லியோ படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லை! திமுக அரசு தான் காரணமா?

Leo Audio Launch: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சில தவிர்க்க முடியாத காரணங்களால் நடைபெறாது என படக்குழு அறிவித்துள்ளது.  

ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது

ஆர்யா நடித்து வரும் வெப் தொடர் 'தி வில்லேஜ்'. நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இந்த தொடரை இயக்குகிறார். வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் தவிர திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், ஜார்ஜ், ஜான் கொகேன் உள்பட பலர் நடிக்கிறார்கள். சக்தி ஸ்டூடியோ சார்பில் ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார். கிராமிய பின்னணியில் உருவாகும் திகில் ஹாரர் தொடர். தற்போது இதன் பணி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த தொடரின் முதல் பார்வை … Read more

Nithya Menon: விஜய் போன்ற நடிகர்களுடன் நடிப்பது மிகவும் சுலபம்.. நித்யா மேனன் பளீச்!

சென்னை: நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மட்டுமில்லாமல் இந்தியிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2006ம் ஆண்டில் கன்னட மொழியில் நாயகியாக நடித்து அறிமுகமான நித்யா மேனன், தொடர்ந்து தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். விஜய், சூர்யா, தனுஷ், ராகவா லாரன்ஸ், துல்கர் சல்மான், உள்ளிட்ட நடிகர்களுடன் தமிழில் நடித்துள்ள

மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களது மகன்களான உயிர், உலக் ஆகிய இருவரின் புகைப்படங்களையும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். பல மாதங்களாக அவர்களின் முகத்தை காண்பிக்காமல் புகைப்படம் வெளியிட்டவர்கள், தற்போது அவர்களின் முகத்தை காண்பிக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள். இன்றைய தினம் தங்களது மகன்களான உயிர் மற்றும் உலக் ஆகிய இருவரையும் தங்களது கையில் வைத்தபடி நயன்தாராவுடன் தான் ரொமான்ஸ் செய்யும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இந்த புகைப்படத்தை அவர் … Read more

Thalapathy68: பீஸ்ட்.. லியோ.. இப்ப தளபதி68.. வெங்கட் பிரபுவின் மாஸ்டர் பிளான்!

சென்னை: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்தப் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்தப் படத்தின் இசை வெளியீடை வரும் 30ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படம் சர்வதேச அளவில் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளது. இதையொட்டி படத்தின் பிரமோஷன்களும்

ஜெயசுதாவின் செல்போனை பிடுங்கி வைத்த மோகன்பாபு : வைரலாகும் வீடியோ

தெலுங்கு திரையுலகின் மறைந்த மூத்த நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவின் நூறாவது பிறந்தநாள் சமீபத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மகேஷ்பாபு, ராம்சரண் உள்ளிட்ட இளம் முன்னணி நடிகர்களும் கூட இந்த விழாவில் தவறாமல் கலந்து கொண்டனர். அந்தவகையில் அந்த விழாவில் வில்லன் நடிகர் மோகன் பாபு மற்றும் குணச்சித்திர நடிகை ஜெயசுதாவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். மேடையேறி பேசிக்கொண்டிருந்த பிரபலங்கள் அனைவரும் … Read more

Dadasaheb Phalke Award: பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

மும்பை: பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவின் பொற்காலத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் வஹீதா ரெஹ்மான். இவர் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தார். இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த இவரின் தந்தை மாவட்ட நீதிபதி ஆவார். நடிகை வஹீதா ரஹ்மான்: மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்த

ஹிந்தித் திரையுலகை ஒரே ஆண்டில் இரண்டு முறை மீட்ட ஷாரூக்கான்

இந்தியத் திரையுலகம் என்றாலே ஹிந்தித் திரையுலகம் என ஒரு காலத்தில் இருந்தது. தென்னிந்தியாவில் இருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல தரமான படங்கள் வந்தாலும் அவற்றிற்கான அங்கீகாரமும் வசூலும் பெரிய அளவில் கிடைக்காமல் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு நிலையை ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 2' படம் முறியடித்தது. ஹிந்திப் படங்கள் புரியாத வசூல் சாதனையை ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியான அந்தப் படம் புரிந்தது. அப்படத்தின் வசூல் சாதனை ஹிந்தித் திரையுலகத்தை … Read more

SJ Suryah salary: இந்த டீல் நல்லா இருக்கே.. காசுக்கேத்த தோசை.. அதுவும் ஹீரோன்னா இப்படியொரு ஆஃபரா?

சென்னை: விஜய்சேதுபதிக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் சமீபத்தில் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உருவாகி இருக்கிறது. இந்த இருவரும் நடிப்பில் மிரட்டி வந்தாலும், அவர்கள் ஹீரோவாக நடிக்கும் படங்கள் பெரிதாக ஓடுவதில்லை. ஆனால், வில்லனாக நடிக்கும் படங்கள் பேய் ஹிட் அடித்து வருகின்றன. மாஸ்டர், விக்ரம், ஜவான் என விஜய்சேதுபதி ஒரு பக்கம் வெயிட்டு காட்டி வர, மெர்சல், மாநாடு,

புதுமுகங்களின் 'முனியாண்டியின் முனிப்பாய்ச்சல்'

ஸ்ரீஆண்டாள் மூவீஸ் சார்பில் வீர அமிர்தராஜ் தயாரிக்கும் படம் 'முனியாண்டியின் புலிப்பாய்ச்சல்'. தமிழக கிராமத்து தெய்வங்களில் முக்கியமான தெய்வமான முனியாண்டி சாமியின் பக்தனாக, முனியாண்டி கோயிலில் குறி சொல்லுபவராக கதையின் நாயகனாக ஜெயகாந்த் நடிக்கிறார். சாரா ராஜ் கதையின் நாயகியாக நடிக்கிறார். வில்லனாக சண்டைப்பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார். சிங்கம்புலி, முத்துக்காளை முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சவுந்தர்யன் இசை அமைக்கிறார், ராம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா முகமது இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, “காந்தாரா படம் … Read more