த்ரிஷா to சாய் பல்லவி…இன்னும் திருமணம் செய்து கொள்ளாத தமிழ் நடிகைகள்..!

Single Actress In Tamil Cinema: தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் சிலர் திருமணம் ஆகாமல் சிங்கிளாக உள்ளனர். அவர்கள் யார் யார் தெரியுமா..?   

ரஜினி 170வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் இதோ

நடிகர் ரஜினிகாந்தின் 170வது படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் . இதில் அமிதாப்பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது விறுவிறுப்பாக இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் முதல் வாரத்தில் திருவனந்தபுரம் பகுதியில் தொடங்குவதாக கூறப்படுகிறது. இதையடுத்து கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் படப்பிடிப்பு … Read more

சில்க் ஸ்மிதா நினைவு தினம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உயிர்த்தெழுந்த விஜயலட்சுமி!

சென்னை: விஜயலட்சுமியாக சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வாழ்க்கை முழுவதும் வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து வந்த நிலையில், வினு சக்கரவர்த்தி வண்டி சக்கரம் படத்தில் அறிமுகப்படுத்த தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே என்றென்றும் நீங்காத இடத்தை பிடித்துள்ள சில்க் ஸ்மிதாவின் 27வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1960ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ஆந்திராவில்

மலையாளத்தில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய க்ரைம் திரில்லர் படங்கள்!

சினிமா ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் கிரைம் த்ரில்லர்களை எடுப்பதில் புகழ் பெற்றது மலையாள சினிமாகாரர்கள். மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த சிறந்த க்ரைம் திரில்லர் படங்கள் இதோ:  

பணத்திற்காக கேவலமான நோக்கத்தோடு பரப்புகின்றனர் : சாய்பல்லவி காட்டம்

மலையாள ‛பிரேமம்' படம் மூலம் பிரபலமான நடிகை சாய் பல்லவி, தமிழில் மாரி 2, என்ஜிகே, கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்தார். மலையாளம், தமிழை விட தெலுங்கில் தான் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். அடுத்து பாலிவுட்டிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ராணுவம் தொடர்பான கதையில் இந்த படம் தயாராகிறது. இதுதவிர தெலுங்கிலும் சில படங்கள் கைவசம் வைத்துள்ளார். … Read more

Blue Sattai Maran: \"ஒரேயொரு பேய் காமெடி கான்செப்ட்..” ராகவா லாரன்ஸை உருட்டிய ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை பி வாசு இயக்கியுள்ளார். இந்நிலையில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், H வினோத், நெல்சன் ஆகியோரை ராகவா லாரன்ஸ் பாராட்டியிருந்தார். இதனை குறிப்பிட்டு ராகவா லாரன்ஸை பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

கணவருடன் பிரிவா? – புகைப்படம் வெளியிட்டு பதிலடி கொடுத்த நவ்யா நாயர்

தமிழில் ராதா மோகன் இயக்கிய அழகிய தீயே என்கிற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை நவ்யா நாயர். தொடர்ந்து சேரனுடன் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2010ல் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு. இரண்டு வருடங்களுக்கு முன்பு 'ஒருத்தி' என்கிற படத்தின் மூலம் நடிப்பிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார் நவ்யா நாயர். கேரளாவில் சுங்கத்துறையில் இணை ஆணையராக இருந்த சச்சின் சாவந்த் … Read more

Kerala Boycott Leo: கேரளாவில் பாய்காட் லியோ… இதுதான் காரணமா..? விஜய்க்கு எதிராக பொங்கிய சேட்டன்ஸ்!

சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் நடித்துள்ள லியோ, அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில், கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நேற்று முதல் லியோ படத்துக்கு எதிராக ‘Kerala Boycott Leo’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. கேரளாவில் லியோ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதன் காரணம் தற்போது

ஜப்பானில் மனித வேட்டை

கார்த்தியின் 25வது படம் 'ஜப்பான்'. ராஜு முருகன் இயக்குகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகிறது. படம் பற்றி கார்த்தி கூறியிருப்பதாவது: ஒரு கிரைம் திரில்லராக உருவாகும் இப்படம் மனித வேட்டையையும் உள்ளடக்கியது. ஆனால் இதையெல்லாம் தாண்டி இப்படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் ஆழமாக பின்னப்பட்டுள்ளன. மேலும் பல ஆரவாரமான அம்சங்களும் கொண்ட தனித்தன்மை கூட்டணியாக உருவாகி வருகிறது. துணிச்சலான மற்றும் உற்சாகமான அதேசமயம் ஆர்ப்பாட்டமில்லாத இந்த கதாபாத்திரமும் இயக்குநர் … Read more

Karthi: மீண்டும் இணையும் மெட்ராஸ் பட சூப்பர் காம்போ.. எப்போ அறிவிப்புன்னு பாக்கலாங்களா?

சென்னை: நடிகர் கார்த்தி மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் கடந்த 2014ம் ஆண்டில் வெளியான படம் மெட்ராஸ். வட சென்னை மக்களின் வாழ்வியலை படம்போட்டு காட்டியது இந்தப் படம். கார்த்திக் கேரியரில் பெஸ்டாக அமைந்தது. படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்தரின் தெரேசா நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.