Mr.Tweet | ட்விட்டரில் தனது பெயரை மாற்றிய எலான் மஸ்க்

கலிபோர்னியா: ட்விட்டர் சமூக வலைதளத்தில் தனது பெயரை மிஸ்டர் ட்வீட் என மாற்றியுள்ளார் எலான் மஸ்க். இவர் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தற்போது செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளத்தில் தனது பெயரை அவ்வப்போது மாற்றும் வழக்கத்தை கொண்டவர் மஸ்க். அந்த வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அவரே ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். இனி தானே நினைத்தாலும் அந்தப் பெயரை மாற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார். புதுப் பெயர் வந்தது எப்படி? … Read more

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்கும் கோக் நிறுவனம்?

குருகிராம்: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் குளிர்பான நிறுவனமான கோக கோலா களம் இறங்க வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனை தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை தெரிவிக்கும் டிப்ஸ்டரான முகுல் சர்மா ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். கொக கோலா நிறுவனம் குளிர்பானம் பிரிவு சந்தையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், அந்நிறுவனம் தற்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை குறிவைத்துள்ளதாக தெரிகிறது. இதற்காக பிரபல ஸ்மார்ட்போன் பிராண்ட் உடன் இணைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்திய சந்தையில் பட்ஜெட் மற்றும் மிட் … Read more

இந்தியாவில் ஒரு மணி நேரம் முடங்கிய மைக்ரோசாப்ட் சேவைகள்

சென்னை: இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியதால் பயனர்கள் அதன் சேவையை பயன்படுத்த முடியாமல் தவித்தனர். இந்நிலையில், தற்போது மைக்ரோசாப்ட் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. மைக்ரோசாப்டின் அவுட்லுக், டீம்ஸ், மைக்ரோசாப்ட் 365 போன்றவற்றின் சேவைகள் முடங்கியதாக தகவல். அவுட்லுக் சேவை முடக்கத்தால் பயனர்கள் தங்களால் மின்னஞ்சல் அனுப்பவும், பெறவும் முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பு குறித்து இந்திய பயனர்கள் அதிகம் புகார் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து முடங்கிய தளங்கள் … Read more

ஓலா S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வீல் உடைந்ததால் பெண் படுகாயம்! மீண்டும் ஒரு OLA EV விபத்து!

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விபத்து என்பது அதிகரித்துவருகிறது. அதுவும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை அதிகரித்த தொடக்க காலத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீவிபத்து, கோளாறு போன்றவை அடிக்கடி தொடர்ச்சியாக ஏற்பட்டு பலர் உயிர் இழந்துள்ளார்கள். சமீபத்தில் பார்மர் என்ற நபர் அவரின் ஓலா ஸ்கூட்டரை ஓட்டி சென்ற மனைவிக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக ட்வீட் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் மனைவி தற்போது அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக கூறியுள்ளார். ஓலா S1 மற்றும் S1 Pro ஆகிய ஸ்கூட்டர்களில் முன்பக்கம் … Read more

சாம்சங் Galaxy S23 சீரிஸ் போனுடன் வெளியாகும் அட்டகாசமான Galaxy Book 3 லேப்டாப்!

இந்தியாவில் பிப்ரவரி 1 மிகப்பெரிய அறிமுகம் காத்திருக்கிறது. தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம் அதன் பிரபல ஸ்மார்ட்போன் சீரிஸ் மாடலான Galaxy S23 சீரிஸ் உடன் சேர்த்து அதன் புதிய Galaxy Book 3 லேப்டாப் வெளியிடுகிறது. இந்த லேப்டாப் முன்பதிவு இப்போது அந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் ஆப் மூலமாக தொடங்கியுள்ளது. இதனுடன் நமக்கு 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சலுகைகள் கிடைக்கவுள்ளன. Galaxy Book 3 Series இந்த லேப்டாப் மொத்தமாக 3 … Read more

பூமியின் மையப்பகுதி தலைகீழாக சுற்றத்தொடங்கியுள்ளது! நமக்கெல்லாம் என்ன நடக்கும்?

