பஹத் பாசில் படத்தை இயக்கும் ரோமாஞ்சம் இயக்குனர்
மலையாள திரையுலகில் சமீப நாட்களாக குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து 50 முதல் 100 கோடிகளை அசால்ட்டாக அள்ளி வருகிறார்கள். அதுமட்டுமல்ல அந்த படத்தின் இயக்குனர்களுக்கு அடுத்து மிகப்பெரிய ஹீரோக்களின் படங்களை இயக்கும் வாய்ப்பும் தானாக தேடி வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான ரோமாஞ்சம் என்கிற திரைப்படம் ஐந்து கோடி பட்ஜெட்டில் உருவாகி இப்போது வரை 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஜித்து மாதவன் என்பவர் இயக்கியுள்ளார். … Read more