இனி வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பலாம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்

எதிர்காலத்தில் வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் தற்போதைக்கு பீட்டா வெர்ஷனில் மட்டும் இந்த வசதி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலக் குறுஞ்செய்து சேவை செயலி வாட்ஸ்அப். ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த செயலியில் தொடர்ந்து புதிய அப்டேட்டுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னால் ஸ்டேட்டஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே தற்போது வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பும் வசதி … Read more

முடிவுக்கு வரும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்: மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு

25 வருடங்களுக்கும் மேலாகப் பயன்பாட்டில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரவுசரான இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் முடிவுக்கு வருகிறது. அடுத்த ஆண்டோடு இந்தச் சேவையை நிறுத்த மைக்ரோசாஃப்ட் முடிவு செய்துள்ளது. கணினிகளில் இணையப் பயன்பாடு ஆரம்பித்த காலத்தில் பயனர்களுக்கு இருந்த ஒரே பிரவுசர் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மட்டுமே. ஆனால், காலப்போக்கில் மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ், சஃபாரி, க்ரோம் போன்ற பிரவுசர்களின் வேகத்தோடு எக்ஸ்ப்ளோரரால் போட்டி போட முடியவில்லை. அதன் பயன்பாடு மிக மிகக் குறைவான விகிதத்திலேயே இருந்து வந்தது. மேலும் மைக்ரோசாஃப்ட் … Read more

மே 26 முதல் இந்தியாவில் ட்விட்டர், ஃபேஸ்புக் செயல்படுமா? 

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் செயல்பட மூன்று மாதங்களுக்கு முன் இந்திய அரசு புதிய சட்டதிட்டங்களை அறிமுகம் செய்தது. அவற்றை அந்தத் தளங்கள் இன்னும் ஏற்காத நிலையில் அதற்கான கெடு மே 26-ம் தேதி (நாளை) முடிகிறது. இதனால் தொடர்ந்து இந்தத் தளங்கள் இயங்க அனுமதிக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள், 2021இன் கீழ், இந்திய அரசிதழில் புதிய விதிமுறைகளைக் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியன்று இந்திய … Read more

புதிய விதிமுறைகள் சர்ச்சை: இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு

புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் பயனர்களின் தனியுரிமை மீறல் தொடர்பாக, இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள், 2021-இன் கீழ் இந்திய அரசு புதிய சட்டதிட்டங்களை அறிமுகம் செய்தது. இந்தியாவில் செயல்படும் சமூக வலைதளங்கள் இதற்கு உடன்பட, இன்றுடன் (மே 26) கெடு முடிகிறது. இதனால் தொடர்ந்து இந்தத் தளங்கள் இயங்க அனுமதிக்கப்படுமா என்கிற கேள்வியெழுந்தது. இந்நிலையில் , … Read more

புதிய லோகோவில் Google Chrome..! 8 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம்

உலகின் முன்னணி பிரவுசரான கூகுள் குரோம் (Google Chrome) 8 ஆண்டுகளுக்குப் பிறகு லோகோவை மாற்றியுள்ளது. கூகுள் குரோம் லோகோ  வடிவமைப்பாளரான எல்வின் ஹு (Elvin Hu) டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தன்னுடைய பதிவில் கூகுள் குரோமின் புதிய வடிவமைப்பையும் அவர் பதிவிட்டுள்ளார். புதிய லோகோ மாற்றம் குறித்து அவர் எழுதியுள்ள பதிவில், “உங்களில் சிலர் இன்று Chrome -ன் ஒரு புதிய ஐகானைக் கவனித்திருக்கலாம். ஆம்! 8 ஆண்டுகளில் முதல் முறையாக Chrome -ன் பிராண்ட் ஐகான்களைப் … Read more

வானில் இன்று ஒரே நேரத்தில் நிகழும் ரத்த நிலவு, முழு சந்திர கிரகணம்: வெறும் கண்களால் காணலாம்

வானில் இன்று ஒரே நேரத்தில் ரத்த நிலவு, முழு சந்திர கிரகணம் என்னும் இரண்டு அரிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இவற்றை வெறும் கண்களால் காண முடியும். சந்திர கிரகணம் சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (மே 26ஆம் தேதி) பவுர்ணமி நாளன்று நிகழவுள்ளது. மூன்று வகையான சந்திர கிரகணங்கள் … Read more

Recharge Plans: சைலண்டாக விலையேற்றிய Jio..! எந்தெந்த திட்டங்களுக்கு தெரியுமா?

நாட்டின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ அண்மையில் அதன் மூன்று பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. வாடிகைகயாளர்களை வருத்தமடையச் செய்துள்ள அந்த திட்டங்களையும், அந்த திட்டங்கள் கொடுக்கும் நன்மைகளையும் தெரிந்து கொள்வோம். Jio ரூ.186 திட்டம் ஜியோவின் 186 ரூபாய் ப்ரீப்பெய்ட் திட்டம், ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அனைத்து நெட்வொர்குகளுக்கும் அன்லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் -களை கொடுக்கிறது. ஜியோ வழங்கும் சில கூடுதலான சந்தாக்களும் … Read more

ஆடியோ செய்திகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம்: வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்

வாட்ஸ் அப்பில் பிறர் அனுப்பும் ஆடியோ செய்திகளின் வேகத்தை அதிகரித்துப் பயன்படுத்தும் வகையில், புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பிரபல குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப், ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமானது. இந்நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் ஆடியோ செய்திகளின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், புதிய வசதியை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் … Read more

ஜியோபோன் நெக்ஸ்ட்; மலிவு விலையில் ஒரு ஸ்மார்ட்போன்: கூகுளுடன் இணைந்து ரிலையன்ஸ் அறிமுகம்

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற புதிய வகை செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டே இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் இன்று இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இன்று காலை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெடின் 44வது வருடாந்திர பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ குழு ஒரு ஸ்மார்ட்ஃபோனை உருவாக்கியுள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள உள்ள இந்த ஃபோனை … Read more

பிரமாண்டமான டிஸ்பிளே கொண்ட இந்த 5G Smartphone அறிமுகம்

புதுடெல்லி: சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான டெக்னோ தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனான டெக்னோ போவா 5ஜியை கடந்த ஆண்டு நைஜீரியாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது நிறுவனம் பிப்ரவரி 8 ஆம் தேதி, இந்த சிறந்த டிஸ்ப்ளே 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. இந்த போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலையை பார்க்கலாம். புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் Tecno இந்த புதிய ஸ்மார்ட்போனான Tecno Pova 5G ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த தகவலை … Read more