சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு தென்னிந்திய ரசிகர்களிடமும் மிகப்பெரிய அளவில் ஈர்ப்பு இருக்கிறது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிவந்த சன்னி லியோன் சமீப காலமாக சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட தமிழில் அவர் கதாநாயகியாக நடித்த ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் இன்று (பிப்-5) மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் அமைந்துள்ள கட்டகஞ்சே பங்க் என்கிற … Read more

Vetrimaaran: 'ஆர் ஆர் ஆர்' பட நாயகனை இயக்க போகும் வெற்றிமாறன்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே.!

தமிழ் சினிமாவில் தனது தரமான படைப்புகளின் மூலம் முன்னணி இயக்குனராக திகழ்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தையும் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும். வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். ‘அசுரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரியை ஹீரோவாக்கி ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வந்தார் வெற்றிமாறன். இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு நடிகர் சூரி சிக்ஸ்பேக் வைத்த … Read more

மகன் திருமணத்தை ஒன்றிணைந்து நடத்திய பிரியதர்ஷன் – லிசி

மலையாள திரையுலகில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பிரியதர்ஷன். மலையாளம் மட்டுமல்லாது தமிழிலும் பல படங்களை இயக்கியுள்ள இவர் பாலிவுட்டிலும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். எண்பதுகளின் மத்தியில் பிரபலமாக இருந்த நடிகை லிசியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சித்தார்த் என்கிற மகனும் கல்யாணி என்கிற மகளும் இருக்கின்றனர். கல்யாணி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். மகன் சித்தார்த் விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு தந்தை இயக்கிய மரைக்கார் உள்ளிட்ட சில படங்களில் … Read more

நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி

கடந்த 2017ல் கேரளாவில், தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகை ஒருவர் படப்பிடிப்புக்கு சென்று திரும்பியபோது காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, அது வீடியோவாகவும் எடுக்கப்பட்ட நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக மலையாள திரையுலகில் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்த பல்சர் சுனி என்பவன் கைது செய்யப்பட்டான். அதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த கடத்தல் நிகழ்வில் நடிகர் திலீப்புக்கு பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு, எட்டாவது குற்றவாளியாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு … Read more

மனவருத்தம் நீங்காமலே மறைந்துவிட்டார் வாணி ஜெயராம் ; இசையமைப்பாளர் கோபி சுந்தர் வருத்தம்

40 ஆண்டுகளாக தனது காந்த குரலால் இசை ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமானார். கிட்டத்தட்ட 20 மொழிகளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை செய்தவர், மூன்று முறை தேசிய விருது பெற்றவர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்.. வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. பிரபலங்கள் பலரும் வாணி ஜெயராமுடனான தங்களது இனிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் … Read more

ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்!

அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் என பல படங்களை இயக்கியவர் மிஷ்கின். தற்போது பிசாசு- 2 படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் ஏற்கனவே நந்தலாலா, சவரக்கத்தி போன்ற படங்களில் நடித்துள்ள மிஷ்கின், தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் மற்றும் விஜய்யின் லியோ போன்ற படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார். இதையடுத்து அவரைத் தேடி வில்லன் வாய்ப்புகள் படை எடுத்துக் கொண்டிருப்பதால் அடுத்தபடியாக முழுநேர நடிகராவதற்கு திட்டமிட்டுள்ளார் … Read more

அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்!

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான் படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில் தற்போது அவர் அட்லி இயக்கி வரும் ஜவான் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். அவருடன் தீபிகா படுகோனே, நயன்தாரா, விஜய் சேதுபதி ,யோகி பாபு உட்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2ம் தேதி ஜவான் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிவில் திரைக்கு … Read more

மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா!

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று உள்பட சில படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா. இவர் தற்போது சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் அக்சய் குமாரை வைத்து இயக்கி வருகிறார். அதன் பிறகு மீண்டும் சூர்யாவை வைத்து இன்னொரு படத்தை இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது சுதா கெங்கராவுக்கு விபத்தினால் கையில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் மருத்துவமனையில் அதற்கான சிகிச்சையில் தான் ஈடுபட்டு இருப்பதாகவும் அது குறித்த ஒரு புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் அவர் … Read more

விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்

தெலுங்கின் முன்னணி நட்சத்திர இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடிக்கும் 'குஷி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். முன்னணி இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'குஷி'. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து, இயக்குநர் சிவ … Read more

கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன்

'சுந்தரபாண்டியன்' படம் வாயிலாக இயக்குனர் ஆனவர் எஸ்.ஆர்.பிரபாகரன். 'சத்ரியன், கொம்பு வெச்ச சிங்கம் டா' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இவர், 'பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்சன்ஸ்' என்ற என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 'றெக்கை முளைத்தேன்' என்ற முதல் படத்தை தானே இயக்க உள்ளார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதை நாயகியாக நடித்துள்ளார். கிரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில், ஜெயப்பிரகாஷ், 'ஆடுகளம்' நரேன், போஸ்வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சுவாதிஸ், பிரபா, மெர்லின், நிதிஷா என்ற நான்கு … Read more