Tech Tips: அச்சச்சோ..! தெரியாம செயலியை டெலீட் பண்ணிட்டீங்களா? இதை செஞ்சா போதும்

ஸ்மார்ட்போன்களை ஸ்மார்ட் ஆக்குவது அவற்றில் இருக்கும் ஆப்ஸ் தான். நமக்கு தேவையான பணிகளை அந்த செயலிகளை ஸ்மார்டாக செய்து கொடுத்துவிடும். அந்தவகையில் புதிய போன் வாங்கிய பிறகு, பயனர்கள் முதலில் இன்ஸ்டால் செய்வது தங்களுக்குப் பிடித்த ஆப்ஸ்தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில், முக்கியமான ஆப்ஸ் தவறுதலாக டெலிட் ஆகிவிட்டால் கவலை ஏற்படுவது இயல்புதான். நல்ல விஷயம் என்னவென்றால், நீக்கப்பட்ட செயலிகளை நீங்கள் மீட்டெடுக்க முடியும். ஒரு செயலியை தொலைபேசியில் இருந்து நீக்குவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அல்லது தெரியாமல்கூட … Read more

வீட்டில் கிடக்கும் பழைய டிவி ஸ்மார்ட் டிவியாக மாறும் – வெறும் 2000 ரூபாய் போதும்!

முன்பெல்லாம் பிடித்த படங்களை தொலைக்காட்சியில் பார்க்க ஏதாவதொரு பண்டிகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படி படம் பார்க்க வேண்டும் என்றாலும் டிடிஹெச் அல்லது கேபிள் இணைப்பு அவசியம். இப்போது, அந்த காலமெல்லாம் இப்போது மலையேறிவிட்டது. உங்களுக்கு பிடித்த படங்கள் அல்லது வெப்சீரிஸ்களை நெட்பிளிக்ஸ், அமேசான், டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற ஆன்லைன் ஓடிடி ஸ்டீரிமிங் செயலிகள் மூலம் உடனடியாக பார்த்து ரசிக்கலாம். அதற்கு ஸ்மார்ட் டிவி மற்றும் ஆன்லைன் இணைய வசதி மட்டும் இருந்தால்போதும்., அதாவது உங்கள் … Read more

பட்ஜெட் விலையில் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A05s ஸ்மார்ட்போன் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி A05s ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் ஏ … Read more

WhatsApp Update: இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்த வந்தாச்சு புதிய அப்டேட்…! மார்க் அறிவிப்பு

பிரபலமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் புதிய அப்டேட்டுகளை சரமாரியாக களமிறக்கிக் கொண்டிருகிறது. அண்மையில் வாட்ஸ்அப்பில் சேனல்களை அறிமுகப்படுத்திய நிலையில், மற்றொரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்துகிறது. இது குறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பேசும்போது விரைவில் பயனர்கள் ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்த முடியும் என்று அறிவித்திருக்கிறார்.  ஃபேஸ்புக்கில் ஜுக்கர்பெர்க் எழுதியிருக்கும் ஒரு பதிவில், “WhatsApp-ல் இரண்டு கணக்குகளுக்கு மாறவும் – விரைவில் நீங்கள் வாட்ஸ்அப் செயலியில் ஒரு தொலைபேசியில் … Read more

ஜியோவின் இந்த பிளான் தெரியுமா? நெட்பிளிக்ஸ் இலவசம்.. 84 நாள் வேலிடிட்டி..! 392 ரூபாய் மட்டுமே

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அடிக்கடி புதுப்புது சர்பிரைஸ்களை கொடுத்துக் கொண்டே இருக்கும். அந்தவகையில் இப்போது அறிவித்திருக்கும் நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்சன் பிளான் தான் ஜியோ வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தியுள்ளது. நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 5ஜி நெட்வொர்க், 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளான் 1099 ரூபாய் மட்டுமே. இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை இங்கே பார்க்கலாம்.   ஜியோவின் நெட்பிளிக்ஸ் பிளான்  ஜியோவின் 1099 ரூபாய் பிளானில் நெட்பிளிக்ஸ் மூன்று மாதங்களுக்கு கிடைக்கும். இதன் விலை … Read more

நவராத்திரிக்கு பம்பர் ஆப்பர்… 50 GB டேட்டாவை வாரி வழங்கும் வோடபோன்!

