Leo: ஒரு வேளை அப்படி இருக்குமோ? திடீரென லியோ படத்திற்கு விளம்பரம் செய்த பிரபல நடிகர்!

பிரபல நடிகர் திடீரென லியோ படத்தை புகழ்ந்து டிவிட்டியிருப்பது வைரலாகி வருகிறது. லியோமாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ பிளடி ஸ்வீட். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் , நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் … Read more

கதை நாயகன் ஆனார் எம்.எஸ்.பாஸ்கர்

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் எம்.எஸ்.பாஸ்கர். டப்பிங் கலைஞரான இவர் சினிமாவில் குணச்சித்திரம், காமெடி, வில்லன் என்று பல்வேறு கேரக்டர்களில் நடித்தார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க கூடியவர் என்ற பெயர் எம்.எஸ்.பாஸ்கருக்கு உண்டு. இதுவரை சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், தற்போது 'அக்கரன்' என்ற படத்தில் முதல்முறையாக கதையின் நாயகனாக நடிக்கிறார். அவரது மகள்களாக 'பள்ளிப் பருவத்திலே' வெண்பா, பிரியதர்ஷினி நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் கபாலி விஷ்வந்த், நமோ நாராயணன், ஆகாஷ் பிரேம் … Read more

AK 62, Vignesh Shivan: கையிலேயே வெண்ணெய் இருக்கு… விக்னேஷ் சிவனின் அதிரடி திட்டம்!

ஏகே 62 படத்திலிருந்து நீக்கப்பட்ட பிறகு விக்னேஷ் சிவன் அதிரடி திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏகே 62தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்குவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. லைகா புரடெக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் கூறிய கதையில் திருப்தியாகாத அஜித், கதையை மாற்றுமாறு கூறி 8 மாதம் அவகாசம் கொடுத்ததாகவும் அப்போதும் விக்னேஷ் சிவன் … Read more

முதல் மலையாள நடிகை பி.கே.ரோஸியை கவுரவித்த கூகுள்

கூகுள் நிறுவனத்தின் முகப்பு பக்கம் உலக புகழ்பெற்றது. அந்த பக்கத்தில் இடம்பெறும் டூடுல் மிகவும் கவனிக்கப்படும். உலகில் பல்வேறு துறையில் சிறந்தவர்களை இந்த டூடுல் மூலம் கூகுள் கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில் நேற்று மலையாள சினிமாவின் முதல் நாயகியான பி.கே.ரோஸியின் படத்தை வெளியிட்டு கவுரவித்துள்ளது. ரோஸியின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த டூடுலை வெளியிட்டுள்ளது. யார் இந்த ரோஸி?இந்தியாவுக்குள் சினிமா வருவதற்கு முன்பு நாடகங்கள்தான் மக்களின் பொழுதுபோக்காக இருந்தது. பெண்கள் நடிக்க மாட்டார்கள். நடிக்க அனுமதியும் … Read more

Dada Movie: அமோக வரவேற்பை பெறும் கவினின் 'டாடா': இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்.!

சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமானவர் கவின். இதனையடுத்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மூன்றாவது சீசனில் போட்டியாளராக நுழைந்த இவருக்கென்று தனியொரு ரசிகர்கள் பட்டாளமே உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவின் நடிப்பில் ‘லிப்ட்’ என்ற படம் வெளியானது. ஹாரர் த்ரில்லர் படமாக வெளியான ‘லிப்ட்’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஆகாச வாணி என்ற வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்தார். இந்த தொடரும் ஹிட்டடித்தது. அண்மைச் … Read more

Dada: அப்படியே அந்ந படத்தோட அட்ட காப்பி… டாடா படத்தை கழுவி ஊற்றிய ப்ளுசட்டை மாறன்!

கவின் நடிப்பில் வெளியாகியுள்ள டாடா படத்தை வச்சு செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். கவின் நடிப்பில்விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா வாய்ப்புகளை பெற்று வருகிறார் கவின். அந்த வகையில் கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது டாடா திரைப்படம் வெளியாகியுள்ளது. ​ Dada Review: டாடா படம் பிடிக்கலன்னா.. … Read more

Thangalaan: பல நூறு வருடங்கள் கழித்து.. மாஸ் காட்டும் 'தங்கலான்' பட நடிகை.!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்கள் கவனம் ஈர்த்தவர் பா. ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் சமூக பிரச்சனைகள் குறித்து பேசுபவை. கடைசியாக துஷாரா விஜயன், கலையரசன், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கியிருந்தார் பா. ரஞ்சித். தற்போது விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விக்ரம். இவர் நடிப்பில் கடந்த வருடம் ‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ படங்கள் … Read more

5 மாநிலங்களில் 5 ஆடம்பர பங்களா.?: தனது சொத்து மதிப்பு குறித்து ராஷ்மிகா கொடுத்த அதிர்ச்சி.!

கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான ராஷ்மிகா, ‘சுல்தான்’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் உள்ளனர். கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்ட ராஷ்மிகா, கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் … Read more

LEO: 'லியோ' படம் குறித்து மரண மாஸ் தகவல் சொன்ன அர்ஜுன்: தரமான சம்பவம் கன்பார்ம்.!

விஜய்யின் ‘லியோ’ படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப்படம் குறித்த அறிவ்ப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் உள்ளனர். கடைசியாக வெளியான ‘வாரிசு’ படத்தில் பேமிலி சென்டிமெண்டில் கலக்கிய விஜய், தற்போது லோகேஷ் இயக்கத்தில் ஆக்ஷன் ஜானரில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய்யை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். தளபதி 67 என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப்படத்திற்கு ‘லியோ’ என தலைப்பு வைக்கப்பட்ட டைட்டில் வீடியோ அண்மையில் … Read more

இது யாரோ ஒருவரின் கற்பனை – திருமண நிச்சயம் குறித்து பிரபாஸ் விளக்கம்

பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் 'ஆதி புரூஷ்' படத்தில் நடிகர் பிரபாசும், நடிகை கிருத்தி சனோனும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் சைப் அலிகான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் ஜூன் 16ல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தில் நடித்தபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதை கிர்த்தி மறுத்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயம் விரைவில் நடைபெறவிருக்கிறது என … Read more