அடுத்தடுத்து ரிலீஸாகும் பிரபுதேவாவின் படங்கள்

பிரபுதேவா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‛மை டியர் பூதம்' படம் வரவேற்பை பெற்றது. இதில் பூதமாக பிரபுதேவா நடித்திருந்தார். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பால் பிரபுதேவாவின் படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். இருதினங்களுக்கு முன் இவர் நடித்துள்ள பஹிரா படம் ஆக.,11ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவர் நடித்துள்ள மற்றொரு படமான 'பொய்க்கால் குதிரை' ரிலீஸையும் அறிவித்துள்ளனர். 'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்', 'இரண்டாம் குத்து' ஆகிய படங்களை இயக்கிய … Read more

பாராட்டுகளை உணர்வால் வெளிப்படுத்திய ரசிகர்கள்: சாய்பல்லவி நெகிழ்ச்சி

கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சாய் பல்லவி, ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன், காளி வெங்கட், இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சாய் பல்லவி பேசியதாவது: பத்திரிகையாளர்கள் படத்தை பற்றி மட்டுமல்லாமல், நடிகர்கள், வசனம், தொழில்நுட்பம் என்று அனைத்து பணிகளை பற்றியும் பாராட்டி எழுதியதற்கு மிக்க நன்றி. மக்களிடம் … Read more

புதுமுகங்களின் ஆகாசவாணி சென்னை நிலையம்

மிதுனா எண்டர்டெயின்மெண்ட்ஸ், சயின்ஸ் ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ள படம் ஆகாச வாணி சென்னை நிலையம். இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடா, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. சதீஷ் பத்துலா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். சிவக்குமார், உம்மைசந்தர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அக்ஷதா ஸ்ரீதர், அர்ச்சனா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் மாதவி லதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆரிப் ஒளிப்பதிவு செய்கிறார், கார்த்திக் கொடக்கண்ட்லா இசை அமைக்கிறார். … Read more

"மலைகளையும் காடுகளையும் பாடிக் கொண்டே இருப்பேன்" – யார் இந்த பாடகி நஞ்சியம்மா?

மலைகளையும் காடுகளையும் பாடிக் கொண்டே இருப்பேன் என்று கூறிய பழங்குடியின பாடகி நஞ்சியம்மா, ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார். அனுபவமே பாடல் வரிகள், உணர்வுகளே மெட்டு, இயற்கையே இசை…. இப்படியான ஒரு பாடல் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது… காடு மலைகளில் அலைந்து திரிந்து, உழைப்பின் களைப்பகல, உள்ள மொழியால் பாட்டிசைக்கும் பழங்குடியினத்தின் பாட்டி நஞ்சியம்மா சிறந்த பாடகிக்கான தேசிய விருதை வென்றிருக்கிறார்.. சுதி பிசகாமல், சுரஸ்தானங்களில் கவனம் சிதறாமல் பாடிய பல பாடல்கள் தேசிய விருதுகளை வென்றிருக்கின்றன. பாடறியேன் படிப்பறியேன் என்ற பாடலுக்காக, முறையாக இசை பயின்று … Read more

உலகமே எதிர்பார்க்கும் வெப் தொடர்: செப்.,2ல் வெளியாகிறது

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படம் லார்ட் ஆப் ரிங்ஸ். இந்த படம் 3 பாகங்களாக வெளிவந்தது. தற்போது இதன் அடுத்த பாகம் தி ரிங்ஸ் ஆப் பவர் என்ற பெயரில் வெப் தொடராக தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் 2ம் தேதி ஓடிடியில் உலகளவில் வெளியிடப்படவுள்ளது. 8 பாகங்கள் கொண்ட இத்தொடரில் கலாட்ரியல் (மார்ஃபிட் கிளார்க்), எல்ரோன்ட் (ராபர்ட் அராமயோ), ஹை கிங் கில்-கலாட் (பெஞ்சமின் வாக்கர்), தி ஹார்ஃபூட்ஸ் மேரிகோல்ட் பிராண்டிஃபுட் (சாரா ஸ்வாங்கோபானி), எலனோர் 'நோரி' … Read more

கோலிவுட் ஸ்பைடர்: `வாரிசு' விஜய் – எஸ்.ஜே.சூர்யா; சூர்யா, கார்த்தி இணையும் மெகா ஓ.டி.டி புராஜக்ட்?

* அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ படம் அடுத்த மாதம் 11ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். அந்தப் படத்தை உதயநிதியின் தயாரிப்பு நிறுவனம் வெளியிடுகிறது. இதற்கிடையே அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தையும் உதயநிதியே வாங்கியிருப்பதால், அதுவும் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இரண்டுமே பெரிய படங்கள் என்பதால் என்ன செய்வது என யோசித்ததில் இப்போது ‘கோப்ரா’ ரிலீஸைத் தள்ளி வைத்துவிட்டதாகப் பேச்சு கிளம்பியிருக்கிறது. கோப்ரா படத்தில்… * விஜய்யின் ‘வாரிசு’ … Read more

நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு

பிரண்ட்ஷிப் படத்திற்கு பிறகு தற்போது மேதாவி என்ற படத்தில் நடித்து வரும் அர்ஜுன், மலையாளம் , தெலுங்கு, கன்னட படங்களிலும் பரவலாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று பெங்களூரில் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி உடல் நலக்குறைவால் காலமானார். 85 வயதான லட்சுமி தேவி உடல்நலம் பாதிக்கப்பட்டு பெங்களூர் ஜெயா நகர் நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமாகி இருக்கிறார். இதையடுத்து பெங்களூரில் உள்ள அர்ஜுனின் சொந்த ஊரான மதுகிரி … Read more

எல்லாம் இருக்கு ஆனால் நிம்மதி இல்லை – ரஜினிகாந்த் வருத்தம்

சென்னை : சென்னையில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், ‛‛பணம், பேர், புகழ் என என் வாழ்வில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால் 10 சதவீதம் கூட நிம்மதி கிடைக்கவில்லை'' என்றார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டார். அதன்பின்னர் இந்த விழாவில் அவர் பேசியதாவது : யோகா நிகழ்ச்சிக்கு … Read more

நீதிமன்றத்தை குறை சொல்வதா?: நடிகைக்கு கோர்ட் கண்டனம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்பட 9 பேர் செய்யப்பட்டனர். இதில் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். இந்த வழக்கு எர்ணாகுளம் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தனி நீதிமன்றத்தில் முறையான விசாரணை நடக்கவில்லை என்றும், வழக்கை திசை திருப்ப முயற்சி நடக்கிறது என்றும் கூறி, பாதிக்கப்பட்ட நடிகை சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் … Read more

நீங்களும் ஸ்டார் ஆகலாம் : ஜீ தமிழில் துவங்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 4

சென்னை : ஜீ தமிழ் எப்போதும் தனது பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதோடு சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் போட்டியாளர்களின் திறமையை வெளிப்படுத்த பொருத்தமான தளங்களை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் ஜூலை 30ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. சாமானிய மக்களில் இருந்து … Read more