சூர்யா 42 தலைப்பு… அஜித் சென்ட்டிமெண்ட்டை தொடும் சிவா?

சூர்யா சமீபகாலமாக மிகச்சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அப்படி அவர் நடித்த ஜெய்பீம், சூரரைப்போற்று உள்ளிட்ட படங்கள் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. இதில் ஜெய்பீம் படம் ஐஎம்டிபி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்றதுடன் தமிழ்நாட்டில் மிகப்பெரிய விவாதத்தையும் கிளப்பியது. அதேபோல் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படம் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் … Read more

100 நாட்களைக் கடந்த 'காந்தாரா'

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்த வருடம் செப்டம்பர் 30ம் தேதி வெளிவந்த கன்னடப் படம் 'காந்தாரா'. பெரும் வெற்றிப் படமாக அமைந்த படம் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. உலகம் முழுவதும் 400 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்த இந்தப் படம் 100 நாட்களைக் கடந்துள்ளது. அது குறித்து 100 நாள் போஸ்டர்களை வெளியிட்டு படத்தைத் தயாரித்த ஹாம்பலே பிலிம்ஸ் நிறுவனம், “நாம் எப்போதும் போற்றும் … Read more

'வாரிசு' தெலுங்கு வியாபாரம் எவ்வளவு ?

விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் ஜனவரி 11ம் தேதி தமிழில் வெளியாக உள்ள படம் 'வாரிசு'. இப்படத்தைத் தெலுங்கில் 'வாரிசுடு' என்ற பெயரில் டப்பிங் செய்துள்ளார்கள். ஆனால், தமிழில் வெளியாகும் 11ம் தேதியே தெலுங்கிலும் படம் வெளியாகாது எனத் தெரிகிறது. தெலுங்கில் மறுநாள் 12ம் தேதி தான் வெளியாகும் என்று சொல்கிறார்கள். தெலுங்கு டப்பிங் வேலைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதே அதற்குக் காரணம் எனத் தகவல். இதனிடையே, 'வாரிசுடு' படத்தின் தெலுங்கு … Read more

புத்தகங்களாக வெளியான லோகேஷ் கனகராஜ் படங்களின் திரைக்கதைகள் – எங்கே கிடைக்கும்?

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 4 படங்களின் திரைக்கதை புத்தக வடிவில், தற்போது நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும், சென்னை புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 46-வது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று துவங்கியது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த இந்த புத்தகக் கண்காட்சி, வரும் 22-ம் தேதி வரை, கிட்டத்தட்ட … Read more

சூர்யா 42 படத்தில் ஹாலிவுட் தரத்தில் ஸ்டன்ட் காட்சிகள்

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 42வது படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 13 கெட்டப்புகளில் சூர்யா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மட்டுமே நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளை ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் இயக்கி வருகிறார். சூர்யாவுடன் ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்கள் இணைந்து நடித்து வரும் இந்த … Read more

”இதையெல்லாம் மனசுல வெச்சிதான் அஜித் கேரக்டர உருவாக்கினேன்” – எதை சொல்கிறார் ஹெச்.வினோத்?

இயக்குநராக அறிமுகமான சதுரங்க வேட்டை படத்தின் மூலமே சூப்பர் ஹிட் கொடுத்த ஹெச்.வினோத் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை படைத்து இரண்டாவது படத்திலேயே கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார். இதனையடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமாரை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை என அடுத்தடுத்து ஹிட் படங்களாக கொடுத்திருந்தார். இதனையடுத்து அஜித்தோடு மூன்றாவது முறையாக துணிவு படத்துக்காக கை கோர்த்திருக்கிறார். இந்த படத்தையும் … Read more

கலை தான் நம்மை குணப்படுத்தும் : சாகுந்தலம் டப்பிங்கை துவங்கிய சமந்தா

நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் தசைனார் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார். ஆனால் அதுபற்றி பொதுவெளியில் அதிகம் பேசிக்கொள்ளாத சமந்தா படப்பிடிப்பு மற்றும் அது தொடர்பான வேலைகளில் இருந்து சில நாட்கள் ஒதுங்கி ஓய்வெடுத்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு அவர் நடித்த யசோதா திரைப்படம் வெளியான நிலையில், அடுத்ததாக அவர் நடித்து சாகுந்தலம் என்கிற திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ளார். அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் … Read more

உடன்பால் திரைப்படம் செய்த ஆஹா சாதனை – ஒரு கோடி பார்வைகளை பெற்று அசத்தல்

டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், சார்லி, ‘சேதுபதி’ பட புகழ் நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, KPY தீனா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் நடிப்பில் ஆஹா தளத்தில் வெளியான திரைப்படம் “உடன்பால்”. குடும்ப பின்னணியில் இன்றைய சமூகத்தில்  உறவுகள் பணத்திற்காக எந்த எல்லைவரை செல்கிறார்கள் என்பதை அற்புதமான ப்ளாக் காமெடியில் சொல்லியிருந்தது இந்த திரைப்படம்.  மேலும் இன்றைய சமூகத்தில் நம் … Read more

அசீம் பிடிக்கும், விக்ரமன் பிடிக்காது : தனலெட்சுமியின் வைரல் வீடியோ

டிக் டாக் மூலம் பிரபலமான தனலெட்சுமி இந்த முறை பிக்பாஸ் வீட்டில் மக்கள் தரப்பு போட்டியாளராக என்ட்ரி கொடுத்திருந்தார். நிகழ்ச்சியின் போது பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், பிக்பாஸ் வீட்டில் கடினமான போட்டியாளராக வலம் வந்த தனலெட்சுமியின் எவிக்சனை மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் எலிமினேட் ஆன போது பெரிய அளவில் அவருக்கு சோஷியல் மீடியாக்களில் ஆதரவு எழுந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் லைவ் வந்த தனலெட்சுமி, பிக்பாஸிலிருந்து எவிக்ட் ஆனதை ஏற்றுக்கொள்ள சில காலம் பிடித்ததாகவும் மேலும் வீட்டிலும் … Read more

அஜித்தை வைத்து ரிஸ்க் எடுக்க முடியாது – துணிவு இயக்குநர் ஓபன் டாக்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் துணிவு படம் 11ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் படம் நிச்சயம் ஹிட்டடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர். இந்தச் சூழலில் படத்துக்கான ப்ரோமோஷன்கள் சூடுபிடித்துள்ளன. அந்தவகையில் இயக்குநர் ஹெச்.வினோத் பல பேட்டிகளை படம் குறித்து கொடுத்துவருகிறார். அந்தவகையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “துணிவு படத்தை பொறுத்தவரை படத்தின் முதல் பாதி முழுமையாக அஜித் ரசிகர்களுக்கான பகுதியாக இருக்கும். … Read more