”இந்த பாட்டை அவர்தான் பாடியிருக்கணும்.. வேறு வழியில்லாம” – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ARR!

சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருக்கும் பத்து தல படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் விழாவின் நாயகனான பத்து தல படத்துக்கு இசையமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் கிருஷ்ணா, நடிகை ப்ரியா பவானி சங்கர், இயக்குநரும் நடிகருமான கவுதம் மேனன், சந்தோஷ் பிரதாப் என பலரும் பங்கேற்றிருந்தார்கள். இந்த படம் வருகிற மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விழாவின் போது நடிகர் சிம்பு … Read more

மகேஷ்பாபு படத்தில் இணைந்த ஜெயராம்

நடிகர் மகேஷ்பாபு தற்போது தெலுங்கில் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அவரது 28வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் கதாநாயகிகளாக பூஜா ஹெக்டே மற்றும் சம்யுக்தா இருவரும் நடித்து வருகின்றனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் ஜெயராம் இணைந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் மகேஷ்பாபு மற்றும் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் … Read more

Thalapathy Vijay: விஜய் விக் வச்சு தான் நடிக்கிறார்: காரணம் இல்லாம இல்ல

குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்தவர் விஜய். வளர்ந்த பிறகு அவரை ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தார் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர். முதல் சில வருடங்கள் அப்பாவின் உதவியால் நிலைத்து நின்ற விஜய் அதன் பிறகு தன் சொந்த காலில் நிற்க ஆரம்பித்தார். தன் கடின உழைப்பால் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஆனார். அந்த இடத்தை பல ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அண்மைச் … Read more

மகளின் திருமணத்தை லைவ்வாக நடத்திய ஆஷா சரத்

மலையாளத்தில் திரிஷ்யம் படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். அந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம், அதைத்தொடர்ந்து கமலின் தூங்காவனம், பின்னர் த்ரிஷ்யம்-2 ஆகிய படங்களிலும் நடித்தார் முன்னைப்போல தற்போது அதிக அளவில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் இப்போதும் சீரான இடைவெளியில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஆஷா சரத். இவரது மகள் உத்ரா வெளிநாட்டில் அக்கவுண்ட்ஸ் சம்பந்தப்பட்ட படிப்பை படித்துள்ளார். அம்மாவைப் போலவே நடனத்திலும் சிறந்த பயிற்சி பெற்றுள்ள இவர் ஒரு படத்திலும் … Read more

நயன்தாராவின் 75வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் – வெளியான தகவல்!

நயன்தாராவின் 75-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று முதல் துவங்கியுள்ளது.  தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவரான நயன்தாரா, கடைசியாக ‘கனெக்ட்’ என்ற ஹாரர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும், ‘ஜவான்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். வருகிற ஜுன் 2-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகை நயன்தாரா அறிமுகமாகவுள்ளார். மேலும், ஜெயம் ரவியின் … Read more

வைரலாகும் விக்னேஷ் சிவனின் பதிவு!

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரலாகி வருகிறது. ‛நானும் ரவுடிதான்' படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' பாடலை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார் விக்னேஷ் சிவன். அதில் குறிப்பாக 'கெடைச்சத இழக்குறதும், இழந்தது கெடைக்குறதும்' எனும் வரிகளை வைத்திருக்கிறார். அஜித்குமார் நடிக்கும் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்த நாளில் விக்னேஷ் சிவன் இந்த சோகமான பாடல் வரிகளை வைத்திருப்பது சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rajamouli: ஆஸ்கர் விழாவை காண ஆர்.ஆர்.ஆர். டீமுக்கு இலவச பாஸ் இல்ல: தலைக்கு ரூ. 20 லட்சம் கொடுத்த ராஜமவுலி?

No free Oscar passes for RRR team:தன் பட பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை பார்க்க பெரும் தொகையை செலவு செய்து டிக்கெட் வாங்கியிருக்கிறார் எஸ்.எஸ். ராஜமவுலி. ​நாட்டு நாட்டு​எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் நடித்த ஆர்.ஆர். ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை பெற்ற முதல் இந்திய பட பாடல் நாட்டு … Read more

ரகுவரன் குறித்து நினைவு கூர்ந்த ரோகிணி

தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ரகுவரன். 1982ல் வெளிவந்த 'ஏழாவது மனிதன்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, குணச்சித்திரக் கதாபாத்திரங்கள், வில்லன் கதாபாத்திரங்கள் என பலவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென தனி ஒரு இடத்தைப் பிடித்தவர். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பிற மொழிகளிலும் நடித்தவர். 2008ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி திடீரென மறைந்தார். அவரது மறைவு இந்தியத் திரையுலகிற்கே ஒரு பேரிழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்குப் … Read more

ராம் சரண் முன் 'நாட்டு நாட்டு' நடனமாடிய பிரபுதேவா குழு

ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. விருது வாங்கிய பின் படக்குழுவினர் ஒவ்வொருவராக இந்தியா திரும்பினர். 'ஆர்ஆர்ஆர்' படத்தின் நாயகர்களில் ஒருவரான ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு மீண்டும் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது. அதற்காக நடன ஒத்திகை ஒன்று நடைபெற்று வருகிறது. நடன இயக்குனர்கள் பிரபுதேவா, கணேஷ் ஆகியோர் அதைச் … Read more

விஜய்யின் பிகில் ஃப்ளாப் படமா? அர்ச்சனா கல்பாத்தி பேச்சும் வைரலாகும் வீடியோவும்!

விக்ரம், பொன்னியின் செல்வன் போன்ற நேரடி தமிழ் படங்களால் தமிழ் சினிமா துறையின் வளர்ச்சி கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருக்கிறது என்றாலும் கொரோனாவுக்கு முன்பும் கொரோனாவுக்கு பின்பும் வந்த படங்கள் சிலவற்றால் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் முழுமையான லாபத்தையும் நஷ்டத்தையும் பெறாமலேயே இருந்தார்கள் என்பது படங்களின் வசூல் நிலவரங்கள் குறித்த தகவல்களின் மூலம் அறிய முடியும். குறிப்பாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நடிகர் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் என்னதால் நூற்றுக்கணக்கான கோடிகளில் வசூலை வாரிக்குவித்தாலும் … Read more