நமக்கு பூமியின் மேல் பகுதியில் என்ன நடக்கிறது என்பது மட்டுமே தெரியும். ஆனால் பூமிக்கு உள்ளே ஒரு தனி உலகம் இருப்பது தெரியுமா? இதனை கடந்த 1935 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதற்கு பெயர் Core அதாவது மையப்பகுதி என்று பெயர் வைத்தனர். இதுகுறித்து பல கற்பனையான Journey to the center of the earth போன்ற ஹாலிவுட் திரைப்படங்களும் வெளியாகின. நம்முடைய பூமியில் ஏற்படும் இயற்கை பேரிடர்களுக்கும் இந்த Core பகுதிக்கும் பெரும் … Read more

டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா… – கடந்த ஆண்டு அலெக்சாவிடம் இந்தியர்கள் அதிகம் கேட்ட கேள்விகள் என்னென்ன?

சென்னை: கடந்த ஆண்டு இந்திய பயனர்கள் அமேசானின் அலெக்சாவிடம் கேட்ட கேள்விகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு. பொது அறிவு, பிரபலங்கள், என்டர்டெயின்மென்ட், சமையல், விளையாட்டு, தனித்துவமிக்க கேள்விகள் என்ற பிரிவுகளில் இந்த கேள்விகளை அமேசான் வெளியிட்டுள்ளது. அமேசானின் அலெக்சா குறித்து அனைவரும் அறிந்திருப்போம். இதுவொரு வெர்ச்சுவல் அசிஸ்டன்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கர். இணைய இணைப்பு வசதியுடன் இயங்கி வருகிறது அலெக்சா. தமிழ் உட்பட பல்வேறு உலக மொழிகளில் அலெக்சா பேசி வருகிறது. விடை தெரியாத … Read more

‘எல்லோருக்கும் வணக்கம்’ – முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு பயன்பாட்டுக்கு வந்ததும் கங்கனா ரனாவத் ட்வீட்

சென்னை: இந்திய சினிமா நடிகை கங்கனா ரனாவத்தின் முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதன் காரணமாக ‘எல்லோருக்கும் வணக்கம்’ என சொல்லி அவர் இப்போது ட்வீட் செய்துள்ளார். 35 வயதான கங்கனா ரனாவத் திரைத்துறையில் கடந்த 2006 வாக்கில் என்ட்ரியானவர். தமிழ் உட்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இவர் நடித்து வருகிறார். அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை சொல்வது இவரது வழக்கமாக உள்ளது. ட்விட்டர் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை தெரிவித்து வந்த … Read more

ஒரே நாளில் 50 நகரங்களில் Jio 5G! தமிழ்நாட்டில் 11 நகரங்களில் வெளியீடு!

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனமான Reliance Jio தற்போது இந்தியாவில் ஒரே நாளில் 50 நகரங்களுக்கு Jio True 5G சேவையை அறிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், ஈரோடு, தருமபுரி, ஓசூர், தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய நகரங்களில் இப்போது 5G சேவை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு Jio Welcome Offer கிடைக்கும். அதன் பிறகு அவர்களால் 1GB/PS வேகத்தில் இணையத்தை பயன்படுத்தலாம். இதற்காக … Read more

எதிர்காலத்தை கலக்கப்போகும் Solar எலக்ட்ரிக் கார்! ஒரே சார்ஜ் 643 கிலோமீட்டர் ரேஞ்சு!

எதிர்காலம் பற்றிய கனவு நம்மில் அனைவருக்கும் இருக்கும். எதிர்கால உலகம் எப்படி இருக்கும் என்றும் அங்கு என்னவெல்லாம் கிடைக்கும் என்பது பற்றியும் நம்மில் பலருக்கு பல விதமாக கற்பனைகள் உள்ளன. அதிலும் எதிர்காலம் பற்றி பல ஹாலிவுட் திரைப்படங்களை பார்த்தால் உண்மையில் இது எல்லாம் சாத்தியமா? என்ற கேள்வி நமக்கெல்லாம் எழும். இந்த வரிசையில் கார்கள் பற்றிய எதிர்கால கனவு பலருக்கு உள்ளது. அப்படி அந்த கனவை நேரில் காட்டுவதுபோல அமெரிக்காவை சேர்ந்த Aptera Motors நிறுவனம் … Read more