எப்படி இருக்கு வீர சிம்ஹா ரெட்டி படம், ட்விட்டர் சொல்லும் விமர்சனம்

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்த படத்தை கோபிசந்த் மல்லினேனி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், ஹனிரோஸ், துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  தமன் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் காட்சி முடிந்துள்ள … Read more

அறுவடை நாள்: `சின்னதம்பி', `மின்சார கனவு' படங்களின் முன்னோடி; ஆனால் இளையராஜாவின் அந்தப் பாடல்..!

80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – `அறுவடை நாள்’. இந்தத் திரைப்படத்தை இன்றளவும் பல ரசிகர்கள் நினைவுகூர்வதற்கு ஒரு பாடல்தான் முக்கியமான காரணம். ஆம், ராஜாவின் இசையில் உருவான அதி அற்புதமான பாடல்களில் ஒன்றான ‘தேவனின் கோயில் மூடிய நேரம்’ என்பதின் வழியாகத்தான் ‘அறுவடை நாள்’ படத்தைப் பலரும் இன்று நினைவு கொள்வார்கள். ‘இறைஞ்சுதல்’ என்கிற உணர்வை இசையாகவும் குரலாகவும் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் பாடல் … Read more

குடும்பங்கள் கொண்டாடும் ‘வாரிசு’ படத்தின் வசூல் என்ன? அப்செட்டில் விஜய் ரசிகர்கள்?

இந்த படங்களின் முதல் நாள் வசூல் என்ன? எந்த படம் கலெக்‌ஷனில் முந்தி நிற்கிறது என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்கும் ரசிகர்களுக்கு இதோ அப்டேட். வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் வாரிசு பேமிலி எண்டர்டெயினர் படம் என்பதால் குடும்பங்கள் கொண்டாடும் லிஸ்ட்டில் இணைந்துள்ளது. குடும்ப செண்டிமெண்ட், டான்ஸ், பாட்டு என வழக்கமாக விஜய் படங்களில் இருந்து சற்று மாறுபட்டிருக்கும் இந்தப்படம் விஜய் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை என கூறப்படுகிறது.  RRR, KGF என மற்ற … Read more

கையில் எப்போதும் ஜெபமாலை : ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டும் சமந்தா

முன்னணி நடிகையாக இருக்கும்போதே மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் சமந்தா. அவர் நடிக்க வேண்டிய சில படங்களில் இருந்து விலகி இருக்கிறார். அவரும் முழு ஓய்வெடுக்க முடிவு செய்திருந்தார், இப்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டு நடிக்க முடிவு செய்திருக்கிறார். அண்மையில் அவர் ஹிந்தி வெப் தொடர் ஒன்றில் நடிக்க மும்பை சென்றபோது அவர் கையில் ஜெபமாலை இருந்தது. அதன் பிறகு அவர் ஐதராபாத்தில் சாகுந்தலம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோதும் அவர் கையில் ஜெபமாலை … Read more

சாந்தனுவை காப்பாற்றுமா ‛ராவணக்கூட்டம்'

கே.பாக்யராஜின் மகன் சாந்தனு. சக்கரகட்டி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சித்து பிளஸ் 2, கண்டேன், ஆயிரம் விளக்கு, வாய்மை, முருங்கைக்காய் சிப்ஸ் உள்பட பல படங்களில் நடித்தார். ஆனாலும் சாந்தனுவால் ஒரு ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் கதையின் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் ராவணக்கூட்டம். கண்ணன் ரவி தயாரிக்கிறார். கயல் ஆனந்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, மதயானைக் கூட்டம் புகழ் விக்ரம் சுகுமாறன் இந்தப் படத்தை … Read more

பிரபல இளம் நடிகருடன் காதலில் விழுந்த நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி?

சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தற்போது பிரபலமாகி இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி.  நடிகை மற்றும் தயாரிப்பாளரான இவர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.  அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’, ‘கேப்டன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.  சமீபத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘கார்கி’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்தார் மற்றும் … Read more

"கோல்டன் குளோப் கிடைக்கும் என்று கீரவாணி சார் எதிர்பார்க்கவில்லை; ஏனென்றால்…" – மதன் கார்க்கி

ஆஸ்கர் விருதுக்கு அடுத்து திரைத்துறையினருக்குக் கொடுக்கப்படும் உயரிய விருதான ‘கோல்டன் குளோப்’ விருதினை வென்று இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலை நாட்டியிருக்கிறது ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘நாட்டு நாட்டு’ பாடல். உலக லெவலில் ஹிட்டடித்த இப்பாடலை, தமிழில் எழுதிய பாடலாசிரியர் மதன் கார்க்கியிடம் வாழ்த்துகளுடன் பேசினேன். “‘நாட்டு நாட்டு’ பாடலின் சூழலை இசையமைப்பாளர் கீரவாணி சார் விளக்கியபோது, ‘ஹீரோ, வில்லன், காதல், நட்பு, விட்டுக்கொடுத்தல், தியாகம் என ஒரு படத்திற்குத் தேவையான அனைத்தும் இந்தப் பாடலுக்குள் … Read more

வாரிசு vs துணிவு பாக்ஸ் ஆஃபீஸ் ரிப்போர்ட்; எகிறியடித்தது வாரிசா? துணிவா?

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி வாரிசு மற்றும் துணிவு என இரண்டு மிகப்பெரிய படங்கள் வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளன. விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருக்கும் சரிசமமான ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால், இரண்டு படங்களையும் தயாரிப்பு நிறுவனங்கள் தைரியமாக கோதாவில் இறக்கின. எதிர்பார்த்ததுபோலவே விஜய்யின் வாரிசும், அஜித்தின் துணிவும் போட்டி போட்டுக் கொண்டு பாக்ஸ் ஆஃபீஸில் கல்லா கட்டி வருகின்றன.  வாரிசு vs துணிவு ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்ட துணிவு படம் நள்ளிரவு 12 மணிக்கெல்லாம் … Read more

சந்தானம் படத்தின் புதிய அப்டேட்….

சந்தானம் படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கிக்’. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் … Read more

துணிவு, வாரிசு படங்களுக்கு இந்த 3 நாட்கள் மட்டும் சிறப்பு கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி

தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று, ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படங்களுக்கான கூடுதல் சிறப்புக் காட்சி 3 நாட்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படமும், அஜித்தின் ‘துணிவு’ படமும் பொங்கலை முன்னிட்டு நேரடியாக இன்று வெளியிடப்பட்டுள்ளன. இருநடிகர்களின் படங்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டாலே கொண்டாட்டமாக இருக்கும் நிலையில், ஒரேநாளில் இரு படங்களும் வெளியிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனெனில் சிறப்புக் காட்சிகளை பார்த்துவிடலாம் என ரசிகர்களும், சிறப்புக் … Read more