ஊட்டியில் வீடு கட்டி முடித்த சிரஞ்சீவி

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோக்களில் ஒருவர் சிரஞ்சீவி. அவரது பல படங்கள் வசூல் சாதனை படைத்தவை. இந்த பொங்கலுக்கு அவர் நடித்து வெளிவந்துள்ள 'வால்டர் வீரய்யா' படமும் நல்ல வசூலைக் கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில முக்கிய நகரங்களில் ஒன்றான விசாகப்பட்டிணத்தில் சிரஞ்சீவி வீடு கட்டப் போவதாக அறிவித்தது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலத்தை விட்டு அவர் விசாகப்பட்டிணத்தில் வசிக்கப் போகிறார் என்ற வதந்தியும் பரவியது. அதை பலரும் அரசியலாக்கி செய்திகளை வெளியிட்டனர். இந்நிலையில் … Read more

மாளிகைப்புரம் பட வெற்றி : சபரிமலை சென்று நன்றி தெரிவித்த உன்னிமுகுந்தன்

தனுஷ் நடித்த சீடன் படம் மூலமாக தமிழில் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். தொடர்ந்து அனுஷ்காவுடன் நடித்த பாகமதி, சமீபத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்த யசோதா உள்ளிட்ட படங்கள் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர். இந்தநிலையில் மலையாளத்தில் அவர் நடித்திருந்த மாளிகைபுரம் என்கிற படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சுவாமி ஐயப்பனையும் அவருக்காக சன்னிதானத்தில் காத்திருக்கும் மாளிகைப்புரத்தம்மனையும் மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படத்தில் ஐயப்பன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் … Read more

Netflix நேயர்கள் கவனத்திற்கு! 18 தமிழ் படங்களை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம்  2023-ம் ஆண்டில் தன்னிடமுள்ள உரிமம் உள்ள படங்களில் ஒரு பகுதியாக 18 படங்கள் குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்த பின்னர் ரசிகர்கள் இதனை தங்கள் இல்லத்திரைகளில் நெட்ஃபிலிக்ஸ் வாயிலாக பார்த்து ரசிக்கலாம்.   தனது சமூகவலைதளப் பக்கங்களில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்த 18 தலைப்புகளை அறிவித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்ஃபிலிக்ஸில் வெளியான ‘பீஸ்ட்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘டாக்டர்’ மற்றும் சமீபத்தில் வெளியான … Read more

பச்சை பட்டு, மூக்குத்தியில் ஜொலிக்கும் டிடி! – என்ன அழகு?

சின்னத்திரை தொகுப்பாளினியான டிடி சினிமா நடிகர்களுக்கு இணையாக சோஷியல் மீடியாவில் புகழ் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், த்ரிஷா போன்ற டாப் நடிகர்களுக்கு கொடுக்கப்பட்ட துபாயின் கோல்டன் விசா, சமீபத்தில் தான் டிடிக்கும் கிடைத்தது. அந்த அளவுக்கு பிரபலமான டிடியை இன்ஸ்டாவில் மட்டும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு பச்சை பட்டு, மூக்குத்தி, மல்லிப்பூ அணிந்து நமது நாட்டின் அசல் பாரம்பரிய பெண்ணாக மாறியுள்ள டிடி, அந்த … Read more

ஜப்பான் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் கார்த்தி

சர்தார் படத்தை அடுத்து ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. கார்த்தியின் 25வது படமான இப்படத்தை ட்ரீம்ஸ் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் பொங்கலை ஒட்டி இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கார்த்தி இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். மாறுபட்ட ஹேர் ஸ்டைல், கழுத்தில் டாலர் செயின் … Read more

முதன்முறையாக காக்கி யூனிபார்ம் அணியும் விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் என இரண்டு படங்களும் அவரை முன்னணி இளம் நட்சத்திரமாக உயர்த்தின. அதேசமயம் அதைத்தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றிகளை தரவில்லை. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு வெளியான லைகர் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் குஷி என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. இதைத்தொடர்ந்து தனது அடுத்த படத்தில் முதன்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் … Read more

பாலமேட்டில் ஜல்லிக்கட்டை ரசித்த 'துணிவு' வில்லன் ஜான்

'சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் பிரபலமானவர் ஜான் கொக்கேன். தற்போது அஜித் நடித்து வெளிவந்த 'துணிவு' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இன்று(ஜன., 16) மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை தனது மனைவி பூஜா மற்றும் நண்பர்களுடன் பார்த்து ரசித்தார். அந்த அனுபவத்தைப் பற்றி, “முதல் ஜல்லிக்கட்டு அனுபவத்தைத் தந்த மதுரைக்கு நன்றி. மதுரையில் ஒவ்வொரு தருணத்தையும் நேசித்தோம். மதுரை உணவையும் ரசித்தேன். அதைவிட முக்கியமாக மதுரையில் 'துணிவு' படத்தைப் பார்த்து என்ஜாய் செய்தேன்,” என்று குறிப்பிட்டுள்ளார். மதுரை … Read more

'துணிவு, வாரிசு' – ரூ.100 கோடி வசூல் என சொல்லப் போவது யார்?

விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' இரண்டு படங்களும் வெளிவந்து இன்றுடன் ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. இரண்டு படங்களுமே தமிழகத்தைப் பொறுத்தவரையில் நன்றாகவே ஓடி வருகிறது. மற்ற மாநிலங்களில் 'துணிவு' படத்தை விடவும் 'வாரிசு' படம்தான் அதிக வசூலைத் தருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அது போலவே வெளிநாட்டு வசூலிலும் 'வாரிசு' தான் முன்னிலை வகிக்கிறது என்கிறார்கள். ஆனால், இதுவரையிலும் இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும் 100 கோடி வசூலைக் கடந்ததா இல்லையா என்பது குறித்த எந்த … Read more

2023இல் வெளியான மற்றும் வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படங்கள்

Latest Tamil movies: புத்தாண்டு பிறந்தவுடன் ஜனவரி மாதத்தில் வெளியான திரைப்படங்களி,ல் துணிவு மற்றும் வாரிசு மாஸ் காட்டின.  இவற்றைத் தவிர ஜனவரி மாதம் ரிலீஸ் திரைப்படங்கள் பட்டியலில்,  பதான், பிகினிங், ஃபர்ஹானா, டாட்டா, நரகாசூரன் ஆகியவை எதிர்ப்பார்ப்பை எகிற வைத்திருக்கும் திரைப்படங்கள் ஆகும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைபடங்களில் தலைக்கூத்தல், பொம்மை நாயகி, வசந்த முல்லை, வாத்தி, நூறு கோடி வானவில், மாயவன் 2 (மாயவன் -ரீலோடர்) அகிலன், பார்டர், இடம் … Read more

”பல உலக அழகிகள் கூடி” – மீண்டும் ஐஸ்வர்யாவுடன் நடிக்கப்போகிறாரா அஜித்? – AK62 அப்டேட் இதோ!

அஜித்தின் துணிவு படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கும் இதே வேளையில் அவரது 62வது படத்துக்கான அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்பது #AK62 என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாவதின் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஏற்கெனவே அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் இயக்க, அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியான நிலையில் தற்போது தியேட்டர் ரிலீசுக்கு பிந்தைய ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமத்தை பிரபல ஓ.டி.டி. நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியிருப்பதாக தென் … Read more