வாழ்த்தியவர்களுக்கு மனமார்ந்த நன்றி சொன்ன ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் நேற்று(டிச., 12) தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினார். அதையொட்டி கவர்னர், முதல்வர், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் ரசிகர்களை சந்திக்கவில்லை. அவரை காணலாம் என்று அவரது வீட்டு முன்பு கூடிய ரசிகர்கள் அவர் இல்லாத காணாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் கண்ணீரும் விட்டு அழுதனர். இந்நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரஜினி. இதுதொடர்பாக அவர் தனித்தனியாக … Read more

Golden Globe Awards 2023: பரிந்துரைப் பட்டியலின் இரண்டு பிரிவுகளில் இடம்பிடித்த ராஜமௌலியின் `RRR'!

அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சர்வதேச அளவிலான 80வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த விருது விழாவுக்கு ஏராளமான திரைப்படங்கள் விருதுகளுக்காகப் பல பிரிவுகளில் விண்ணப்பித்திருந்தன. இந்நிலையில் தற்போது ‘கோல்டன் குளோப்’ விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியல் (இறுதி பரிந்துரைப் பட்டியல்) வெளியாகியுள்ளது. இதில் ஆங்கிலம் அல்லாத பிற மொழிக்கான ‘சிறந்த திரைப்படம்’ என்னும் பிரிவில் ராஜமௌலியின் ‘RRR’ திரைப்படம் நாமினேட்டாகியுள்ளது. மேலும், ‘சிறந்த … Read more

தீபிகா படுகோனோவின் கவர்ச்சி ஆட்டத்துடன் வெளியான 'பதான்' முதல் சிங்கிள்

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், விஷால் – சேகர் இசையமைப்பில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பதான்'. அடுத்த வருடம் 2023 ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிளான 'பேஷ்ரம்…' பாடல் நேற்று யு டியூபில் வெளியானது. சில தினங்களுக்கு முன்பு இப்பாடல் வெளியீடு பற்றிய அறிவிப்பிலேயே தீபிகா படுகோனேவின் நீச்சல் உடை போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களிடம் அதிக ஆர்வத்தைத் தூண்டினார்கள். அதற்கேற்றபடி படத்தில் கவர்ச்சி ஆட்டம் … Read more

'கோல்டன் குளோப்' போட்டியில் 'ஆர்ஆர்ஆர்' : சினிமா பிரபலங்கள் வாழ்த்து

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து தெலுங்கில் தயாராகி, பான் இந்தியா படமாக வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளிய படம் 'ஆர்ஆர்ஆர்'. ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இப்படம் நேரடியாகக் களமிறங்கியுள்ளது. இதனிடையே, ஆஸ்கர் விருதுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் வழங்கப்படும் பிரபலமான 'கோல்டன் குளோப்' விருதுகளுக்காக 'ஆர்ஆர்ஆர்' படம் இரண்டு பிரிவுகளில் 'நாமினேட்' ஆகியுள்ளது. ஆங்கிலம் அல்லாத மொழிகளில் சிறந்த படத்திற்கான நாமினேஷன் மற்றும் … Read more

தளபதி 67 படத்தில் இத்தனை மாஸ் ஹீரோக்களா.. வெளியான மாஸ் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியாகி வெற்றிநடைபோட்ட ‘விக்ரம்’ படத்திற்கு பின்னர் இயக்குனர் லோகேஷ் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் மற்றும் எதிர்பார்க்கப்படும் இயக்குனராக மாறிவிட்டார்.  இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து ‘தளபதி 67’ படத்தை இயக்குகிறார்.  இப்படத்திற்கான பூஜை கடந்த 5ம் தேதியன்று சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோஸ் வளாகத்தினுள் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், திரிஷா, அர்ஜுன், அனிரூத், தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் மன்சூர் அலிகான் … Read more

ரீ-ரிலீஸ் டிரெண்ட்டை மீண்டும் ஆரம்பித்து வைக்குமா 'பாபா' ?

ஒரு காலத்தில் ரீ-ரிலீஸ் தியேட்டர்கள் என்றே பல ஊர்களில் தியேட்டர்கள் இருக்கும். அங்கு புதிய படங்கள் எதுவும் வெளியாகாது. பழைய படங்களைத்தான் அதிகமாகத் திரையிடுவார்கள். அல்லது நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்கு மேல் ஒரே தியேட்டரில் ஓடிய புதிய படத்தை அங்கிருந்து தூக்கிவிட்டு அந்த பழைய படங்களைத் திரையிடும் தியேட்டர்களில் தொடர்ந்து திரையிடுவார்கள். பிலிமிலிருந்து டிஜிட்டலுக்கு திரைப்படத் திரையீடுகள் மாறிய பிறகு இந்த ரீ-ரிலீஸ் வியாபாரம் முற்றிலுமாக அழிந்து போனது. இருந்தாலும் 'கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், வசந்த … Read more

இன்று ரசிகர்களை சந்திக்கும் நடிகர் விஜய்!

3 மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்க உள்ளார். விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார்.   இந்த நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று விஜய் சந்திக்கிறார்.அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்ட … Read more

7ஆம் வகுப்பு மாணவனின் லீலை..பூனம் பாஜ்வாவுக்கு லவ் லெட்டர்

நடிகர் பரத் நடிப்பில் உருவான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மும்பை நடிகை பூனம் பாஜ்வா. இந்த படத்தை தொடர்ந்து இவர் தெனாவட்டு, அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். தற்போது இவர் திரைப்படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்து வருகிறார். சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு கேரக்டர் நடிகையாக நடித்தார். ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை-2 என பல படங்களில் நடித்த பூனம் பாஜ்வா (Poonam … Read more

Vijay Sethupathi: படு தோல்வியடைந்த 'டிஎஸ்பி' படம்: ஆட்டத்தை ஆரம்பித்த விஜய் சேதுபதி.!

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். திரையிலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தாலும் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் எல்லா கதாபாத்திரங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தாலும் ஹீரோ இமேஜ் பார்க்காமல் எல்லா கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்து வருகிறார் விஜய். அண்மையில் வெளியான கமலின் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதியின் மிரட்டலான … Read more

பிக்பாஸ் ஆயிஷாவுக்கு எவ்வளவு செட்டில்மெண்ட் ஆச்சி..? வெறும் இத்தனை தானா?

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.  மற்ற சீசன்களை போலவே இந்த சீசனிலும் சண்டைக்கும் பஞ்சமில்லை, ரொமான்ஸுக்கும் பஞ்சமில்லை. ஆனால் சில ரோமியோக்கள் இந்த சீசனை விட்டு வெளியேறியதிலிருந்து பெரிதாக ரொமான்ஸ் காட்சிகள் இல்லை என்றாலும் அதிரடி காட்சிகள் மட்டும் இருந்து வருகிறது.  இருப்பினும் இந்த நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்ததாக இருப்பதாகவே சிலர் கருதுகின்றனர். மொத்தம் 21 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. … Read more