கிக் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தை அடுத்து பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்து வரும் புதிய படம் கிக். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடிக்க, செந்தில், கோவை சரளா, ஒய்.ஜி. மகேந்திரன், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஆக்சன் கலந்த காமெடி கதையில் உருவாகி உள்ள இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை சந்தானம் நடித்த படங்களில் இந்த படம் பிரமாண்ட பட்ஜெட்டில் … Read more

லால் சலாம் படத்தில் முஸ்லிம் வேடத்தில் ரஜினி

நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது. இந்த படத்தை அடுத்து தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் என்ற படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் ரஜினி ஒரு … Read more

தாத்தா, பேரனாக நடிக்கும் மிர்ச்சி சிவா

யோகி பாபுவின் நண்பர் முத்துக்குமரன். கன்னிராசி படத்தை இயக்கிய இவர் அதன்பிறகு யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த தர்மபிரபு படத்தை இயக்கினார். தற்போது அவர் இயக்கி வரும் படம் சலூன். இதில் மிர்ச்சி சிவா, யோகி பாபு, நயன் கரிஷ்மா நடித்துள்ளனர். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். படம் குறித்து இயக்குனர் முத்துக்குமரன் கூறியதாவது: வெள்ளைக்காரன் காலத்தில் பார்பராக இருந்த அய்யன்காளிக்கு அந்தக் காலத்தில் அவர் நினைத்த காரியங்களை செய்ய முடியவில்லை. … Read more

அடுத்த மாதம் ரிலீசாகிறது ஜெயம் ரவியின் ‛அகிலன்'

பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில், ஜெயம் ரவி மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள படம் அகிலன். இதன் படப்பிடிப்பு கடந்த வருடமே முடிவடைந்துவிட்டது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறையின் போதே படம் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். பிப்ரவரி 17 அல்லது 24ம் தேதி வெளியாகலாம் என்று தெரிகிறது. இந்த படத்தில் ஜெயம்ரவி கடல்கொள்ளை கேங்ஸ்டராக நடிக்கிறார். பிரியா பவானி … Read more

பி.வாசு இயக்கும் சரித்திர படத்தில் ரஜினி?

பி வாசு இயக்கத்தில் பணக்காரன், மன்னன், சந்திரமுகி, குசேலன் போன்ற படங்களில் நடித்தவர் ரஜினி. அதன்பிறகு சந்திரமுகி 2 படத்தில் அவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாம் பாக கதைகளில் பெரிதாக நம்பிக்கை இல்லாத ரஜினி, அந்த படத்தில் நடிக்க மறுத்து விடவே தற்போது சந்திரமுகி 2 படத்தை ராகவா லாரன்ஸை நாயகனாக வைத்து இயக்கி வருகிறார் பி.வாசு. இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நாயகியாக நடிக்கிறார். சமீபகாலமாக பாகுபலி, ஆர்ஆர்ஆர், பொன்னியின் செல்வன் … Read more

தெலுங்கில் அடித்து நொறுக்கும் வீர சிம்ஹா ரெட்டி

பொங்கல் மற்றம் மகர சங்கராந்தியை முன்னிட்டு ஆந்திராவில் பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி, சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா, விஜய் நடித்த வாரசுடு, அஜித் நடித்த துணிவு படங்கள் வெளியாகி இருக்கிறது. முதல் இரு நாட்கள் அந்தந்தத நடிகர்களின் ரசிகர் தியேட்டரை நிரப்பினார்கள். ஆனால் அடுத்து நாளில் இருந்து நிமிர்ந்து நிற்பது வீர சிம்ஹா ரெட்டியே. முதல் நாளே 32 கோடி வசூலித்து எல்லோரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்றேறிக் கொண்டிருக்கிறார் சிம்ஹா ரெட்டி. ஆச்சார்யா, காட்பாதர் … Read more

சபரிமலையில் அஜித்தின் இன்றைய, நாளை இயக்குனர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அவர் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த 'துணிவு' படம் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படத்தை இயக்குனர் வினோத் இயக்கியிருந்தார். பட வெளியீட்டிற்குப் பின் இயக்குனர் வினோத், தனது நண்பர் இயக்குனர் இரா.சரவணனுடன் சபரிமலை சென்றுள்ளார். சபரிமலைக்குச் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட வீடியோவையும் சரவணன் பகிர்ந்துள்ளார். அங்கு ஐயப்பனுக்கு புஷ்பாபிஷேகமும் செய்துள்ளார். அஜித்தின் அடுத்த படமான அஜித் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். அவரும் … Read more

பதான் படத்திற்காக ஜப்பானிய மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்ற ஷாருக்கான் – தீபிகா

ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் என்பவர் இயக்கி உள்ளார். தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க, ஜான் ஆபிரகாம் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பேஷ்ரங் என்கிற பாடல் பரபரப்பான சர்ச்சையை கிளப்பியதுடன் படத்திற்கு கூடுதல் பப்ளிசிட்டியையும் கொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் கூறும்போது, தான் எப்போதும் படங்களில் சண்டைக் காட்சியை … Read more

சங்கராந்தி பண்டிகையை ஒட்டி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்!

உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் சேவையைத் தரக்கூடிய  நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தற்போது 2023-ல் தன்னிடம் உரிமம் இருக்கக்கூடிய 16 தெலுங்கு படங்களின் லைன்- அப் மற்றும் ஓடிடி வெளியீடு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்த பின்னர், இல்லத்திரைகளிலும் இந்தப் படங்கள் மக்களை மகிழ்விக்க இருக்கிறது. திரையரங்குகளில் தங்களுக்குப் பிடித்த கதாநாயகர்களை பார்த்து ரசித்த மக்கள் தற்போது வீட்டிலும் பார்த்து ரசிக்க இருக்கிறார்கள்.  சங்கராந்தி பண்டிகையை ஒட்டி இந்த புதிய 16 படங்களின் டைட்டில் க்ளிம்ப்ஸை … Read more

ஐந்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் அஞ்சலி

கடந்த 15 ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகில் தாக்குப்பிடித்து நிற்கும் வெகு சில கதாநாயகிகளில் நடிகை அஞ்சலியும் ஒருவர். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அஞ்சலி கடந்தாண்டு பால்ஸ் என்கிற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருந்தார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் படத்திலும் கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் அஞ்சலி. ஏற்கனவே மலையாளத்தில் 2010ல் பையன்ஸ், 2018 இல் ரோசாப்பூ என இரண்டு படங்களில் நடித்துள்ள அஞ்சலி தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலையாள … Read more