விஜய் படத்தில் களமிறங்கும் ‛பிக்பாஸ்' ஜனனி

வாரிசு படத்திற்கு பின் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். விஜய்யின் 67வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. ஆனால் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வாரிசு படத்திற்காக இதுநாள் வரை படத்தின் அப்டேட் வெளியிடாமல் இருந்து வந்த லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இனி ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகி … Read more

கண்ணகியில் 4 ஹீரோயின்கள்

அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கும் படம் கண்ணகி. இதில் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா, கீர்த்தி பாண்டியன் ஆகிய 4 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர வெற்றி, ஆதிஷ் நடிக்கிறார்கள். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ஷான் ரகுமான் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் கிஷோர் கூறியதாவது: வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் வெவ்வேறு தளங்களில் வாழும் பெண்கள் என்ன மாதிரியான முடிவை எடுக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் பெண் … Read more

சன்னிதானத்தில் தொடங்கிய சன்னிதானம் படம்

ஐய்யப்பன் பக்தி படங்கள் தற்போது அதிக அளவில் தயாராகிறது. மலையாளத்தில் வெளிவந்த மாளிகைபுரம் படம் பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. அந்த வரிசையில் தமிழில் தயாராகும் படம் சன்னிதானம் பி.ஓ. சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ராஜீவ் வைத்யா இயக்குகிறார். படத்தின் துவக்க விழா பூஜை மகரவிளக்கு ஜோதி … Read more

பணம் வருகிறது என நடித்தேன் : பிரியா பவானி சங்கர்

மேயாதமான் படம் மூலம் தமிழில் நாயகியாக களமிறங்கிய பிரியா பவானி சங்கர் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். தமிழை தாண்டி தெலுங்கிலும் கால்பதித்துள்ள இவர் ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. எதிர்காலத்தை பற்றி பெரிய திட்டங்கள் எதுவும் இல்லாமல் சினிமாவிற்கு வந்தேன். ரசிகர்கள் ஏற்பார்களா, இல்லையா என்று யோசிக்கவில்லை. நடித்தால் பணம் வருகிறது என நினைத்து, நடித்தேன். சினிமா பின்னணி உள்ளவர்களே சினிமாவில் தங்களை … Read more

அரவணைப்பில் என் குடும்பம் : விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்

கடந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தின் போது தங்களது இரட்டை குழந்தைகளுடன் தாங்கள் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். அதேபோல் தற்போது பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில், தன்னுடைய ஒரு கையின் அரவணைப்பில் நயன்தாராவும், இன்னொரு கையில் இரண்டு குழந்தைகளையும் பிடித்திருக்கிறார். அதோடு மகாநதி படத்தில் இடம்பெற்றுள்ள பொங்கலோ பொங்கல் என்ற பாடலையும் அதில் அவர் இணைத்திருக்கிறார். அதேசமயம் வழக்கம் போல் … Read more

ஜிகர்தண்டா 2 : எஸ்.ஜே. சூர்யா கொடுத்த அப்டேட்

2014ம் ஆண்டு சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வெளியான படம் ஜிகர்தண்டா. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பெயரில் அவர் இயக்கி வருகிறார். இதில் நாயகனாக ராகவா லாரன்சும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது 36 நாட்களில் ஒரே ஷெட்யூலில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது குறித்து எஸ் .ஜே .சூர்யா வெளியிட்டுள்ள ஒரு பதிவில், … Read more

விக்ரம் பிரபுவின் புதிய படம் ‛இறுகப்பற்று'

கடந்த ஆண்டு வெளியான டாணாக்காரன் படம் விக்ரம் பிரபுக்கு நல்ல படமாக அமைந்தது. அதன்பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து வெளிவரும் படம் இது. இதுதவிர ரெய்டு படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் இந்த ஆண்டு வெளிவருகிறது. பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் விக்ரம் பிரபு கேரக்டர் பெரிய அளவில் இடம்பெறும் என்கிறார்கள். இந்த நிலையில் விக்ரம் … Read more

விஜய் 67 படத்தில் மிஷ்கின்

வாரிசு படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில் வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இயக்குனர் மிஷ்கினும் விஜய்- 67 வது படத்தில் தான் வில்லனாக நடித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் அவர் … Read more

ஜோவுக்காக 2 வருடம் காத்திருக்கும் ரியோ ராஜ்

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ரியோ ராஜ். அறிமுகமாகன நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, அதன்பிறகு நடித்த பிளான் பண்ணி பண்ணனும் என்ற இரு படங்களும் பெரிதாக கைகொடுக்காத நிலையில் தற்போது நடித்து வரும் படம் ஜோ. அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்க, விஷன் சினிமா ஹவுஸ் அருளானந்து தயாரிக்கிறார். படம் குறித்து ரியோ ராஜ் கூறும்போது “கதையின் நாயகன் 'ஜோ'வின் பள்ளிக் காலத்தில் இருந்து அவனது திருமணத்திற்குப் பிந்தைய நாட்கள் வரையிலான காதல் பயணத்தை … Read more

13 சர்வதேச விருதுகளை வென்ற ‛லேபர்' படம் ஓடிடியில் வெளியானது

ராயல் பார்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'லேபர்' படத்தை அறிமுக இயக்குனர் சத்தியபதி இயக்கியுள்ளார். முத்து, சரண்யா ரவிச்சந்திரன், ஆறுமுக முருகன், திருநங்கை ஜீவா சுப்பிரமணியன், கயல்விழி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிகில் தினகரன் இசையமைத்துள்ளார். இது தமிழகத்தில் வாழும் கட்டிட தொழிலாளர்கள் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் . இந்தப் படத்திற்கு 13 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. குளோஸ் அப் காட்சிகள் இன்றி எடுக்கப்பட்ட முதல் படம். சில ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்ட இந்த படம் … Read more