அதிவேக சாதனையில் 'பதான்'
பாலிவுட் திரையுலகம் கடந்த சில ஆண்டுகளாகவே தனது பெருமையை இழந்து, தென்னிந்தியப் படங்களிடம் தோற்றுக் கொண்டிருந்தது. இழந்த அந்தப் பெருமையை தற்போது 'பதான்' படம் அவர்களுக்கு மீட்டுக் கொடுத்துள்ளது. படம் வெளியான நான்கு நாட்களில் மட்டும் 429 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 265 கோடி மொத்த வசூலாகவும், அதில் நிகர வசூலாக 220 கோடி வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் 164 கோடி ரூபாய் மொத்த வசூலாக அமைந்துள்ளது. … Read more