மீண்டும் 17 முறை நாட்டு கூத்து நடனமாட தயார் : ராம்சரண்

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் கடனட வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டு விருதுகளை அள்ளி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நாட்டுக்கூத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. மரகதமணியின் இசையில் உருவான இந்த பாடலுக்கு ராம்சரணும் ஜூனியர் என்டிஆரும் ஹூக் ஸ்டெப்ஸ் முறையில் அதிவிரைவு நடனம் ஆடியிருந்தார்கள். இந்த நடனத்தை ஹாலிவுட்டில் … Read more

'வாரிசு' வசூல் போட்டவர்களுக்கு 'துணிவு' வினியோகஸ்தர் பதிலடி

விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு படங்கள் சில நாட்களுக்கு முன்பு ஜனவரி 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 'வாரிசு' படம் மட்டும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் அன்று வெளியாகாமல் இன்றுதான்(ஜன., 14) வெளியானது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே எந்தப் படம் அதிக வசூலைக் குவிக்கிறது என்பது குறித்து 'நம்பர் கேம்' சண்டை ஆரம்பமானது. படம் வெளியான முதல் நாளில் 'துணிவு' படத்தின் வசூல் அதிகம் என்றும், இரண்டாம் நாளில் … Read more

’கடவுளை சந்தித்துவிட்டேன்’ ஸ்டீவன் ஸ்பீல்பெர்கை நேரில் பார்த்து பூரித்துபோன ராஜமௌலி

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. வசூல் ரீதியாக உலகளவில் இடம்பிடித்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், மேக்கிங்கிற்காகவும் பாராட்டுகளை பெற்றுள்ளது. மேலும், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் அண்மையில் கோல்டன் குளோப் விருதையும் வென்று அசத்தியது. சிறந்த அசல் பாடலுக்கான விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் ரிஹானா, லேடி காகா மற்றும் டெய்லர் ஸ்விஃப்ட் ஆகியோரின் பாடல்களை கடந்து வெற்றி பெற்றது.  pic.twitter.com/NYsNgbS8Fw — rajamouli … Read more

'காந்தாரா' ரிஷப் ஷெட்டிக்கு கமல்ஹாசன் பாராட்டு

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்தாண்டு கன்னடத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் 'காந்தாரா'. கன்னடத்தில் வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகே மற்ற மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தைப் பாராட்டி கமல்ஹாசன் இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு ஒரு பாராட்டுக கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தைப் பகிர்ந்து ரிஷப் ஷெட்டி, “இந்திய சினிமாவின் ஜாம்பவானிடமிருந்து இப்படி ஒரு அன்பான மெசேஜ் கிடைக்கப் பெற்றதற்கு நிறைய அர்த்தம் உண்டு. … Read more

பொங்கலுக்கு அரிசி பருப்பா கேட்டோம்… கதறி அழும் ரசிகர்கள்!

Pongal 2023: இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் துணிவு, விஜய் நடிப்பில் வாரிசு என இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. திரையரங்களை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து வருவது கண்கூடாக தெரிகிறது.  பொங்கல் விடுமுறை ஏற்கெனவே, தொடங்கிவிட்டதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக திரையரங்கள் நிரம்பி வருகின்றன. இதையொட்டி, போகி பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், அடுத்த மூன்று நாள்களும் கொண்டாட்டம் நீடிக்கும். உலகப்புகழ் பெற்ற மதுரை … Read more

அமெரிக்கா செல்லும் மாமனிதன் படக்குழு

மாமனிதன் திரைப்படம் அமெரிக்காவில் 29 ஆண்டுகளாக நடைபெறும் பெருமை மிகு பாரம்பரிய செடோனா சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகிறது. மாமனிதன் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி அவர்களையும் மற்றும் …

மலையாள திரைப்பட பாடலாசிரியர் ஸ்ரீகுமாரன் தம்பிக்கு சபரிமலை "ஹரிவராசனம்" விருது!

மலையாள திரையுலகின் பிரபல பாடலாசிரியரும் இயக்குனருமான ஸ்ரீ குமாரன் தம்பிக்கு 2022ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் சபரிமலை “ஹரிவராசனம்” விருது வழங்கப்பட்டுள்ளது. சபரிமலை சன்னிதானம் ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில் கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், ஸ்ரீ குமாரன் தம்பிக்கு விருது வழங்கி கவுரவித்தார். விருதோடு இணைந்த ஒரு லட்சம் ரூபாய் பரிசுக்கிழியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சபரிமலை “ஹரிவராசனம் விருது” என்பது, கடந்த 2012ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் பின்னணி பாடகர் கே.கே.ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், … Read more

தெலுங்கில் இன்று 'வாரிசு' பிரம்மாண்ட வெளியீடு

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள 'வாரிசு' படம் கடந்த 11ம் தேதி உலகம் முழுவதும் தமிழில் வெளியானது. நேற்று ஜனவரி 13ம் தேதி ஹிந்தியில் வெளியானது. இன்று ஜனவரி 14ம் தேதி தெலுங்கில் வெளியாகிறது. அதோடு ஆந்திரா, தெலங்கானாவில் 'வாரிசு' தமிழ்ப் பதிப்பும் வெளியாகிறது. இந்த வருட பொங்கலுக்கு தெலுங்கில் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படங்களுடன் இந்த 'வாரிசு' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'வாரசுடு' படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது … Read more

’செருப்பால் அடிப்பேன்’ என ஆளுநரை அநாகரீகமாக பேசிய திமுக பேச்சாளர் மீது புகார்

திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை விருகம்பாக்கத்திலும் நடைபெற்றது. இதில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடும் சொற்களால் பேசினார். சட்டப்பேரவையில் ஆளுநர் தவிர்த்த வார்த்தைகளை குறிபிட்டு பேசிய அவர், ஆளுநரையும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என அனைவரையும் ஒருமையில் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுக்கும் தொனியிலும், அச்சில் ஏற்ற முடியாத ஆபாச வார்த்தைகளையும் அடுக்கு மொழியில் … Read more