வடிவேலுவின் தாயார் மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

நடிகர் வடிவேலுவின் தாயாரின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நடிகர் வடிவேலுவின் அன்புத்தாயார் சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா, மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவுக் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். ‘வைகைப் புயல்’ வடிவேலுவுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் … Read more

கமல் – மணிரத்னம் இணையும் படத்தில் 7 மாநில ஹீரோக்கள்!

விக்ரம் படத்தை அடுத்து தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதையடுத்து மணிரத்னம், பா.ரஞ்சித், எச்.வினோத் உட்பட பல இயக்குனர்களிடத்தில் கதை கேட்டுள்ளார். இதில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் அவரது 234வது படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் 7 மாநிலங்களைச் சார்ந்த பிரபல ஹீரோக்கள் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த பிரபல ஹீரோக்களில் ஏற்கனவே கமலுடன் ஹேராம் படத்தில் நடித்த ஷாருக்கானும் ஒருவர். அதோடு … Read more

ரஜினிகாந்த், சூர்யா இருவரில் யாரை அடுத்து இயக்கப் போகிறார் த.செ.ஞானவேல்?

‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில், நடிகர் சூர்யாவும் மீண்டும் அவருடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. ‘கூட்டத்தில் ஒருவன்’, ‘ஜெய்பீம்’ உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் த.செ.ஞானவேல். உண்மைக் கதையை மையமாகக் கொண்டு இவர் இயக்கிய ‘ஜெய்பீம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததுடன், அந்தப் படத்தை தயாரித்தும் இருந்தார் நடிகர் சூர்யா. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு, அமேசான் … Read more

பெற்றோரிடம் மகன்களுடன் ஆசீர்வாதம் வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். பொங்கல் பண்டிகை கொண்டாடியது குறித்து சில புகைப்படங்களுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மறக்க முடியாத ஒரு பொங்கலாக இருக்கும் என நினைக்கிறேன். மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புடன் இருக்க கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். பொங்கல் வைத்தது, மாட்டுக்கு பொங்கல் வைத்து வணங்கியது, மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் பெற்றோர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் ஆகியோரிடம் ஆசீர்வாதம் வாங்கியது உள்ளிட்ட புகைப்படங்களைப் … Read more

கல்லூரி விழா மேடையில் தவறாக நடக்க முயன்ற மாணவர் – அதிர்ச்சியான நடிகை அபர்ணா பாலமுரளி!

கேரளாவில் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட நடிகை அபர்ணா பாலமுரளியிடம், மாணவர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஹத் பாசிலின் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான மலையாள நடிகையாக வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி. இவர், தமிழில் ‘எட்டு தோட்டாக்கள்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நிலையில், தொடர்ந்து ஜி.வி. பிரகாஷின் ‘சர்வம் தாளமயம்’, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, ‘தீதும் நன்றும்’, ஆர்.ஜே.பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’, அசோக் … Read more

துணிவு – தெலுங்கில் வெற்றிப் படமா?

வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், அஜித்குமார், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'துணிவு'. இப்படம் தெலுங்கில் 'தெகிம்பு' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு தமிழில் வெளியான அன்றே தெலுங்கிலும் வெளியானது. ஆனால், தெலுங்கில் எதிர்பார்த்தபடி வரவேற்பையும் பெறவில்லை, வசூலையும் பெறவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை சுமார் 3 கோடிக்கும் கொஞ்சம் கூடுதலாக விற்கப்பட்டுள்ளது என்று டோலிவுட் வட்டாரத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் … Read more

மீண்டும் மோதப்போகும் விஜய் – அஜித்? அப்போ அடுத்த சம்பவம் காத்திருக்கு

இந்த ஆண்டு பொங்கல் ஸ்பெஷல் படங்களாக அஜித்தின் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விஜய் – அஜித் படங்கள் ஒன்றாக வெளியானதால், ரசிகர்கள் யாரின் படம் அதிக வசூல் பெறுகிறது என்பதை தினமும் கவனித்து வருகின்றனர். அடுத்த வாரத்துக்குள் எந்தப் படம் அதிக வசூல் பெற்றுள்ளது என்பது தெரிந்துவிடும். இப்போது வாரிசு 210 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளதாக தகவல் வெளியானது. அதே போல துணிவு படமும் வசூலில் … Read more

Bigg Boss Tamil Season 6: அசீம் – ஷிவின்..இந்த முறை டைட்டில் வின்னர் யார்?

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 போட்டி மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கியது. தற்போது இந்த சீசனில் 5 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். மேலும் இந்த ஐந்து போட்டியாளர்கள் தற்போது இறுதிப்போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதில் இறுதிப்போட்டி வரை சென்றுக்கொண்டு இருந்த கதிர் 3 லட்சம் ரூபாய் பண மூட்டையுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதால், ஆட்டம் இன்னும் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் யாருக்கு என்ற போட்டியில் ஷவின் – … Read more

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்!

மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) பாப்பா (87) நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார்.  இந்த சம்பவம் வடிவேலு குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  மதுரை விரகனூர் அருகே வடிவேலுவின் தாயார் சரோஜினி (87) வசித்து வந்தார். இவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று இரவு திடீரென உடல் குறைவு காரணமாக காலமானார்.  யாருக்கும் சிரமம் தராமல் பொங்கல் முடிந்தவுடன் எனது … Read more

ஜனவரி 20: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்: திரையரங்கு(Theatre) வல்லவனுக்கும் வல்லவன் (தமிழ்) – ஜனவரி 20 Ayisha (மலையாளம்) – ஜனவரி 20 Broker (Korean) – ஜனவரி 20 Puss In Boots: The Last Wish (ஆங்கிலம்) … Read more