Captain Vijayakanth: என்னை சாப்பிட வைத்து அழகு பார்த்த தாய் விஜயகாந்த்.. எம்எஸ் பாஸ்கர் நெகிழ்ச்சி!

சென்னை: கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 28ம் தேதி தன்னுடைய 71வது வயதில் காலமானார். திரைத்துறை பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி விஜயகாந்த் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் இட நெருக்கடி காரணமாக தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட போது சாலையில் இரு பக்கமும்

Mohan: `ஹரா'வில் சாமானியனாகக் குரல் கொடுக்கும் மோகன் – சில்வர் ஜூப்ளி ஸ்டாரின் கம்பேக் பட அப்டேட்!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சில்வர் ஜூப்ளி ஹிட்ஸ் கொடுத்தவர் மோகன். ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘உதயகீதம்’, ‘தென்றலே என்னைத் தொடு’ எனப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அந்தப் படத்தின் பாடல்கள் இன்னமும் பலரின் ஃபேவரைட்டாக உள்ளன. கடந்த 2008-ல் ‘சுட்டபழம்’ படத்தில் நடித்த மோகன், அதன்பின் பல வருடங்களாக நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு ‘தாதா’ படத்தின் இயக்குநர் விஜய் ஶ்ரீ சொன்ன கதை அவருக்குப் பிடித்துப்போக, ‘ஹரா’வில் கமிட் … Read more

வீரம் படத்திற்கு பிறகு இணையும் வெற்றி கூட்டணி!

நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தனது 63வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2014ல் அஜித் நடித்த 'வீரம்' படத்திற்கு … Read more

வடிவேலு மாதிரி நடின்னு சொன்னார்.. ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் தான்.. கருணாஸ் கர்ஜனை!

சென்னை: விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கருணாஸ் ஆரம்பத்தில் இருந்தே விஜயகாந்த்தால் தான் சினிமாவில் வளர்ந்து வந்தேன். ஒரு சாதாரண துணை நடிகனை கூட பெரிய நடிகனாக சினிமாவில் வளர வேண்டும் என நினைத்தவர் விஜயகாந்த் என பேசினார். ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் தான் என பேசி அரங்கத்தையே அலற விட்டு

விஜயகாந்த்: "`புலன் விசாரணை' படத்தில் நடித்தபோது அவர் என்னிடம் சொன்னது…" – சரத்குமார்

தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், நடிகருமான புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி மறைந்தார். இந்நிலையில் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் சிறப்பு நினைவேந்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் நடிகரும் முன்னாள் நடிகர் சங்கத் தலைவருமான சரத்குமார். இதுகுறித்து பேசிய அவர், “இப்படி ஒரு நிகழ்வில் நாம் கலந்து கொள்வோம் என வாழ்நாளில் நினைத்திருக்க மாட்டோம். பலருக்கும் மாபெரும் இழப்பு இது. ‘புலன் விசாரணை’ படத்தில் நான் அவருடன் … Read more

அன்னபூரணிக்கு எதிர்ப்பு : ‛யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல…' – வருத்தம் தெரிவித்தார் நயன்தாரா

நயன்தாராவின் 75வது படமாக ‛அன்னபூரணி' கடந்தாண்டு இறுதியில் திரைக்கு வந்தது. இதில் சமையல்கலை நிபுணராக நயன்தாரா நடித்தார். அவருடன் ஜெய், சத்யராஜ் ஆகியோரும் நடித்தனர். தியேட்டரை விட்டு வெளியேறிய இந்தபடம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் ஒரு காட்சியில் பிராமண பெண்ணான நயன்தாராவை இறைச்சி சாப்பிட வைக்க கடவுள் ராமர் கூட இறைச்சி சாப்பிட்டார் என்ற வசனம் இடம் பெற்றிருந்தது. மேலும் நயன்தாரா ஒரு அர்ச்சகரின் மகள். ஆனால் அவர் நமாஸ் செய்கிறார் என்றும், இந்து … Read more

Captain Vijayakanth: பள்ளி பாடப்புத்தகத்தில் விஜயகாந்த் குறித்த பாடம் வேண்டும்.. ஜெயம் ரவி கோரிக்கை!

சென்னை: நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு இறுதியில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவையொட்டி எராளமான நடிகர்கள், நடிகைகள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று மாலை விஜயகாந்தின் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதிலும் எராளமான நடிகர்கள், நடிகைகள் கலந்துக் கொண்டு, தங்களது அஞ்சலியை விஜயகாந்தின் படத்திற்கு செலுத்தினர்.

விஜயகாந்த்: "கடைசி நாள்களில் அவருடைய பாட்டை அவரே கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்!" – விஜய பிரபாகரன்

மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்வு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய இவ்விழாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எனத் திரையுலகினர் பலரும் கலந்துகொண்டு விஜய்காந்திற்கு அஞ்சலி செலுத்தி அவரின் நினைவுகள் குறித்து மனம் திறந்து பேசினர். இந்நிலையில் இவ்விழாவில் எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கண்கலங்கியபடி பேசிய அவரின் மகன் விஜய பிரபாகரன், “சின்ன வயசுல இருந்து என் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தது விட அப்பாவைத்தான் அதிகமாகப் பார்த்திருக்கேன். எனக்கு … Read more

மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்ட பிரியங்கா நல்காரி

ரோஜா சீரியல் நடிகையான பிரியங்கா நல்காரி தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக இருக்கிறார். காதலரை திருமணம் செய்து கொண்ட அவர் வெளிநாட்டில் செட்டிலாக போவதாக கூறியிருந்தார். ஆனால், தற்போது அதே சேனலில் நளதமயந்தி என்கிற புதிய தொடரில் கமிட்டாகி நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மேக்கப் இல்லாமல் சிம்பிளாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதிலும் கியூட்டாக இருக்கும் பிரியங்காவுக்கு தற்போது லைக்ஸ்கள் குவிகின்றன.

விஜயகாந்த் மகன் படத்துல நடிக்க ரெடி.. உலக நாயகன் கேப்டன்.. நினைவேந்தல் நிகழ்ச்சியில் விஷால் பேச்சு!

சென்னை: நடிகர் சங்கம் சார்பில் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், அவரது படத்தில் கேமியோ ரோலிலோ அல்லது இணைந்து முழு படத்தில் நடிக்கவோ நானும் ரெடி தான் என உறுதியளித்துள்ளார்.