்துள்ளது. சாம்சங் நிறுவனம் Samsung Galaxy F15 5G-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் 8 ஜிபி ரேம் உடன் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. மார்ச் மாதத்தில், இதே மாடல் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் … Read more

ஏர்டெல் ஐபில் ரீச்சார்ஜ் பிளான்! 39 ரூபாயில் பார்த்து ரசிக்கலாம்

ஐபிஎல் கிரிக்கெட் கொண்டாட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ஏர்டெல் தனது பயனர்களுக்கு சிறப்பு ஐபிஎல் போனஸ் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றின் விலை வெறும் 39 ரூபாய் மட்டுமே. நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல்லின் புதிய டேட்டா திட்டத்தைப் பற்றி ஏர்டெல் யூசர்கள் தெரிந்து கொள்ளுங்கள். புதிய ஐபிஎல் போனஸ் டேட்டா திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஏர்டெல் அதன் அனைத்து ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் தற்போதுள்ள அன்லிமிடெட் டேட்டா … Read more

ஜியோ லேட்டஸ்ட் ஆஃபர்! தினசரி 18 ரூபாய் செலவில் 3ஜிபி டேட்டா, நெட்பிளிக்ஸ் இலவசம்

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவுக்கு கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர். அதிக யூசர்களை கொண்ட நிறுவனமாகவும் இருப்பதால் ஜியோ நிறுவனம் அவ்வப்போது அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க பல்வேறு ரேஞ்சுகளில் ரீச்சார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும். அந்தவகையில், நீங்கள் இலவச நெட்ஃபிக்ஸ், இலவச அழைப்புகள் மற்றும் முழு டேட்டாவைப் பெறும் திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், ஜியோவின் இந்தத் திட்டம் சிறந்தது. இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு ரூ.18 செலவழித்து 3ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளின் பலனைப் … Read more

வாட்ஸ்அப் இன்பாக்ஸில் பழைய செய்திகளை இனி கண்டுபிடிப்பது ஈஸி!

வாட்ஸ்அப் புது அப்டேட் வாட்ஸ்அப் செயலியின் தேவை அதிகரிப்புக்கு ஏற்ப, அதனுடைய தொழில்நுட்பங்களுக்கும் நாளுக்குநாள் புதுப்புது அப்டேட் ஆகி வருகிறது. யூசர்களின் எதிர்பார்ப்புகளை விரல் நுனியில் நிறைவேற்றும் விதமாக வாட்ஸ்அப்பில் அடிக்கடி புதுப்புது அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. பழைய செய்திகளை வாட்ஸ்அப் இன்பாக்ஸில் இனி ஈஸியாக கண்டுபிடிக்கலாம். வாட்ஸ் அப் மெசேஜ்களில் இன்பாக்ஸ் முழுவதும் தேவையான மெசேஜ்கள், பைல்களை நொடியில் கண்டுபிடித்துவிடும் வகையில் பில்டர் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் … Read more

வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை விவரத்தை இணையவெளியில் அறியலாம்!

சென்னை: முதல்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை இணையதளம் மூலமாக வாக்காளர்கள் அறிந்து கொள்ள உதவும் அம்சம் குறித்து பார்ப்போம். முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் சுமார் 16.63 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த உள்ளனர். இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை … Read more

முதல்கட்ட மக்களவைத் தேர்தல் | டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்!

சென்னை: இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம். தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 16.63 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த உள்ளனர். இந்த சூழலில் டெக்னாலஜி … Read more

சாவியே இல்லாத ஹை-டெக் ஸ்கூட்டர்… எக்கச்சக்க மைலேஜ் கிடைக்கும் – யமஹாவின் புதிய ஸ்கூட்டர்

Yamaha Aerox S Scooter: நகரமயமாதல் சூழலில் நீண்ட தூரம் பயணிக்கும் போக்கு அதிகரித்துவிட்டது எனலாம். புறநகர் பகுதிகளில் இருந்து நகருக்குள் படிப்புக்காக, பணிக்காக என பல காரணங்களாக மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். அந்த வகையில், மெட்ரோ, மின்சார ரயில், பேருந்து ஆகிய பொது போக்குவரத்து முக்கியத்துவம் பெறுகிறது.  இருப்பினும், சிலருக்கு பொது போக்குவரத்து ஏதவாக இருக்காது. பணிக்குச் செல்பவர்கள் எப்போதும் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் பயணிக்க விரும்புவார்கள் என்பதால் பைக், கார் போன்றவற்றையே அவர்கள் … Read more

விவோ T3x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி3x 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். மூன்று விதமான வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் … Read more

ராக்கெட்டில் உந்து விசைக்காக எடை குறைந்த ‘நாசில்’ கருவியை உருவாக்கி இஸ்ரோ சாதனை

சென்னை: ராக்கெட்டில் உந்து விசைக்கு பயன்படுத்தப்படும் ‘நாசில்’ எனும் கருவியை மிகவும் குறைந்த எடையில் உருவாக்கி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. விண்வெளி துறையில் புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளில் இஸ்ரோ தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ராக்கெட் தொழில்நுட்பத்தில் புதிய கட்டமைப்பை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. Source link

மோட்டோ ஜி64 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி64 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வரும் 23-ம் தேதி அன்று சந்தையில் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் … Read more