”தைரியமா இருங்க.. ஓடுற படம் ஓடும்” – நெல்சனுக்கு ரஜினி கூறிய அட்வைஸ்.. ஏன் தெரியுமா?

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் தற்போது ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கும் அனிருத்தான் இசையமைக்கிறார். ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன், ரவீணா ரவி என பல நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்தில் மலையாள சினிமாவின் மூத்த மற்றும் உச்ச நட்சத்திரமான மோகன் லாலும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் ஷூட்டிங் வேலைகளெல்லாம் படு … Read more

வாரிசில் குஷ்பு மிஸ்சிங்: ரசிகர்கள் ஏமாற்றம்

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் வெளியீடாக ஜன., 11ல் வெளியாகி உள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தில் ராஜு தயாரித்துள்ளார். நான் விஜய் படத்தில் நடிக்கிறேன் என்று குறிப்பிட்ட பல நட்சத்திரங்களை படத்தில் காணவில்லை. குறிப்பாக பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற சம்யுக்தா ஒரே ஒரு … Read more

தல 62 vs தளபதி 67; இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸா?

விஜய் நடிப்பில் வாரிசும், அஜித் நடிப்பில் துணிவு படம் ஒன்றாக பொங்கல் விருந்தாக ரிலீஸாகியுள்ளது. இரண்டு படங்களுக்கும் ஏகபோக எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியாவதற்கு முன்பே போஸ்டரில் தொடங்கிய யுத்தம் ரிலீஸ் தேதி வரை தொடர்ந்தது. டீசர் மற்றும் டிரெய்லர் என இரண்டு படங்களையும் கொண்டாடி தீர்த்த ரசிகர்கள், இப்போது வெளியாகியிருக்கும் இரண்டு படங்களையும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து தங்களின் எதிர்பார்ப்பை ஆசுவாசப்படுத்திக் கொண்டுள்ளனர். வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை … Read more

மரகதமணியுடன் சாதாரணமாக நிகழ்ந்த சந்திப்பு : சிலிர்க்கும் வினீத் சீனிவாசன்

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான படம் ஆர்ஆர்ஆர். இதில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது தான் இரு தினங்களாக திரும்பிய பக்கம் எல்லாம் பேச்சாக இருக்கிறது. தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட்டில் இருந்தும் கூட படக்குழுவினருக்கும் இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கீரவாணிக்கு (மரகதமணி) பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் நடிகர் வினீத் சீனிவாசன் படக்குழுவினருக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதுடன் இசையமைப்பாளர் மரகதமணியை தான் முதன் முதலாக … Read more

சிறந்த ஆளுமை விருது பெற்ற கார்த்தி

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஒருவருக்கு அந்த ஆண்டின் சிறப்பான மனிதருக்கு ஆளுமை விருது வழங்கி வருகிறது. 2022ம் ஆண்டுக்கான சிறந்த ஆளுமை விருதை நடிகர் கார்த்திக்கிற்கு வழங்கியது. கார்த்தி அவரது உழவன் பவுண்டேஷன் மூலம் செய்து வரும் சமூக பணிகளுக்கும், விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என அடுத்தடுத்து மூன்று வெற்றிப் படங்கள் கொடுத்ததற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறந்த களப்பணி ஆற்றி வரும் விவசாயிகளை அடையாளம் கண்டு, … Read more

வாரிசா? துணிவா? பொங்கல் வெற்றியாளர் யார்?

2023-ம் ஆண்டின் பொங்கல் விஜய் ரசிகர்களுக்கா அல்லது அஜித் ரசிகர்களுக்கா என்கிற போர் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்தது.  வெகு நாட்களாகவே வாரிசு பொங்கல் vs துணிவு பொங்கல் என்கிற தலைப்பு தான் பலரது கண்களில் பட்டும், காதுகளில் கேட்டும் இருக்கும்.  ஒருவழியாக இரண்டு படங்களும் வெளியாகிவிட்டது, படம் வெளியானபோதிலும் இன்னும் இந்த பிரச்சனை தணியவில்லை.  இந்த ஆண்டு பொங்கலின் வெற்றியாளர் வாரிசா? துணிவா? என்கிற பேச்சு எழுந்துகொண்டு தான் இருக்கிறது.  ஹெச் வினோத் இயக்கத்தில் … Read more

நேருக்கு நேர் மோதிக்கொண்ட அஜித் விஜய் படங்கள்: மாஸ் காட்டிய விஜய்! அடிவாங்கிய அஜித்!

அஜித் – விஜய் படங்களான துணிவும், வாரிசும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி பட்டையை கிளப்பி வருகின்றன. ஹவுஸ்புல் காட்சிகள், ரசிகர்கள் கொண்டாட்டம் என திரையரங்குகள் திருவிழா போல காட்சியளிக்கிறது. இந்த இரண்டு படங்களில் அதிக கலெக்‌ஷனை எந்தப்படம் அள்ளப்போகிறது என்பது தான் ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே கவலை. இந்தச்சூழலில் அஜித் – விஜய் சினிமா பயணத்தில் இவர்கள் இருவரின் படங்களும் இதற்கு முன் ஒன்றாக வெளியானது எப்போது? அந்தப்படங்களில் வெற்றி மகுடம் சூடியது யார் என்பதை தற்போது … Read more

”குடும்பம்னா ஜனநாயகம் வேணும்; இந்த மாதிரி படங்களே வரக்கூடாது”- பெண்ணின் நச் விமர்சனம்!

விஜய்யின் 66வது படமாக கடந்த ஜனவரி 11ம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது வாரிசு. வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் ஜெயசுதா, சரத்குமார், ராஷ்மிகா, யோகிபாபு, ஷாம் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். சிறப்புக் காட்சி முதற்கொண்டு விஜய் ரசிகர்கள் வாரிசு பட வெளியீட்டை ஆரவாரத்தோடு கொண்டாடித் தீர்த்து வரும் அதே வேளையில், படத்தின் கதை மீது கலவையான விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இப்படி இருக்கையில், … Read more

விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

விஜய் ரசிகர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த ‘வாரிசு’ படம் திரையரங்குகளில் வெளியாகி பல குடும்பங்களை கவர்ந்துள்ளது.  வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.  படம் வெளியாவதற்கு முன்பு எப்படி வாரிசு vs துணிவு என்கிற போட்டி இருந்து வந்ததோ, அதேபோல படம் வெளியாகிய பின்னரும் இந்த போட்டி இருந்து வருகிறது.  ‘துணிவு‘ படம் வெளியாவதற்கு முன்னரே ஜனவரி 10ம் தேதி இரவன்று வாரிசு படத்தின் … Read more