சர்வானந்த்துக்கு ஜன.,26ல் திருமண நிச்சயதார்த்தம் : முன்னாள் எம்எல்ஏவின் பேத்தியை மணக்கிறார்

‛எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் சர்வானந்த். அதைத்தொடர்ந்து ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை சமீபத்தில் வெளியான கணம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் தொடர்ந்து தெலுங்கில் பிசியாக நடித்து வரும் இவர், எப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என அதிகம் கேள்விகளை எதிர்கொள்ளும் நடிகராக பிரபாஸுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு நிகழ்ச்சியில் நடிகர் பாலகிருஷ்ணா இவரிடம் எப்போது உங்களது … Read more

'இன்று அண்ணன், நாளை மன்னன்': போஸ்டர் ஒட்டி தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

நாளை தமிழகத்தின் முடி சூடா மன்னன் என தலைமைச் செயலகத்தின் படம் ஆளுயர மாலை சூடி உள்ள நடிகர் விஜயின் புகைப்படம் உள்ளிட்டவைகளுடன் வாரிசு திரைப்படத்தை வரவேற்று விஜய் மக்கள் இயக்கத்தினர் நிலையில் போஸ்டர் ஒட்டி உள்ளனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி, நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும், நடிகர் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் வரும் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளன. இந்த இரண்டு திரைப்படங்களையும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும் இந்த திரைப்படங்களின் … Read more

தூய்மை பணியாளரின் மகள் ஐஏஎஸ் படிக்க ஜெகபதிபாபு உதவி

90களில் தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்து வந்தவர் ஜெகபதிபாபு. கடந்த பத்து வருடங்களாக குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக தன்னை மாற்றிக்கொண்டு தென்னிந்திய அளவில் மிகவும் பிசியான நடிகராக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஐஏஎஸ் ஆக வேண்டுமென்பதை லட்சியமாக கொண்டுள்ள தூய்மைப் பணியாளர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவிக்கு அவரது படிப்புக்கு தேவையான உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார் ஜெகபதிபாபு. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெயலட்சுமி என்கிற மாணவி, தான் படித்து நாட்டிற்கு சேவை செய்ய … Read more

சோதனை மேல் சோதனை… வாரிசு படத்துக்கு அடுத்த சிக்கல்

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் வாரிசு.தில்ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் வாரிசுக்கு தமன் இசையமைத்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷ்யாம், ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு சமீபத்தில் நடந்தது. படத்தின் ட்ரெய்லர் சில நாள்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. அதுமட்டுமின்றி படம் முழுக்க தெலுங்கு வாடை அடிக்கப்போவதை ட்ரெய்லர் உறுதி செய்திருப்பதாக ஒரு தரப்பினரும், ட்ரெய்லரில் விஜய் பக்காவாக இருக்கிறார். படம் பக்கா ஃபேமிலி பேக்கஜாகவும், … Read more

சரவணன் மீனாட்சி ஜோடிக்கு ஆண் குழந்தை : எட்டு ஆண்டுகளுக்குப் பின் மகிழ்ச்சி செய்தி

விஜய் டிவியில் கடந்த 2011-ல் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சீரியல் சரவணன் மீனாட்சி. இதில் சரவணனாக மிர்ச்சி செந்தில்குமாரும், மீனாட்சியாக கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜா சந்திரனும் நடித்தனர். கிட்டத்தட்ட 500 எபிசோடுகள் வரை ஜோடியாக நடித்தவர்கள் அந்த சமயத்தில் காதல் வசப்பட்டு 2014ல் திருமணமும் செய்து கொண்டனர். கடந்த 4ஆம் தேதி கேரளாவில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் ஸ்ரீஜா. திருமணம் முடிந்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகான ஆண் … Read more

துணிவு வேற படம்…அந்த கதையில் அஜித் நடிக்கவில்லை; ஹெச்.வினோத் ஓபன் டாக்

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் துணிவு படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த பொங்கலை தல பொங்கலாக கொண்டாட வேண்டும் என காத்திருக்கும் ரசிகர்களுக்கு, நிச்சயம் துணிவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஹெச். வினோத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, துணிவு படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களையும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். ஹெச். வினோத் பேட்டி பொங்கலுக்கு ரிலீஸாகும் துணிவு … Read more

வாரிசு Vs துணிவு: எந்த படத்துக்கு அதிக திரையரங்கு ஒதுக்கப்பட்டிருக்கு? கள நிலவரம் இதான்!

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் வெளியாக இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இரண்டு திரைப்படங்களின் வியாபாரம் குறித்தும், திரையரங்குகள் ஒதுக்கீடு குறித்தும் இந்த கட்டுரையில் காணலாம். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகிய இருவரின் திரைப்படங்களும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் நாள்தோறும் இந்த பொங்கல், வாரிசு பொங்கலா? துணிவு பொங்கலா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. நாள்தோறும் ஏதோ … Read more

விஜய் மீது செம கடுப்பில் தெலுங்கு ஹீரோக்கள்! தேவையில்லாமல் சிக்க வைக்கும் தில் ராஜூ!

வாரிசு படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். அதேபோல படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ளார். தமிழில் தெலுங்கு இயக்குநர்கள் பலர் படங்களை இயக்க தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் தெலுங்கு சினிமா நட்சத்திரங்களை வாரிசு படம் அப்செட் செய்துள்ளது. அதோடு அவர்கள் விஜய்யை எதிர்க்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.  தெலுங்கு திரையுலகை பொறுத்த வரை முக்கியமாக 3 குடும்பங்கள் தான் அங்கே பவரில் இருக்கின்றன. அவர்களுக்கு தான் ரசிகர்களும் அதிகம். அதில் என்டிஆர் குடும்பம், … Read more

மிகச்சிறந்த படங்களின் பட்டியல் 2022: Letterboxd-ன் பட்டியலில் முதலிடத்தில் கடைசி விவசாயி!

உலகின் முக்கிய இயக்குநர்கள், திரை ஆளுமைகள், நட்சத்திரங்கள், திரைத்துறை விமர்சகர்கள் என பலரும் சினிமா மீதான தங்களின் கருத்துகளைப் பதிவு செய்யும் இனையத் தளம் தான் லெட்டர்பாக்ஸ்டி (Letterboxd). இதில் தமிழ் சினிமாவுக்கு உலக அலவில் பெருமை சேர்த்த படமான கடைசி விவசாயி, அதிக நல்ல விமர்சனங்களை பெற்று 2022-ன் மிகச்சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தமிழ் சினிமாவில் அதிகம் கவனிக்கப்படாத இயக்குநராக கருதப்படும் இயக்குநர் மணிகண்டன், காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை ஆகிய படங்களுக்குப் பிறகு கடைசி விவசாயி படத்தை … Read more

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர்தான்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு பொழுதுபோக்கான நிகழ்ச்சி மட்டுமின்றி பலருக்கும் கன்டென்ட் கொடுக்கும் குருவாக விளங்கி வருகிறது.  இந்த நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து முடியும் வரை பல ஊடகங்களுக்கும் கன்டென்ட் கொடுத்து வருகிறது, இதற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல ரசிகர்கள் உள்ளனர்.  இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது, வழக்கம்போல முதல் ஐந்து சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.  கிட்டதட்ட … Read more