டிச., 30ல் வெளியாகும் திரிஷாவின் ராங்கி – விஜய் ஆண்டனியின் தமிழரசன்

எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கி உள்ள புதிய படம் ராங்கி. இந்த படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதி இருக்கிறார். ஆக்சன் கதையில் உருவாக்கி உள்ள இதில் திரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பே திரைக்கு வருவதற்கு தயாராகி விட்ட ராங்கி படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது, டிசம்பர் 30ம் தேதி அப்படத்தை தியட்டரில் வெளியிட இருப்பதாக லைகா நிறுவனம் ஒரு வீடியோ மூலம் … Read more

‛லத்தி' சென்சார், ரன்னிங் டைம் வெளியானது

வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் லத்தி. அவருக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ராணா, நந்தா ஆகியோர் தயாரித்துள்ளனர். தற்போது இப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் விஷால். இந்த நிலையில் லத்தி படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த ஒரு தகவல் தற்போது … Read more

Bigg Boss Tamil 6: எதிர்பாராததை எதிர்பாருங்கள்… எவிக்டான முக்கிய ஹவுஸ்மேட் – யார் தெரியுமா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 தொடர் 70ஆவது நாளை நெருங்கிவிட்ட நிலையில், இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. மற்ற சீசன்களை போலவே இந்த சீசனிலும் சண்டைக்கும் பஞ்சமில்லை, ரொமான்ஸுக்கும் பஞ்சமில்லை.  ஆனால் சில ரோமியோக்கள் இந்த சீசனை விட்டு வெளியேறியதில் இருந்து பெரிதாக ரொமான்ஸ் காட்சிகள் இல்லை. மாறாக … Read more

கார்த்தி படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் பஹத் பாசில் பட நடிகர்

இந்த ஆண்டில் மட்டும் நடிகர் கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் என மூன்று படங்கள் வெளியாகிவிட்டன. இந்த மூன்று படங்களுமே வெற்றி பெற்ற நிலையில் தற்போது அடுத்ததாக ராஜுமுருகன் டைரக்ஷனில் ஜப்பான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 25வது படமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சனல் அமன் என்பவர் நடித்து … Read more

”அந்த ஏரியா.. இந்த ஏரியா..” – விஜய்யின் வாரிசு படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் விஜய்தான் பெரிய ஸ்டார் அவர் படத்துக்குதான் நிறைய காட்சிகள் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியது இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் விஜய்யின் வாரிசு படத்தை வெளியிட போவது யார் யார் என்ற விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி, விஜய்யின் வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் லலித்குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோவின் ட்வீட்தான் தற்போது வைரலாகி வருகிறது. அதில் தமிழ்நாட்டில் எந்தெந்த … Read more

நான்கு ஹீரோக்கள் நடிக்க மறுத்த பின்னரே விஜய்யின் கைக்கு வந்த வாரிசு

நடிகர் விஜய் முதன்முதலாக தெலுங்கு திரையுலகில் நுழைந்து நடித்துள்ள வாரிசு தெலுங்கு படம் என்று சொல்லப்பட்டாலும் முழுக்க முழுக்க தமிழ் ரசிகர்களை மையப்படுத்தியே இந்த படம் உருவாகி உள்ளது. ஏற்கனவே தமிழில் தோழா என்கிற படத்தை கொடுத்த இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்துள்ளார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜனவரி 12ம் தேதி ரிலீஸாக உள்ள … Read more

கனெக்ட் – இடைவேளை இல்லாமல் வெளியிட தியேட்டர்காரர்கள் மறுப்பு?

இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், அவரது மனைவி நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள படம் 'கனெக்ட்'. இப்படம் வரும் டிசம்பர் 22ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. 99 நிமிடங்கள், அதாவது ஒரு மணி நேரம் 39 ஓடக் கூடிய இந்தப் படத்தில் இடைவேளை கிடையாது என்று படத்தின் இயக்குனர் அஷ்வின் சரவணன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். த்ரில்லர் படமான இப்படத்தை இடைவேளை இல்லாத படம் என்றே குறிப்பிட்டு படக்குழுவும் பேசி வருகிறது. ஆனால், … Read more

சம்பள விவகாரத்தில் ஏற்பட்ட சங்கடம் : மீண்டும் தமிழுக்கே திரும்பும் பாலா

இயக்குனர் சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா தமிழில் அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் பெரும்பாலும் மலையாளத்தில்தான் தொடர்ந்து தனது கவனத்தைச் செலுத்தி நடித்து வருகிறார் பாலா. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உன்னி முகுந்தன் தயாரித்து நடித்த ஷபீக்கிண்டே சந்தோசம் என்கிற படத்தில் ஹீரோவின் நண்பனாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் பாலா. அவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடமும் வரவேற்பு கிடைத்தது. அதேசமயம் அந்த படத்தில் தான் உட்பட … Read more

’பணிந்த சினிமா வாரிசு..தட்டி தூக்கிய அரசியல் வாரிசு’ ரெட்ஜெயண்ட் கையில் வாரிசு

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாரிசு திரைப்படத்தின் தியேட்டர் உரிமையை வாங்கியிருப்பதால், விஜய்யின் வாரிசு திரைப்படத்துக்கு ஏற்பட்டிருந்த மிகப்பெரிய சிக்கல் விலகியிருக்கிறது. பொங்கல் விழாவின்போது வாரிசு திரைப்படம் வெளியாகுமா? வெளியாகாதா? என ஏக்கத்தில் இருந்த விஜய் ரசிகர்கள், துணிவோடு வாரிசு பொங்கலை கொண்டாட தயாராகலாம். வாரிசு படத்தின் சென்னை, கோயம்பத்தூர் மற்றும் சில ஏரியாக்களின் தியேட்டர் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இப்போது வெளியாகியுள்ளது. வாரிசு vs … Read more

”மீடியா முன்னாடி பேசவே பயமா இருக்கு” – வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு மீண்டும் பேச்சு!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் விஜய்யின் 66வது படமான வாரிசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 12ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் படக்குழு தரப்பிலிருந்து இதுவரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. அதேவேளையில் அஜித்தின் துணிவு படமும் பொங்கல் பண்டிகைக்கு அதே நாளில் ரிலீசாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் இரு நடிகர்களின் ரசிகர்களும் வாரிசு, துணிவு படங்களின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். இப்படி இருக்கையில் விஜய்யின் வாரிசு பட தயாரிப்பாளர் … Read more