Rajinikanth: முதலமைச்சர் தொடங்கி ஷாருக்கான் வரை.. சூப்பர் ஸ்டார் நெகிழ்ச்சி.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், அனைவராலும் அன்புடன் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் வசூல் சாதனை படைத்து பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் வலம் வருகிறார். ‘அண்ணாத்த’ படத்தினை தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடிய ரஜினிகாந்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். நேற்றைய தினம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை காண வீட்டுவாசலில் ரசிகர்கள் குவிந்தனர். பல … Read more

2022 – இந்தியாவில் அதிகத் தேடுதல் படங்களில் இடம் பிடித்த 'விக்ரம்'

2022ம் ஆண்டின் ரீ-வைண்ட் விவரங்களை பலரும் ஆரம்பித்துவிட்டனர். உலக அளவில் தேடுதல் இணையதளமான கூகுள் இந்திய அளவில் 2022ம் ஆண்டில் டாப் 10 இடங்களைப் பெற்ற பல வகையான விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் திரைப்படங்களுக்கான தேடுதல் பட்டியலில் தமிழ்ப் படமான 'விக்ரம்' மட்டுமே இடம் பிடித்துள்ளது. அந்தப் படம் டாப் 10 பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த டாப் 10 பட்டியலில் 5 தென்னிந்திய மொழிப் படங்களும், 4 ஹிந்திப் படங்களும், ஒரு ஹாலிவுட் … Read more

ரஷ் ஹவர் 4ம் பாகம்: ஜாக்கிசான் அறிப்பு

ஜாக்கிசான் படங்களில் ஆக்ஷன், காமெடி கலந்து அதிரடி காட்டிய படம் ரஷ் ஹவர். 1998ம் ஆண்டு வெளியான இந்த படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து 2 பாகங்கள் வெளிவந்தன. வயது மூப்பின் காரணமாக இனி ஆக்ஷன் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்த ஜாக்கிசான் வயதுக்கேற்ற வேடங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் ரஷ் ஹவர் படத்தின் 4வது பாகம் வெளிவர இருப்பதாக அறிவித்திருக்கிறார். இதற்கான … Read more

மெட்ரோ ரயிலில் விஜய்யின் வாரிசு பட விளம்பரம்

வம்சி இயக்கத்தில் விஜய் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதையொட்டி பட புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு ஹிட் அடித்து வரும் நிலையில் விரைவில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தற்போது வாரிசு படத்தின் பிரமாண்டமான விளம்பர போஸ்டர்கள் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த பிரமோசன் வாரிசு படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் பெரிய அளவில் பரபரப்பை … Read more

ரூ.200 கோடி வசூல் கிளப்பில் இணைந்த த்ரிஷ்யம் 2

மலையாளத்தில் மோகன்லால் ஜீத்து ஜோசப் கூட்டணிகள் உருவான திரிஷ்யம் படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல பாலிவுட்டிலும் அஜய் தேவ்கன், ஸ்ரேயா தபு ஆகியோர் நடிப்பில் ரீமேக்காகி வெளியானது. ஆனால் தென்னிந்திய மொழிகளைப் போல ஹிந்தியில் அந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கவில்லை. மறைந்த இயக்குனர் நிஷிகாந்த் காமத் அந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில் மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் 2 படம் முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதை தொடர்ந்து … Read more

சந்திரமுகி 2 – தமிழில் மூன்றாவது முறையாக முயற்சிக்கும் கங்கனா ரணவத்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனவத். பாலிவுட் ஹீரோக்களைப் பற்றி கடுமையான கருத்துக்களுடன் விமர்சிக்கும் ஒரு தைரியமான நடிகை எனப் பெயரெடுத்தவர். பாலிவுட்டின் நெப்போட்டிசத்தை எதிர்த்து அதிகமாகக் குரல் கொடுத்த ஒரே நடிகை என்றும் சொல்லலாம். ஹிந்தியில் அவரது ஆரம்ப கால கட்டங்களிலேயே 2008ம் ஆண்டு தமிழில் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்து வெளிவந்த 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் பெரிய வெற்றியையும் பெறவில்லை, அவரையும் … Read more

'அப்பா' ஆகப் போகும் ராம் சரண் – சிரஞ்சீவி அறிவிப்பு

தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோக்களில் ஒருவர் சிரஞ்சீவி. அவருடைய மகன் ராம் சரணும் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். ராம் சரண் பத்து வருடங்களுக்கு முன்பாக 2012ம் ஆண்டில் உபாசானாவைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் அவர்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என ராம் சரணின் அப்பா சிரஞ்சீவி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். “ஸ்ரீ அனுமன்ஜியின் ஆசீர்வாதங்களுடன், உபாசானா, ராம் சரண் இருவரும் அவர்களது முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்,” என குறிப்பிட்டுள்ளார். … Read more

கோல்டன் குளோப் விருது: நாமினேஷன் பட்டியலில் 2 பிரிவுகளில் இடம் பிடித்த ‘ஆர்.ஆர்.ஆர்.’

2022-ம் வருடத்திற்கான கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் இடம்பிடித்து அசத்தியுள்ளது. 2022-ம் ஆண்டு முடிந்து, 2023-ம் ஆண்டு துவங்க இன்னும் 19 நாட்களே உள்ளன. இதையடுத்து இந்த ஆண்டு வெளிவந்த சிறந்தப் படங்களை தேர்ந்தெடுத்து, விருது வழங்கும் விழா உலகெங்கிலும் நடைபெற உள்ளது. குறிப்பாக திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் அகாடெமி விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. Hollywood Foreign Press Association வழங்கும் … Read more

தமிழ்ப் படங்களுக்குக் கட்டுப்பாடு கூடாது – தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபு

பொங்கல், தசரா உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மற்ற மொழிப் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது என தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. 2023 பொங்கலுக்கு தமிழ்ப் படமான 'வாரிசு' படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரிசுடு' படத்தை ஆந்திரா, தெலங்கானாவில் அதிக தியேட்டர்களில் வெளியிட அதன் தயாரிப்பாளர் தில் ராஜு திட்டமிட்டுள்ளார். தியேட்டர் வட்டாரங்களில் பெரும் செல்வாக்குடன் இருப்பவர் அவர். அதனால், பொங்கலுக்கு வெளியாக உள்ள நேரடித் தெலுங்குப் படங்களுக்கு பாதிப்பு வரும் … Read more

ஜப்பானில் ரஜினியின் 24 வருட சாதனையை முறியடித்த ராஜமௌலி – வெளியான தகவல்!

ரஜினியின் ‘முத்து’ திரைப்படம் ஜப்பானில் வசூலில் சாதனைப் படைத்து முதலிடம் பிடித்து வந்தநிலையில், தற்போது அந்த சாதனையை ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் தகர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் இந்தியப் படங்களுக்கு என்று தனி வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக தமிழ்ப் படங்களில் ரஜினிகாந்தின் படங்களுக்கு தனி மவுசு உண்டு. இதனால்தான் ரஜினியின் நடிப்பில், கே.எஸ். ரவிக்குமாரின் இயக்கத்தில், கடந்த 1995-ம் ஆண்டு இந்தியாவில் வெளியான ‘முத்து’ திரைப்படம், 1998-ம் ஆண்டு ஜப்பானில் வெளியிடப்பட்ட நிலையில், அங்கு மாபெரும் வரவேற்பு … Read more