6-ஜி தொழில்நுட்பம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்: மத்திய தொலைதொடர்புத் துறை செயலர் நம்பிக்கை

சென்னை: விரைவில் வரவுள்ள 6-ஜி தொழில்நுட்பம் இந்தியாவிலும், உலகிலும் பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை செயலர் தீரஜ் மிட்டல் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை ஐஐடி, மத்திய அரசின் தொலைதொடர்புத்துறையுடன் இணைந்து தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி பாதுகாப்பான சாலைபயணத்தை உறுதி செய்யும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தையும், இதுதொடர்பான 2 நாள் மாநாட்டையும்மத்திய அரசின் தொலை தொடர்புத்துறை செயலர் தீரஜ் மிட்டல் டெல்லியில் இருந்தவாறு காணொலி வாயிலாக … Read more

மோட்டோ எட்ஜ் 50 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 50 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் மோட்டோரோலா எட்ஜ் 50 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. வயர் மற்றும் … Read more

இனி இறந்தவர்கள் உடனும் பேசலாம்… சீனாவில் டிரெண்டாகும் AI… வெறும் ரூ.235 தான்!

AI Digital Avatar Creation: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தற்போதைய காலகட்டத்தில் அசுரத்தனமாக வளர்ச்சியடைந்து வருவதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, உலகின் தோற்றமே எதிர்காலத்தில் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால்தான் முற்றிலும் மாறுபடலாம் என தங்களின் கணிப்புகளை கூறிவருகின்றனர். அனைத்து துறையிலும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையை தவிர்க்க முடியாது என்றாலும், அதனை அறிந்துகொண்டு அதன் வழியில் புது புது வழிகளை கண்டடைவதே சரியான தீர்வாக இருக்கும் எனலாம்.  அந்த வகையில், சீன … Read more

AI சூழ் உலகு 17 – ‘டீப்ஃபேக் வீடியோ, வாய்ஸ் குளோனிங்’ – இது தேர்தல் கால அச்சுறுத்தல்

ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் உள்ள சுமார் 60 நாடுகளில் 2024-ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் உலக அளவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவிலும் தேர்தல் களம் அனல் பறக்கிறது. ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் களத்தில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்’ என கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. கூடவே எதிர்க்கட்சிகளை … Read more

இந்தியா உட்பட உலக அளவில் வாட்ஸ்அப் சேவை முடக்கம்: பயனர்கள் பாதிப்பு

சென்னை: இந்தியா உட்பட உலக அளவில் வாட்ஸ்அப் சேவை முடங்கியுள்ளதாக டவுன் டிட்டெக்டர் தளத்தில் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மட்டும் புதன்கிழமை (ஏப்ரல் 3) இரவு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் டவுன் டிட்டெக்டர் தளத்தில் இதனை தெரிவித்திருந்தனர். இதை வாட்ஸ்அப் தரப்பும் உறுதி செய்துள்ளது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு … Read more

ஆண்ட்ராய்டு 15 இயங்குதள அம்சங்கள்: கூகுள் வெளியிட்ட ப்ரிவியூ

கலிபோர்னியா: ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயனர் அம்சத்தை வழங்கும் வகையில் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை வெளியிட உள்ளது கூகுள். இந்நிலையில், அதில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் ப்ரிவியூ செய்யப்பட்டுள்ளது. கடந்த 2008-ல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் முதல் வெர்ஷன் வெளியானது. அது முதலே உலகை ஆட்சி செய்து வருகிறது. அவ்வப்போது சீரான இடைவெளியில் அடுத்தடுத்த ஆண்ட்ராய்டு வெர்ஷன்களை தொழில்நுட்பத்தின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த … Read more

வீடியோ எடிட் இனி ஈஸி கிரியேட்டர்களே! யூ டியூப் கொண்டு வந்த செயலி

யூ டியூப் அறிமுகப்படுத்திய செயலி கிரியேட்டர்கள் யுகமாக சோஷியல் மீடியாக்கள் மாறிவிட்டன. இதன் மூலம் இப்போது லட்சக்கணக்கில் நீங்கள் சம்பாதிக்கலாம். அந்தவகையில் யூடியூப் நிறுவனம் கொண்டு வந்திருக்கும் புதிய செயலி, மொபைல் போன் பயனர்கள் தங்களது கைவசம் உள்ள வீடியோக்களை தரமான வகையில் எடிட் செய்ய உதவுகிறது. அந்த செயலியின் பெயர் யூடியூப் கிரியேட். சந்தா கட்டணம் ஏதுமின்றி இயங்கும் இந்த செயலியை யூடியூப் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. யூடியூப் கிரியேட் ஆப் விரிவாக்கம் கிரியேட்டர்களை டார்கெட் … Read more

6,000 ரூபாய் தள்ளுபடியில் இப்போது ஒன்பிளஸ் மொபைல்! அமேசானில் அடிதூள் ஆஃபர்

OnePlus 12 மற்றும் OnePlus 12R அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, OnePlus 11 க்கான தேவை வேகமாக குறைந்து வருகிறது. இரண்டு மாடல்களுக்கு இடையேயான விலை வித்தியாசம் மிகவும் குறைவாக இருந்ததால், மக்கள் லேட்டஸ்ட் மாடலை வாங்க விரும்புகின்றனர். OnePlus 12 உடன் ஒப்பிடும் போது OnePlus 11ன் விற்பனை குறைந்ததால், இந்த சிக்கலை எதிர்கொள்ள ஒன்பிளஸ் நிறுவனம் Amazonஇல் 6,000 ரூபாய் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. ,  இருப்பினும், ஒன்பிளஸ் 11 இல் வழங்கப்படும் தள்ளுபடி திட்டம் ஒரு குறுகிய … Read more

டக்குனு வந்துவிட்டது 5.5ஜி… 5ஜி சேவைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

Difference Between 5G And 5GA Network: இந்தியாவில் இணைய சேவை பயன்பாடு என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அதிகமாகி உள்ளது எனலாம். தொழில்நுட்ப வளர்ச்சியால் ஸ்மார்ட்போன் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பு மக்களிடம் சென்றடைந்துள்ளது. வர்க்க ரீதியிலும், சமூக ரீதியிலும் பல தரப்பு மக்களிடம் ஸ்மார்ட்போன் பெரும் தாக்கத்தை செலுத்துகிறது.  வாட்ஸ்அப், யூ-ட்யூப் உள்ளிட்ட செயலிகளின் பயன்பாடு அதிகம் இருப்பதால், டேட்டாக்களும் மக்களால் அதிகம் செலவிடப்படுகிறது எனலாம். கடந்தாண்டு வெளியான ஒரு அறிக்கையின்படி, இந்தியர்கள் … Read more

‘வேகத்தில் திருப்தி… சேவையில் அதிருப்தி’ – இந்தியாவில் 5ஜி சேவை குறித்த ஆய்வுத் தகவல்

சென்னை: உலக நாடுகளில் அதிகளவிலான ஸ்மார்ட்போன் பயனர்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கடந்த 2022 அக்டோபரில் 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகமானது. இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் பரவலாக 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த சூழலில் இந்தியாவில் 5ஜி சேவை பயன்பாடு குறித்த ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது. இதனை Ookla நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாட்டில் 5ஜி சேவை கிடைக்கப் பெறுவது குறித்த தகவல், அதன் இணைப்பு … Read more