Vodafone Idea Navaratiri Offer: ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் வோடபோன் ஐடியா (Vodafone Idea – Vi) பல அதிரடி ஆப்பர்களை வழங்குகின்றன. அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது. பண்டிகை காலங்களில், வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நவராத்திரி சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த சலுகையின் கீழ், இந்த நிறுவனம் அதன் தற்போதைய திட்டங்களில் கூடுதல் டேட்டாவை வழங்குகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். … Read more

பல்சர் காதலர்களே ரெடியா… விரைவில் NS400 – விலை, ரிலீஸ் தேதி, சிறப்பம்சங்கள் இதோ!

Bajaj Pulsar NS400: பல்சர் பைக் வாங்க வேண்டும் என்பது இந்திய இளைஞர்களின் கனவுகளில் ஒன்று என கூறலாம். பொல்லாதவன் படத்தில் தனுஷ் பல்சர் பைக் வாங்குவதற்கு முன்பிருந்த இங்கு பல்சர் ‘பைத்தியங்களை’ நாம் பார்த்திருப்போம். பல்சர் பைக்கை சாலையில் எங்காவது பார்த்தால் அதை கண்கொட்டாமல் பார்த்து பெருமூச்சுவிடும் இளைஞர்கள் இப்போதும் இருக்கிறார்கள். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் தங்களின் பெயரில் NS, RS என பல்சரின் துணை பெயர்களை வைத்திருக்கும் நபர்களை நீங்களும் உங்கள் பிரண்ட் லிஸ்டில் வைத்திருப்பீர்கள்.  … Read more

ஆப்பிள் ஐபோனை அலறவிட வருகிறது விவோவின் Badass மொபைல் – கேமரா அள்ளுது!

Vivo X100 Series: தற்போதைய ஸ்மார்ட்போன் யுகத்தில் விலை உயர்ந்த மொபைல்களை தயாரிப்பது மற்றும் ப்ரீமியம் வகை மொபைல்களின் விற்பனையில் கொட்டிகட்டி பறக்கும் நிறுவனம் என்றால் அது ஆப்பிள்தான். ஆப்பிள் அந்த வகையில் அதன் புதிய ஐபோன் 15 சீரிஸை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அதன் விற்பனையும் தற்போது அனல் பறந்து வரும் சூழலில், விவோ (Vivo) நிறுவனம் அதற்கு போட்டியளிக்கும் வகையில் ஒரு மாடலை இறக்கியுள்ளது. எப்போது அறிமுகம்? Vivo தனது அடுத்த புதிய ஸ்மார்ட்போனை … Read more

கிரெடிட் கார்டு பேலன்ஸை ஈஸியாக டிரான்ஸ்பர் செய்யலாம்! இதோ வழிமுறை

மாத வருமானத்தை வைத்து செலவு செய்யும் காலம் மாறிவிட்டது. தற்போது கிரெடிட் கார்டு பயன்படுத்தி நமக்கு தேவையானதை வாங்கிக்கொள்ளலாம். இதனால் மக்கள் அளவிற்கு மீறி செலவு செய்து கூடுதல் பணம் சிக்கலுக்கு ஆளாகிறார்கள். அதேநேரத்தில் சரியாக பயன்படுத்தினால் எந்த நிதி சுழற்சிக்கு சிறப்பான ஆதாரமாக கிரெடிட் கார்டுகள் இருக்கும். அப்படியாக கிரெடிட் கார்டு இருப்பு பரிமாற்றம் (Credit Card Balance Transfer) மூலம் கடனை நிர்வகிப்பதற்கும் வட்டியை சேமிப்பதற்கும் சிறந்த வழியாக கருதப்படுகிறது. இதனைப் பற்றி விரிவாக … Read more

Spyware Alert: மெசேஜ், பாஸ்வேர்டு திருடும் ஸ்பைவேர்… வீடியோ, கால் ரெக்கார்டும் செய்யுமாம்

ஸ்பைநோட் எனப்படும் புதிய மால்வேர், எந்தவொரு சாதனத்திலும் இருப்பதே தெரியாது. இது எப்போது உங்கள் மொபைலுக்குள் வருகிறது, என்னென்ன செய்கிறது என்தையெல்லாம் யூசர்களால் கண்டுபிடிக்க முடியாது. அத்தகைய ஆபத்தான ஸ்பைவேர் இப்போது இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது. இதனை இணைய பாதுகாப்பு நிறுவனமான எஃப்-செக்யரி தான் எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்படி, இந்த போலி செயலியானது வங்கித் தகவல் போன்ற முக்கியமான பயனர் தரவைத் திருடலாம் மற்றும் முதன்மையாக ஆண்ட்ராய்டு தொலைபேசிகளை குறிவைக்கிறது என … Read more