Oneplus 11 5G , Oneplus TV, Oneplus Buds Air pro 2, ஒன்பிளஸ் Tab… சரவெடியாக அடுத்தடுத்து வெளியான பிரீமியம் கருவிகள்!

இந்தியாவில் முன்னணி Flagship நிறுவனங்களில் ஒன்றான Oneplus அதன் புதிய Flagship மாடல் ஸ்மார்ட்போனான Oneplus 11 5g போனை புது டெல்லியில் நடந்த Oneplus Cloud 11 நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளது. இந்த போனில் முதல் முறையாக Hasselblad நிறுவனத்தின் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் Oneplus 11 5G, Oneplus Pad, Oneplus Keyboard, Oneplus Buds Pro 2 என பல புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த கருவிகள் பற்றிய விரிவான … Read more

சாட் ஜிபிடி மனித குலத்திற்கு கிடைத்த வரமா? சாபமா? – ஒரு தெளிவுப் பார்வை

நம் தாத்தா, பாட்டியிடம் நமக்குத் தெரியாத விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டோம். அவர்களுக்கு அதையடுத்து பெற்றோரிடம், பின்னர் நூலகத்தில் புத்தகங்களின் ஊடாக தெரிந்து கொண்டோம். இன்றைய தொழில்நுட்ப உலகில் கூகுள் துணை கொண்டு அதை தெரிந்து வருகிறோம். நொடிக்கு 99,000 தேடல்களை கூகுள் செயல்படுத்துகிறது. கூகுள் ஒரு நாளைக்கு 850 கோடி தேடல்களை செயலாக்குகிறது. நாம் மேற்கொள்ளும் ஒரு சிறிய தேடலுக்கு கூகுள் தேடுபொறியில் அது தொடர்பான பலதரப்பட்ட தகவல்களை கொடுக்கிறது. இப்போது அதை விடவும் வல்லமை … Read more

ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை அனுப்பும் வசதி: வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகம்

கலிபோர்னியா: ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை அனுப்பும் வசதி வெகு விரைவில் வாட்ஸ்அப் தளத்தில் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வாட்ஸ்அப் பயனர்கள் ஒரே நேரத்தில் 30 போட்டோக்களை மட்டுமே அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு … Read more

Samsung S23 series மூலமாக 1400 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை அள்ளிய சாம்சங்!

இந்தியாவில் சமீபத்தில் சாம்சங் நிறுவனம் அதன் Galaxy S23 சீரிஸ் போன்களை வெளியிட்டது. இந்த போன்கள் விலை 74 ஆயிரம் ரூபாயில் தொடங்கி தலைசிறந்த Flagship போனான S23 Ultra 1,24,999 லட்சம் ரூபாய் விலை வரை உள்ளது. S23, S23+, S23 Ultra என மொத்தமாக மூன்று வேரியண்ட்களில் இந்த போன் கிடைக்கிறது. இந்த போன்களின் விலை இந்திய ரூபாயில் மிகவும் அதிகம் என்றும் சாம்சங் இந்தியாவில் விலை ஏற்றத்தை செய்திருக்கக்கூடாது என்று பல டெக் … Read more

Oneplus Cloud 11 நிகழ்ச்சியில் வெளியாகப்போகும் கருவிகள் என்ன?

சீனாவின் Oneplus நிறுவனம் அதன் Oneplus 11 சீரிஸ் போன்களை வெளியிட தயாராக உள்ளது. இதனுடன் சேர்த்து புதிய Oneplus நிறுவன கருவிகளாக உள்ள Oneplus Keyboard 81 Pro, Oneplus Pad, OnePlus Buds Pro 2, Oneplus TV Q2 Pro ஆகிய கருவிகளையும் வெளியாகவுள்ளன. இந்த நிகழ்ச்சி (07/02/2023) அன்று இரவு 7.30PM மணியளவில் புது டெல்லியில் நடைபெறும். இதனை நாம் நேரலையில் Oneplus.com அல்லது யூடியூப் மூலமாக பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியில் … Read more

Samsung Galaxy S23 Ultra கேமரா மூலமாக நிலாவை நேரில் காட்டிய பிரபல Youtuber!

தற்போது உலகின் நம்பர் 1 கேமரா ஸ்மார்ட்போனாக சாம்சங் நிறுவனத்தின் Galaxy S23 Ultra உள்ளது. ஆப்பிள் ஐபோன் 1 ப்ரோ மாடலை மிஞ்சும் அளவு டக்கரான கேமரா வசதிகளுடன் இந்த போன் வெளியாகியுள்ளது. உலகில் இருக்கும் Flagship போன்கள் வரிசையில் இப்போது இந்த சாம்சங் S23 Ultra நம்பர் 1 இடத்தை பிடித்துவிட்டது. இதற்கு மிகப்பெரும் உதவியாக அந்த போனின் கேமரா வசதிகள் பார்க்கப்படுகிறது. 200MP அட்டகாசமான கேமரா அம்சத்துடன் வெளியாகியுள்ள இந்த S23 அல்ட்ரா … Read more

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ எக்ஸ்5 புரோ 5ஜி அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ எக்ஸ்5 புரோ 5ஜி அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். எக்ஸ்4 புரோ 5ஜி ஸ்மார்ட்போனை தொடர்ந்து இது அறிமுகமாகி உள்ளது. சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வருகிறது. … Read more

Step-by-Step Guide | பான் – ஆதார் இணைப்பின் நிலையை சரிபார்ப்பது எப்படி?

சென்னை: பான் மற்றும் ஆதார் இணைப்பு கட்டாயம் என இந்திய அரசு கூறியிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி இதற்கான கெடு தேதி கடந்த மார்ச் 31, 2022 எனச் சொல்லப்பட்டது. இருந்தபோதும் இணைக்கத் தவறிய பயனர்கள் குறைந்தபட்ச அபராதத் தொகையுடன் வரும் மார்ச் 31 வரை இதை மேற்கொள்ளும் வகையில் அரசு நீட்டித்தது. இந்தச் சூழலில் பயனர்கள் தங்களது பான் – ஆதார் இணைப்பின் நிலையை எப்படி சரிபார்ப்பது என்பதை பார்ப்போம். பான் – ஆதார் இணைப்புக்கான அபராதத் … Read more

230 Online Betting மற்றும் Loan செயலிகளுக்கு தடை விதித்த இந்திய அரசு!

கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் இயங்கும் முக்கிய OTT தலங்களான Netflix, Hotstar மற்றும் Amazon Prime Video போன்ற நிறுவனங்களுக்கு இனி ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை கூடாது என்று உத்தரவிட்டது. மேலும் தினசரி தொலைக்காட்சிகளிலும் இந்த Betting Apps மற்றும் Loan Apps விளம்பரங்களுக்கு தடை விதித்தது. இந்தியாவில் தொழில்நுட்ப துறை அமைச்சகம் (MeitY) 138 சூதாட்டம் மற்றும் 94 ஆன்லைன் கடன் தரும் செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. இதற்கு காரணமாக பொதுமக்களை ஏமாற்றி … Read more

சீன தொடர்புடைய 200+ செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு

புது டெல்லி: சீன தேச தொடர்பு கொண்ட 138 பெட்டிங் செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை அவசர முடிவாக அரசு எடுத்துள்ளதாக தகவல். இதனை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 முதல் இந்திய தேச பாதுகாப்பு கருதி சீன தேச மொபைல் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது. டிக்-டாக் துவங்கி பல்வேறு செயலிகளுக்கு அப்படி … Read more