விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று ஆறுதல் சொன்ன சிவகுமார், சூர்யா, கார்த்தி : கலங்கிய சூர்யா

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த வாரம் மறைந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவும் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்களில் சிலர் வெளிநாடுகளில் இருந்தனர். வருட இறுதி நாட்கள், புத்தாண்டு என குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தார்கள். அதனால், வர இயலவில்லை என்ற தகவல் வெளியானது. தற்போது ஒவ்வொருவராக வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சரத்குமார், சசிகுமார், சிவகுமார், கார்த்தி ஆகியோர் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கடந்த இரண்டு … Read more

கலைஞர் 100 விழாவுக்கு விஜய் வருவாரா?.. விஷால், சிம்பு எல்லாம் வரமாட்டாங்களாம்.. ஏன் தெரியுமா?

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழா நாளை (ஜனவரி 6) பிரம்மாண்டமாக கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு நேரில் சந்தித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர் விஜய் பங்கேற்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும், யாரெல்லாம் கலந்து

விதிமுறை மீறி கொடைக்கானலில் பங்களா : பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா மீது அரசு நடவடிக்கை

சினிமா நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா கொடைக்கானலில் அனுமதியின்றி விதிகளை மீறி பங்களாக்கள் கட்டுவதாக தாக்கலான வழக்கில்,'சீல்' வைக்க, கட்டடத்தை அகற்ற மேல்நடவடிக்கை எடுக்கப்படும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு முகமது ஜூனைது தாக்கல் செய்த பொதுநல மனு: கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி பேத்துறைப்பாறையில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவிற்கு சொந்த நிலம் உள்ளது. அதில் இருவரும் பங்களாக்கள் கட்டுகின்றனர். அரசுத்துறையிடமிருந்து கட்டட அனுமதி பெறவில்லை. மலைப்பகுதியில் … Read more

உங்க அம்மா தங்கச்சியா இருந்தா விடுவீங்களா.. கேப்டன் மில்லர் ஹீரோயின் பிரியங்கா மோகன் கேள்வி!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். கடந்த 2022ம் ஆண்டு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் ஒரு படமும் வெளியாகாத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் உருவாகி

இப்படி ஒரு மனிதனை இனிமேல் பார்க்க முடியுமா? – விஜயகாந்த்திற்கு செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி புகழஞ்சலி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் அரசியல் கட்சி தலைவரான கேப்டன் விஜயகாந்த் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் பிரபலங்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்த குவிந்தனர். இந்நிலையில், அவரது இறப்பு அன்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத பலரும் தற்போது அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாடகர்களான செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி தம்பதியினர் விஜயகாந்த் காலமான போது தாங்கள் வெளிநாட்டில் கச்சேரியில் … Read more

Director Ravikumar: அயலான் வொர்க்கை பார்த்து குஷியான ஏஆர் ரஹ்மான்.. ரவிக்குமார் பெருமிதம்!

சென்னை: நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகவுள்ளது அயலான் படம். இந்தப்படம் கடந்த 4 ஆண்டுகளாக உருவாகிவந்த நிலையில் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் மிகப்பெரிய அளவில்

ராமர் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி செல்கிறார் ரஜினி

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு தமிழக பா.ஜ., சமூக ஊடக பார்வையாளரும், சிவகங்கை லோக்சபா தொகுதி மேலிட பொறுப்பாளருமான அர்ஜூன மூர்த்தி அழைப்பிதழை வழங்கினார். இதனையடுத்து, ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மனைவி மற்றும் சகோதரருடன் 21ம் … Read more

Actor Ajith: விடாமுயற்சி அடுத்தக்கட்ட சூட்டிங்.. திரிஷா கேரக்டர் பெயர் என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் அஜித், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடர்ந்து அசர்பைஜானில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து இரு ஷெட்யூல்களாக அசர்பைஜானில் நடத்தப்பட்ட நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சில தினங்கள் படக்குழுவினர் இடைவெளி எடுத்துக் கொண்டனர். இந்நிலையில் மீண்டும் வரும் 7ம் தேதி முதல் படத்தின் அடுத்தக்கட்ட

இனி ஹீரோவாகத் தான் நடிப்பேன் : காளிதாஸ் ஜெயராம்

நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ், தனது ஏழு வயதில் ‛கொச்சு கொச்சு சந்தோஷங்கள்' என்ற மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் . பின்னர், 'என் வீடு அப்புவிண்டேயும்' படத்தில் நடித்தார். இது அவருக்கு சிறந்த குழந்தை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுத் தந்தது . 2016ம் ஆண்டில், மீன் குழம்பும் மண் பானையும்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சினிமாவில் அறிமுகமாகி பல வருடங்கள் ஆனாலும் காளிதாசுக்கு இன்னும் உரிய இடம் கிடைக்கவில்லை. … Read more

Ayalaan trailer: ஏலியனுடன் கைக்கோர்த்த சிவகார்த்திகேயன்.. வெளியானது அயலான் பட ட்ரெயிலர்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படம் பொங்கலையொட்டி வரும் 12ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படம் முன்னதாக தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளதாக இருந்த நிலையில் படத்தின் சிஜி வேலைகள் நிறைவடையாததால் தற்போது பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.