Vidaamuyarchi Update – ரசிகர்களின் வெயிட்டிங் ஓவர்.. வெளியானது விடாமுயற்சி படத்தின் சூப்பர் அப்டேட்..
சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் படம் பற்றி வெளியாகவில்லை. இந்த சூழலில் லைகா நிறுவனம் சார்பில் விடாமுயற்சி பற்றி சூப்பர் அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது.