500 மில்லியனைக் கடந்த 'அரபிக்குத்து'

தமிழ்த் திரைப்படமான 'மாரி 2' படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் இடம் பெற்ற 'ரௌடி பேபி' பாடல் யு டியூபில் 1400 மில்லியன் பார்வைகளைக் கடந்து தென்னிந்திய சினிமா பாடல்களில் முதலிடத்தில் உள்ளது. இப்போதும் அந்தப் பாடலை தினமும் சில லட்சம் பேர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தெலுங்குத் திரைப்படப் பாடலான 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் தமன் இசையில் இடம் பெற்ற 'புட்ட பொம்மா' பாடல் 800 மில்லியன் பார்வைகளைக் கடந்து இரண்டாவது இடத்திலும், அதே படத்தில் … Read more

மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் ராஷ்மிகா – மஞ்சு வாரியர் படங்கள்

சமீபத்தில் பொங்கல் வெளியீடாக கடந்த ஜன.,11ல் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இதில் வாரிசு படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்திருந்தார். சுல்தான் படத்தை தொடர்ந்து தமிழில் இவர் நடித்துள்ள இரண்டாவது படம் இது. அதேப்போல துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர் நடித்திருந்தார். அசுரன் படத்தை தொடர்ந்து அவருக்கும் தமிழில் இது இரண்டாவது படம். இந்த இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகி இருவருக்கும் … Read more

”என் அழகையும், நிறத்தையும் இழக்கிறேன்” – நடிகை மம்தா மோகன்தாஸ் உருக்கம்..!

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடா என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகையான மம்தா மோகன்தாஸ் தனக்கு விட்டிலிகோ என்ற ஆட்டோஇம்யூன் நோய் பாதிக்கப்பட்டிருக்கிறது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அண்மையில் இதே போன்று மயோசிடிஸ் என்ற ஆட்டோஇம்யூன் நோயால் பாதிக்கப்பட்டதாக அறிவித்திருந்த நடிகை சமந்தா தற்போது அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். அவரைத் தொடர்ந்து தற்போது மம்தா மோகன்தாஸூம் தனக்கு இருக்கும் நோய் பாதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். View this post on Instagram A … Read more

'சொர்க்கத்தில் இணைந்த நண்பர்கள்' உயிரிழந்த செல்ல நாய்… சுஷாந்த் சிங் தங்கை உருக்கமான பதிவு

Sushant Singh Rajput Dog Death: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020ஆம் ஆண்டு தற்கொலையால் உயிரிழந்தால் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது. அதுதொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.  இருப்பினும், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவு மக்களை பெரும் துயருக்கு ஆளாக்கியது. திரையில் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்து தனக்கென சிறப்பான இடத்தை வைத்திருந்த அவரின் திடீர் மறைவை பலராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வசதியும், பிரபலமும் மட்டும் இந்த வாழ்வின் … Read more

சம்பவத்துக்கு தயாராகிறதா விஜய் 67? – வெளியானது மாஸ் அப்டேட்!

மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 67வது படத்துக்காக மீண்டும் நடிக்கிறார். கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த விக்ரம் படத்தில் கார்த்தியின் கைதியின் பங்கு இருந்ததால் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் என்ற பெயரில் லோகேஷின் அடுத்தடுத்த படங்கள் இருக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது சென்னையில் விஜய்யின் 67வது படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் படு மும்முரமாக டெஸ்ட் ஷூட் என எல்லாம் தொடங்கி நடந்துக் கொண்டிருக்கிறது. மாஸ்டர் படத்தை … Read more

ஜெயிலரில் வாய்ப்பு எனக்கூறி மாடல் அழகியிடம் ரூ.8.5 லட்சம் மோசடி!!

மும்பையைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி சன்னா சூரி, 2007ஆம் ஆண்டு மிஸ் மகாராஷ்டிரா பட்டம் வென்றவர். இவருக்கு, நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி ரூ.8.5 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதனையடுத்து சன்னா சூரி, மும்பை போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த ஆண்டு பியூஸ் ஜெயின் என்பவர் இன்ஸ்டாகிரம் மூலம் அறிமுகமாகி, ஜெயிலர் படத்தில் புது முகங்கள் தேவை போலீஸ் உடையில் வீடியோ எடுத்து அனுப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி … Read more

Connect Movie OTT Release Date: நயன்தாராவின் கனெக்ட்…OTT ரிலீஸ் எப்போ?

நயன்தாராவின் சமீபத்திய படம் கனெக்ட் விரைவில் OTT தளத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் டிஜிட்டல் உரிமையை OTT இயங்குதளமான நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை என்பதே உண்மை. இதற்கிடையில் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கனெக்ட் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.  லாக்டவுனின் போது ஓஜோ போர்டால் ஆன்மாவை அழைக்கும் ஒரு பெண் … Read more

தமிழ்ப்படங்களை வாங்கிக்குவித்த நெட் ஃபிளிக்ஸ்!!

இந்த ஆண்டு வெளியாக உள்ள பல தமிழ்ப்படங்களை நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியுள்ளது. ரஜினிகாந்த் நடித்து மெகா ஹிட் அடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த பாகத்தையும் பி.வாசு இயக்குகிறார். கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்தப்படத்தை நெட் ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்நடிப்பில் உருவாகவுள்ள அஜித் 62 திரைப்படத்தையும் வாங்கியுள்ளது நெட் ஃபிளிக்ஸ். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்நிறுவனம், தமிழ், தெலுங்கு, மலையாளம், … Read more

ரூ.100 கோடி – முதலில் அறிவித்த 'வாரிசு', இன்னும் அறிவிக்காத 'துணிவு'

பொங்கலை முன்னிட்டு கடந்த வாரம் வெளிவந்த விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய படங்கள் வெளிவந்தன. இரண்டு படங்களில் எந்தப் படம் 100 கோடி வசூலித்தது என யார் முதலில் அறிவிக்கப் போகிறார்கள் என்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். நேற்று நடந்த 'வாரிசு' படக்குழுவின் நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியில் கூட அது பற்றி அறிவிக்கவில்லை. ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் எதற்கு 100 கோடி என சொல்ல வேண்டும், நேரடியாக 150 கோடி … Read more

அமெரிக்காவில் 1 மில்லியன் வசூலைக் கடந்த 'வாரிசு, துணிவு'

பொங்கலுக்கு வெளியான 'வாரிசு, துணிவு' ஆகிய இரண்டு படங்களில் 'வாரிசு' படத்திற்கு வெளிநாடுகளில் மிகப் பெரும் வசூல் கிடைத்து வருகிறது. அமெரிக்காவில் மட்டும் ஒரு வாரத்திற்குள்ளாக 1 மில்லியன் வசூலைக் கடந்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 8 கோடியே 10 லட்சம். இந்த வசூல் விவரத்தை படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட வினியோக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், கனடாவில் மட்டும் 4 லட்சம் யுஎஸ் டாலர் வசூலை அள்ளியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 3 கோடியே … Read more