'டூரிங் டாக்கிஸ்' காயத்ரி ரேமா

'டூரீங் டாக்கிஸ்' மூலம் ரசிகர்கள் மனம் கவர்ந்த 'கேரளத்து பைங்கிளி' நடிகை காயத்ரி ரேமா, நடிப்பிலும் நாட்டியத்திலும் ஒருங்கே சாதித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி… நீங்கள் நாட்டியத்தில் சாதிப்பது எப்படிகேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தேன். பள்ளி படிப்பை மும்பையில் முடித்தேன். நான் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. 13 வயதில் அரங்கேற்றம் செய்தேன். சென்னைக்கு கல்லுாரி படிப்பிற்கு வந்ததும் தனஞ்செயனிடம் 6 மாதம் பயிற்சி பெற்றேன். மும்பை, சென்னை, கேரளாவில் பல மேடைகளில் … Read more

திருச்சிற்றம்பலம் இயக்குனருடன் கைகோர்த்த மாதவன்

'யாரடி நீ மோகினி' படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர், சமீபத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோரை வைத்து ‛திருச்சிற்றம்பலம்' படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை மித்ரன் ஜவஹர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‛திருச்சிற்றம்பலம் படத்தின் பெரும் … Read more

மாற்றுத்திறனாளி ரசிகரை நெகிழவைத்த அல்லு அர்ஜுன்

தெலுங்கு இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் அதிக அளவில் ரசிகர்களை கொண்டவர். இவரது படப்பிடிப்பு தளங்களுக்கு ரசிகர்கள் வந்தால் கூட அதுபற்றி கோபம் கொள்ளாமல் ஊக்கப்படுத்தவே செய்பவர். அதுமட்டுமல்ல குறிப்பிட்ட மாத இடைவெளியில் ரசிகர்கள் சந்திப்புக்கு என தனியாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அவர்களை சந்தித்து வருகிறார் அல்லு அர்ஜுன். சமீப நாட்களாக விசாகப்பட்டினத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அங்கே படப்பிடிப்பு முடிந்து … Read more

42வது படத்திற்காக தீவிர வொர்க் அவுட்டில் இறங்கிய சூர்யா!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 42 வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திஷா பதானி நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் 13 கெட்டப்புகளில் நடிக்கிறார் சூர்யா. 10 மொழிகளில் உருவாகும் இந்த படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது. ஸ்ரீதேவி பிரசாத் இசையமைக்கும் இப்படம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சரித்திர கதையில் உருவாகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளை படமாக்க தயாராகி வருகிறார் சிறுத்தை சிவா. அதனால் தனது உடலை … Read more

காதலியை கரம்பிடித்த இயக்குனர் பி.எஸ்.மித்ரன்

இரும்புத்திரை, ஹீரோ, சர்தார் போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்ததாக சர்தார் படத்தின் 2ம் பாகத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் தனது நீண்டகால காதலியான ஆஷாமீரா ஐயப்பன் என்பவரை இன்று (பிப்.,12) திருமணம் செய்துக்கொண்டார். சினிமா பத்திரிகையாளரான ஆஷாமீரா ஐயப்பனும், பி.எஸ்.மித்ரனும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து இருவருக்கும் இன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் மேயாத மான், ஆடை போன்ற … Read more

முதல் படத்திலேயே இப்படியா?: லிப்லாக் காட்சியில் நடித்த அனிகா

தமிழில் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்த மலையாள குழந்தை நட்சத்திரமான அனிகாவுக்கு, தற்போது 18 வயதை கடந்துள்ளதால் ஹீரோயின் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் இவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் ‛புட்ட பொம்மா'. இது கப்பேலா எனும் மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இப்படம் கடந்த வாரம் வெளியானது. இதனைத்தொடர்ந்து அனிகா, ‛ஓ மை டார்லிங்' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். ஆல்ப்ரெட் டி சாமுவேல் இயக்கியுள்ள … Read more

மீண்டும் நயன்தாராவை சீண்டிய மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் சில நாட்களுக்கு முன்பாக நடிகை நயன்தாரா குறித்து பேட்டி அளிக்கையில், ‛ரு படத்தில் மருத்துவமனை காட்சியில் நடித்தபோது முழு மேக்கப் உடன் தலை முடிகள் கூட கலையாமல் நயன்தாரா நடித்ததாக' விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து சமீபத்தில் வெளியான ‛கனெக்ட்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது, நயன்தாரா கூறுகையில், ‛ரியலிஸ்டிக் படங்களுக்கும், கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் நடிப்பது கமர்சியல் படம் என்பதால்தான் அப்படி நடித்தேன். … Read more

சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தில் சாந்தி பிரியா

நடிகர் ராமராஜன் உடன் ‛எங்க ஊரு பாட்டுக்காரன்' திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை சாந்தி பிரியாவிற்கு தற்போது 54 வயது. இவர் நடிகை பானுப்ரியாவின் சகோதரி. அப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பல ஆண்டுகளாக திரைப்படங்களில் இருந்து விலகி இருக்கும் சாந்தி பிரியா, தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் … Read more

ஆனந்த் மகிந்திராவுக்கு ‛நாட்டு நாட்டு' ஸ்டெப் கற்றுக்கொடுத்த ராம்சரண்

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் இந்தியாவின் முதல் பார்முலா இ-பிரிக்ஸ் பந்தயம் நடக்கிறது. இதன் துவக்க நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் மற்றும் நடிகர் ராம்சரண் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு இடையே ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடித்து ராஜமவுலி இயக்கிய ‛ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற ‛நாட்டு நாட்டு' பாடலின் ஸ்டெப் குறித்து ராம்சரணிடம், ஆனந்த் மகிந்திரா கேட்டார். அப்போது அப்பாடலின் ஸ்டெப்பை ராம்சரண் கற்றுக்கொடுத்தார். … Read more

‛மாவீரன்' படத்தில் மோகோபாட் கேமரா

மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக டாக்டர், டான் வெற்றிப் படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து ‛மாவீரன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். பரத் சங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஒரு காட்சியில் மோகோபாட் எனும் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. … Read more