ரயில் படிக்கட்டில் பயணம்: சோனு சூட்டுக்கு ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமான உதவிகளை செய்து பாராட்டுகளை பெற்றவர் சோனு சூட். சினிமாவில் வில்லனாக நடிக்கும் அவர் நிஜத்தில் ஹீரோவாக பார்க்கப்பட்டார். தற்போதும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி பலருக்கு உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளிட்டுள்ள வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் ஒரு ரயிலில் படிக்கட்டு அருகே அமர்ந்து பயணிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இப்படி பயணம் செய்வது சட்டவிரோதம் ஆகும். சோனு சூட் … Read more

நல்ல நண்பரை இழந்துவிட்டேன்.. நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்..!

ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என்று உருக்கமாக கூறினார். அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த, “சுதாகர் எனது நீண்டகால நண்பர். என் மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருந்தார். அவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை … Read more

வில்லனுக்கு வில்லனாகும் வில்லன்? – வந்தாச்சு #AK62 அப்டேட்!

துணிவு பட ரிலீசுக்கு முன்பே அஜித்தின் 62வது படத்தின் அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருவது அவரது ரசிகர்களுக்கு டபுள் தமாக்காவாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ட்விட்டரில் #AK62 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. என்னவெனில், விக்னேஷ் சிவன் இயக்கப் போகும் இந்த படத்தில் யார் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியானதை அடுத்து அந்த ஹேஷ்டேக்கின் கீழ் பதிவுகளை பறக்கச் செய்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். அதன்படி, AK62-ல் வில்லனாக … Read more

1.5 பில்லியன் டாலர் வசூலைக் கடந்த 'அவதார் 2'

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட ஹாலிவுட் திரைப்படமான 'அவதார் – த வே ஆப் வாட்டர்' படம் கடந்த மாதம் வெளிவந்தது. இப்படம் உலக அளவில் தற்போது 1.5 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் உலக அளவில் அதிக வசூலைக் குவித்த படங்களின் டாப் 10 பட்டியலில் 'அவதார் 2' படம் இடம் பிடித்துள்ளது. இந்திய அளவில் 'அவதார் 2' படம் 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. … Read more

OTT-ல் வெளியாகிறது Black Panther: Wakanda Forever – எப்போது தெரியுமா?

மார்வெல் ஸ்டுடியோஸின் Black Panther: Wakanda Forever படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸின் முக்கியமான படங்களில் ஒன்று Black Panther. 2018ல் வெளியான போதே படத்தின் ஒவ்வொரு காட்சியின் மார்வெல் ரசிகர்களின் ஆவலுக்கு சரியான தீனியையே போட்டிருந்தது. இதனையடுத்து கடந்த நவம்பர் 11ம் தேதி black panther-ன் சீக்வல் படமான wakanda forever வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை … Read more

விஜய்சேதுபதியின் முதல் வெப் தொடர்: பிப்ரவரி 10ல் வெளியாகிறது

‛தி பேமிலி மேன்' தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இயக்கி உள்ள வெப் தொடர் பார்சி. இதில் விஜய்சேதுபதி, ஷாஹித் கபூர், கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த தொடர் வருகிற பிப்ரவரி 10ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது ஒரு க்ரைம் த்ரில்லர் தொடர். கார்பரேட் நிறுவனங்களை எதிர்த்து நிற்கும் ஒரு தெருக்கூத்து கலைஞனின் … Read more

“மிஷ்கின் சொன்னதுதான் நடந்தது" – ஆச்சரியம் பகிரும் வினய்

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, இப்போது ஸ்மார்ட் வில்லனாக அசத்திக் கொண்டிருப்பவர் வினய். ஆனந்த விகடன் சேனலின் ‘இன் அண்ட் அவுட்’ ஷோவில் வெளியான அவரது பேட்டியின் தொடர்ச்சி இது.. தமிழ்ல நல்லா பேசுறீங்களே… எந்த படத்தில் இருந்து சொந்தக் குரல்ல பேச ஆரம்பிச்சீங்க? வினய் ”என் முதல் படம் ‘உன்னாலே உன்னாலே’ அப்ப எனக்கு தமிழ் தெரியாததுனால அதுல என்னால டப்பிங் பேச முடியாம போச்சு. படம் பார்க்கறப்ப, ‘அது என் குரல் இல்லீயே’னு ஒரு … Read more

மக்கள் இயக்க நிர்வாகி மரணம்; ரஜினிகாந்த் இரங்கல்..!

ரஜினிகாந்த் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் உடல் நலக்குறைவால் சற்று முன் காலமானார். அவருக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் இயக்கத்தை கவனித்து வந்தவர் வி.எம்.சுதாகர். பல்வேறு சூழல்களிலும் ரஜினி மக்க மன்றத்தினரையும், ரசிகர்களையும் நெறிப்படுத்தியும் வழிநடத்தியும் வந்தவர் சுதாகர். அத்துடன், ரஜினியின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்களையும் அவ்வப்போது வெளியிட்டு வந்தார். குறிப்பாக, ரஜினியின் உடல்நலம் குறித்த தகவல்களுக்காக ரசிகர்களும் ஊடகங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த முந்தைய சமயங்களில், சுதாகரே அந்த … Read more