ஜான்வியின் பொங்கல் வாழ்த்துக்கு 1 மில்லியன் லைக்ஸ்

'துணிவு' படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் மட்டுமே இதுவரை நடித்து வருகிறார். தென்னிந்தியப் படங்களில் நடிக்க வேண்டும் என்று அடிக்கடி ஜான்வி கூறி வந்தாலும் இன்னும் எந்தப் படத்திலும் நடிக்க சம்மதிக்காமல் இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களைப் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர் ஜான்வி. அதனால், அவருக்கு அதிகமான பாலோயர்கள் இருக்கிறார்கள். மும்பையிலேயே பிறந்து வளர்ந்தாலும் தனது அம்மா ஸ்ரீதேவியின் தென்னிந்தியத் தொடர்பை அடிக்கடி … Read more

2 பில்லியன் வசூலை நெருங்கும் 'அவதார் 2'

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த மாதம் உலகம் முழுவதும் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'அவதார் த வே ஆப் வாட்டர்'. இப்படம் தற்போது வரை 1.9 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் 15460 கோடி. அமெரிக்காவில் மட்டும் 572 மில்லியன் வசூல், அமெரிக்கா தவிர மற்ற உலக நாடுகளில் 1.35 பில்லியன் வசூலித்துள்ளது இந்தப் படம். இப்போது 'ஸ்பைடர் மேன் – நோ வே ஹோம்' படத்தின் வசூலைக் கடந்து … Read more

ஏஆர் ரஹ்மான் ஸ்டுடியோவில் தவறி விழுந்து ஒருவர் பலி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் ஏஆர்ஆர் பிலிம்சிட்டி என்ற பெயரில் ஸ்டுடியோ ஒன்று உள்ளது. இங்கே படப்பிடிப்புகளும் நடக்கின்றன. சத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்' படத்திற்கான படப்பிடிப்புக்கு இந்த ஸ்டுடியோவில் செட் அமைக்கும் பணி நடக்கிறது. படப்பிடிப்பிற்கு 40 அடி உயரத்தில் மின்விளக்கு பொருத்தும் பணியில் லைட் மேன் ஒருவர் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராவிதமாக அவர் தவறி விழுந்தததில் உயிரிழந்தார். விபத்து குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

'வாரிசு' – தெலுங்கில் வெற்றிப் படமா ?

விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'வாரிசு'. இப்படம் தமிழில் வெளியான மூன்று நாட்களுக்குப் பிறகே தெலுங்கில் வெளியானது. தமிழில் கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் அதன் பின் தெலுங்கில் வெளியானால் அது படத்தின் வசூலை பாதிக்குமோ என்று அச்சப்பட்டார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தெலுங்கு ரசிகர்களுக்குப் படம் பிடித்துள்ளது என்பது அப்படத்திற்குக் கிடைத்த வசூலை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது. நான்கு நாட்களில் … Read more

ஜெய்சல்மரில் துவங்கிய மலைக்கோட்டை வாலிபன் படப்பிடிப்பு

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான புலி முருகன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது வழக்கமான படங்களில் இருந்து மாறி, புலிக்கும் மனிதனுக்கும் உண்டான பகை என்பதை மையப்படுத்தி ஒரு பேண்டஸி படமாக இந்த படம் உருவாகி இருந்ததால் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. அதன்பிறகு மோகன்லாலிடமிருந்து அப்படி ஒரு படம் எப்போது வரும் என எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அதேபோன்ற கௌபாய் கதையம்சம் கொண்ட மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தில் மோகன்லால் … Read more

எனக்கும் ராம்சரணுக்கும் வொர்க் அவுட்டான பிசிக்ஸ் : ஜூனியர் என்டிஆர்

சினிமாவை பொறுத்தவரை நாயகன் நாயகி மட்டுமல்லாமல் இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிக்கும்போதும் அவர்களது காம்பினேசன் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றால் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி அழகாக ஒர்க் அவுட் ஆனது என்று சொல்வார்கள். ஆனால் தனக்கும் ராம்சரணுக்குமான நட்பில் பிசிக்ஸ் வொர்க் அவுட் ஆகி உள்ளது என்று கூறியுள்ளார் நடிகர் ஜூனியர் என்டிஆர். ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் இவர்கள் இருவரும் சம முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய … Read more

ஜல்லிக்கட்டு பரிசு : காருக்கு பதில் விவசாய கருவி, மாடு, நிலம் வழங்கலாம் – தங்கர் பச்சான்

தமிழகத்தின் பெருமை மிகு பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. பொங்கலை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. குறிப்பாக மதுரையில் நடக்கும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலம். இந்த போட்டிகளில் வெற்றி பெறுவர்களுக்கு பரிசு வழங்கப்படுகின்றன. குறிப்பாக அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு முதல்பரிசாக கார் வழங்கப்படுகிறது. இதற்கு பதிலாக அந்த வீரருக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், நிலங்களை வழங்கலாம் என இயக்குனர் தங்கர்பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை … Read more

தனுஷின் 50வது படத்தின் அறிவிப்பு – மீண்டும் வெற்றிக் கூட்டணி… இயக்குநர் இவரா?

தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக, அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ‘மாறன்’, ‘தி கிரே மேன்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ உள்ளிட்ட 4 படங்கள் வெளியானது. இதில், ‘மாறன்’ படுதோல்வியை சந்தித்தது. ‘நானே வருவேன்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், தனுஷின் நடிப்பு பலரையும் கவர்ந்ததுடன், அவருக்கு ஹாலிவுட்டில் … Read more

ரூ.200 கோடி வசூலை கடந்த ‛வாரிசு

விஜய் நடித்துள்ள வாரிசு படம் 7 நாளில் ரூ.200 கோடி வசூலை கடந்துள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்து பொங்கல் விருந்தாக ஜன., 11ல் வெளியான படம் ‛வாரிசு'. தமிழ், தெலுங்கில் உருவாகி வெளியான இப்படம் குடும்ப சென்டிமென்ட் நிறைந்த படமாக உருவாகி இருந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் பொங்கல் தொடர் விடுமுறையால் தியேட்டர்களில் வரவேற்பு நன்றாகவே இருந்தது. முதல் … Read more

ஜெயிலர் படத்தில் இணைந்த சுனில்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஒரேநாளில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு என ஏற்கனவே ரஜினி படங்களில் நடித்தவர்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளார்கள். அதே சமயம் கன்னட திரை உலகின் முன்னணி நடிகராக இருக்கும் சிவராஜ்குமார் இந்த படத்தில் வில்லனாக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லால் … Read more