நான்கு மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம்!

பொன்னியின் செல்வன், கோப்ரா படங்களை அடுத்து பா .ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் தற்போது நடித்து வருகிறார் விக்ரம். இந்த படத்தில் அவருடன் பார்வதி மேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோலார் தங்க வயலில் நடக்கும் பிரச்னையை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விக்ரம் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். இது குறித்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே … Read more

டாப் 10 தமிழ் சினிமா டிரைலர்கள் என்னென்ன?

பொங்கலை முன்னிட்டு வெளிவரும் 'துணிவு, வாரிசு' படங்களின் டிரைலர்கள் வெளியானதைத் தொடர்ந்து அவை புதிய சாதனைகளைப் படைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முந்தைய சாதனைகளை முறியடிக்காமல் இரண்டு டிரைலர்களுமே பின் தங்கிப் போனது. அடுத்து முந்தைய தமிழ் சினிமா டிரைலர்களின் மொத்த பார்வைகளை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளிவந்துள்ள டிரைலர்களில் அதிகப் பார்வைகளைப் பெற்று டாப் … Read more

”நடிகர் விஜய் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு காரணம் இதுதான்” – சீமான் புகழாரம்

”நடிகர் விஜய் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு காரணம் அவரது உழைப்பு” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். `பச்சை என்கிற காத்து’, `மெர்லின்’, `எட்டுத்திக்கும் பற’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர், கீரா. இவர் எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் என்கிற ஜூனியர் எம்.ஜி.ஆர்., ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, சென்ராயன் உள்ளிட்ட பலரை வைத்து ’இரும்பன்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை கே.கே.நகரில் உள்ள சத்தியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் … Read more

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் காலமானார்

நடிகர் ரஜினிகாந்தின் மிக நெருங்கிய நண்பர் வி.எம்.சுதாகர். ரஜினிகாந்த் திரைப்படக் கல்லூரியில் படித்தபோது அவருக்கு அடுத்த ஆண்டு வி. எம். சுதாகர் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது இருந்தே நடிகர் ரஜினிகாந்த் வி.எம். சுதாகர் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் நிர்வாகியாக செயல்பட்ட சத்தியநாராயணா மாற்றப்பட்டபோது வி.எம்.சுதாகரை அழைத்து தன்னுடைய ரசிகர் மன்றத்தை பார்த்துக் கொள்ள கூறியிருந்தார். அதன் முதல் ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைமை நிர்வாகியாக வி.எம்.சுதாகர் செயல்பட்டு வந்தார். மேலும் … Read more

'அஜித் 62' படத்தில் வில்லனாகும் அரவிந்த்சாமி!

துணிவு படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்க போகிறார் அஜித்குமார். ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தில் ஒரு பிரபலமான வில்லன் நடிகரைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று பலரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த விக்னேஷ் சிவன் தற்போது தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ள அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு, தனி ஒருவன் படத்தைப் போலவே இந்த படத்திலும் ஒரு … Read more

சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படத்தின் டிரைலர் எப்போது?…

நடிகை சமந்தா நடித்துள்ள ‘சாகுந்தலம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள ‘சாகுந்தலம்’ படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.   ‘சாகுந்தலம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் … Read more

சீரியலை நிறுத்துங்க! திருச்செல்வதுக்கு கடிதம் எழுதிய ரியல் லைப் குணசேகரன்

சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் தான் இயக்கி வரும் சீரியல்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இல்லத்தரசிகள் மனதில் இடம்பிடித்து வருகிறார். அவர் இயக்கிய தொடர்களில் 'கோலங்கள்', 'அல்லி ராஜ்ஜியம்', 'மாதவி', 'சித்திரம் பேசுதடி' வரிசையில் 'எதிர்நீச்சல்' தொடர் ஆணாதிக்க சிந்தனையை எதிர்த்து குடும்ப பெண்கள் வெற்றியடைவதை கதைக்களமாக கொண்டுள்ளது. இந்த தொடர் ஒளிபரப்பான முதல் நாளிலிருந்தே கொஞ்சம் கூட தொய்வு ஏற்படாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த தொடரை நிறுத்த சொல்லி ஒரு … Read more

”இனிமேல் எனது படங்களில் மது, புகைப்பிடித்தல் காட்சிகளை தவிர்ப்பேன்”-இயக்குநர் வெற்றிமாறன்

மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் சினிமாவில் வருவது ஒரு பகுதிதான். சமூகத்தில் அதைவிட அதிகமாக பார்ப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இனிமேல் எனது படங்களில் இது போன்ற காட்சிகளை முடிந்தவரை தவிர்ப்பேன், இதற்கு முன்பும் தவிர்த்து வந்துள்ளேன் என இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் பிரசாந்த் மருத்துவமனை மற்றும் லயோலா கல்லூரி விஷூவல் கம்யூனிகேஷன் துறை இணைந்து நடத்திய ”இளம் இதயத்தை பாதுகாப்போம்” குறித்த குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி … Read more

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும்: வரலட்சுமி படம் சொல்கிறது

வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள வி3 என்கிற படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த வாரம் வெளிவந்துள்ள ஒரே படம் இதுதான். இந்த படத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருத்தி இரவு நேரத்தில் தனியாக மொபட்டில் வீடு திரும்பும்போது 5 சமூக விரோதிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். போலீசார் அப்பாவிகளை குற்றவாளியாக்குகிறார்கள், உண்மையான குற்றவாளிகளை விசாரணை அதிகாரி வரலட்சுமி கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை. இந்த படம் நேற்று பத்திரிகையாளர்களுக்கு காட்டப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். … Read more

குக் வித் கோமாளியில் ஜிபி முத்து! சமையல் எப்படி இருக்கப்போகுதோ?

விஜய் டிவியில் விரைவில் குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்க இருக்கிறது. அதற்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ள நிலையில், அது படு வைரலாகியுள்ளது. காரணம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் வீட்டை விட்டு வெளியேறிய ஜிபி முத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். ஆனால், அவர் போட்டியாளரா? இல்லை கோமாளியா? என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விக்ரமன், ஷிவின் மற்றும் … Read more