ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பிலிருந்து ராம்சரண் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்ட போது அவருடைய கதாபாத்திரம் தோற்றம் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் லீக் … Read more

மஞ்சுமெல் பாய்ஸ் தான் இங்கே.. கேரளாவில் விஜய் படங்கள் பண்ண ரெக்கார்டு எல்லாம்.. பிருத்விராஜ் பளிச்!

சென்னை: மலையாள திரையுலகத்திற்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பொன்னான ஆண்டாக அமைந்துள்ளது. ஜனவரி மாதம் 26ம் தேதி மோகன்லால் நடித்து வெளியான பிரம்மாண்ட திரைப்படம் மலைக்கோட்டை வாலிபன் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், டல்லடித்த மலையாள சினிமா பிப்ரவரி மாதம் பிரேமலு வந்த உடனே பிக்கப் ஆனது. பிரேமலு படத்தைத் தொடர்ந்து மம்மூட்டி நடிப்பில் வெளியான

ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிப்பில் 2022ம் தேதி வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. பான் இந்தியா படமாக உருவான இப்படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது. ஜப்பான் நாட்டிலும் வெளியாகி அங்கு அதிக வசூலைக் குவித்த இந்தியப் படம் என்ற பெருமையையும் பெற்றது. ராஜமவுலிக்கு ஜப்பான் நாட்டிலும் ரசிகர்கள் கூட்டம் உருவானது. அவர்கள் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கை இன்று மார்ச் 18ம் தேதி நடத்தத் திட்டமிட்டு … Read more

ஜெயமோகன் அப்படி பேசியிருக்கக்கூடாது.. மஞ்சும்மல் பாய்ஸுக்காக களமிறங்கிய பாக்யராஜ்

சென்னை: மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் கடந்த சில வாரங்களாகவே ஹாட் டாபிக்காக இருப்பது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். 2006ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் தமிழ்நாட்டில் வசூலை குவித்துவருகிறது. இன்னமும் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் எழுத்தாளர் ஜெயமோகனோ அந்தப் படத்தை கடுமையாக தாக்கி

'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா?

தெலுங்குத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக இரண்டு தெலுங்குப் படங்கள் உள்ளன. ஒன்று பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 எடி', மற்றொன்று அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2'. தெலுங்கு பேசும் மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவில் மே 13ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திர சட்டசபைத் தேர்தலும் அதே நாளில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி மே 9ம் தேதி 'கல்கி 2898 எடி' படம் வெளியாகுமா … Read more

Suriya – என்னது புறநானூறு படம் ட்ராப்பா?.. சூர்யா வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை: சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவிருக்கிறது. இதற்கிடையே அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும் நடிக்க கமிட்டானார். இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியானாலும் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படாமல் இருக்கிறது. இவற்றில் வாடிவாசல் படத்தின் நிலை என்னவென்று தெரியாத நிலையில் புறநானூறு

பரபரப்பான இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பரத் நடிக்கும் Once Upon A Time In Madras!

Once Upon A Time In Madras – வித்தியாசமான கதைக்களத்தோடு உருவாகி வரும் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.  

போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்'

2024ம் ஆண்டிலும் வாராவாரம் நான்கைந்து தமிழ்ப் படங்களாவது வந்துவிடுகிறது. ஒரு படமாவது ஓடி விடாதா, வசூலையும், லாபத்தையும் தந்துவிடாதா என தியேட்டர்காரர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மலையாளப் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம்தான் அந்த ஏக்கத்தைத் தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வெளியான புதிய படங்களின் சத்தம் ஓரிரு காட்சிகளுக்குக் கூட கேட்கவில்லை. இந்த வாரம் சொல்லிக் கொள்ளும்படியான நான்கைந்து படங்களாவது வருமா என்பது சந்தேகமாகவே உள்ளது. இதுவரை வெளியான அறிவிப்புகளின்படி 'ரெபல், சிட்டு' ஆகிய … Read more

என்னடா இது அமரன் படத்துக்கு வந்த சிக்கல்?.. கமல் ஹாசனுக்கு இப்படி ஒரு தலைவலியா?

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. பிரின்ஸ் படத்தின் தோல்வியால் ரொம்பவே துவண்டிருந்த சிவகார்த்திகேயன் மாவீரன், அயலான் என்று வரிசையாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்து மீண்டும் எழுந்துவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். படத்திலிருந்து அப்டேட்டுகள் சமீபத்தில் வெளியாகின. சிவகார்த்திகேயன் டாப்

விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள்

வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், இன்று விஜய் விமானத்தில் திருவனந்தபுரத்துக்கு சென்றார். அப்போது அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் படையெடுத்தனர். அதோடு படப்பிடிப்பு நடைபெறும் கிரிக்கெட் மைதானத்தை சுற்றிலும் ரசிகர்கள் பெருந்திரளாக கூடி உள்ளார்களாம். இதன் … Read more