மிரட்டும் 'மிரள்' : மிரட்சியில் காவ்யா

தமிழ்நாட்டின் தங்க தாரகையே..தங்கமுலாம் பூசிய நிலவே..கண்ணில் இட்ட அஞ்சனத்தால் ஆண்களை கிறங்க வைத்தவளே.. பாரதி கண்ணம்மாவில் தொடங்கிய காவியமே..சேலை கட்டிய சோலையே… என சின்னத்திரை ரசிகர்களை வர்ணிக்க துாண்டி,'மிரள்' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் மிரட்டிய நடிகை காவ்யாவிடம் கொஞ்சம் பேசலாம்… நீங்கள் என்ன படிச்சிருக்கீங்கஎன் பள்ளி படிப்பு எல்லாம் திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் தான். ஆர்கிடெக்ட் படிப்பிற்காக சென்னை வந்தேன். தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போ 5 வருஷமா நடிப்பில் இருக்கேன். சினிமா வாய்ப்பு … Read more

சினிமாவில் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது: 'பிரபல கதாநாயகி' பிரணிகா

தமிழ் பொண்ணுங்க சாதிக்க முடியாது என சொன்னவங்க மத்தியில் திறமை இருந்தால் சாதிக்கலாம் என நிரூபித்து இளசுகளின் மனதை கவர்கிறார் திருச்சியை சேர்ந்த பிரணிகா. சின்னத்திரை, வெப்சீரிஸ் என நடிப்பில் திறமையை வெளிப்படுத்தி தற்போது வெள்ளித்திரையிலும் கால்பதிக்க ஆரம்பித்துள்ளார். இவரிடம் ஒரு நேர்காணல் திரையுலகத்திற்கு வந்தது…சாதாரண குடும்பம் தான் நாங்க. 2020ல் பாவம் கணேசன் சீரியலில் ஸ்ரீமதி கேரக்டரில் நடித்தேன். அதன் பின் காமெடி ராஜா, கலக்கல் ராணி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். கனா காணும் … Read more

வெற்றி என்பது நிம்மதியான துாக்கம் : அடடா அசோக் செல்வன்

தமிழ் சினிமாவின் கதைக்களத்தை மாற்றிய 'சூது கவ்வும்', 'தெகிடி', 'பீட்சா 2', படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். சில நேரங்களில் சில மனிதர்கள், ஆரஞ்சு மிட்டாய், ஹாஸ்டல், 'ஓ மை கடவுளே' படங்கள் இளைஞர்களின் பேவரைட்டாக இன்று வரை உள்ளது. தற்போது வெளியான 'நித்தம் ஒரு வானம்' ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இவருடன் ஒரு பேட்டி. அசோக் செல்வன் சினிமாவுக்கு வந்தது எப்படி எந்த சினிமா பின்னணியும், ஐடியாவும் இல்லை. விஸ்காம் படிக்கும் போது தெருக்கூத்து பயிற்சியில் … Read more

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் "சைத்ரா"

நடிகை யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடிக்கும் படத்தை மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் சார்பில் மனோகரன் மற்றும் கண்ணன் வரதராஜ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படத்திற்கு “சைத்ரா” எனப் பெயரிட்டுள்ளனர். யாஷிகாவுடன் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜெனித்குமார் என்பவர் இயக்கும் இப்படத்திற்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் ஜெனித்குமார் கூறுகையில், ‛24 மணிநேரத்தில் நடக்கும் கதை இது. பீட்சா, டீமாண்டி காலணி மாதிரியான … Read more

எனக்கு 'துணிவு' பொங்கல் – மகிழ்ச்சியில் மஞ்சு வாரியர்

இனிக்கும் வெல்ல சிரிப்பில் பொங்கிடும் சர்க்கரை பொங்கல்… அதிகாலை இளஞ்சூரியனை சுண்டி இழுக்கும் மேகக்கண்கள்… தோகை கூந்தலில் ஆடும் மணக்கும் மலர் செண்டுகள்… என அழகும், ஆக் ஷனும் சங்கமிக்க 'துணிவு' பொங்கல் கொண்டாடும் நடிகை மஞ்சு வாரியார் மனம் திறக்கிறார்… இது உங்களுக்கு ஸ்பெஷல் பொங்கல் போல?பண்டிகைகளை பெரிய அளவு கொண்டாடியதில்லை. பண்டிகை காலங்களில் என் பிற மொழிபடங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு. தமிழில் 'துணிவு' படத்தில் அஜித் உடன் நடித்ததில் பெருமை. மலையாளத்தில் 'ஆயிஷா' ரிலீஸ் … Read more

அமெரிக்க வசூலில் முந்தும் 'வாரிசு'

வெளிநாடுகளில் தமிழ்ப் படங்கள் அதிக அளவில் வெளியாகும் முக்கிய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அங்கு விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய படங்கள் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் கடந்த 11ம் தேதி வெளியானது. அமெரிக்காவில் இரண்டு படங்களையும் வெளியிட்ட வினியோக நிறுவனங்கள் படங்களின் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்துள்ளன. 'துணிவு படம் 7 லட்சம் யுஎஸ் டாலர்களை இதுவரை வசூலித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 5 கோடியே 70 லட்சம். அஜித்தின் திரையுலக வரலாற்றில் அமெரிக்க வசூலில் … Read more

'பொங்கள்' வாழ்த்து கூறிய படிக்காத 'வாத்தி'

'வாத்தி' எனப் பெயர் வைத்துவிட்டு தப்பும் தவறுமாய் 'பொங்கள்' வாழ்த்து கூறி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. தெலுங்கு நிறுவனம் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'. தமிழ் தெலுங்கில் தயாராகியுள்ள இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான 'நாடோடி மன்னன்' என்ற பாடல் வெளியீட்டு பற்றி நேற்று மாலை படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டது. அதில், “இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்” என 'பொங்கல்' என்பதற்கு தவறாக 'பொங்கள்' எனக் … Read more

உலகளவில் வாரிசு முந்தினாலும் தமிழ்நாட்டில் துணிவு தான்! பாக்ஸ் ஆஃபீஸ் ரிப்போர்ட்

பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாகின. தமிழ் திரைத்துறையின் இரண்டு மெகா ஸ்டார்களான அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே நாளில் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் ஜாக்பாட் அடித்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும், வாரிசு படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவும் வெளியிட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை துணிவு … Read more

'வாரிசு' இயக்குனர் வம்சியை கட்டித் தழுவி வாழ்த்திய அவரது அப்பா

தெலுங்கு இயக்குனராக வம்சி பைடிப்பள்ளி தெலுங்கில் குடும்பப் பாங்கான சென்டிமென்ட் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். 2007ம் ஆண்டு பிரபாஸ் நடித்த 'முன்னா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன்பின் ஜுனியர் என்டிஆர் நடித்த 'பிருந்தாவனம்', ராம் சரண் நடித்த 'எவடு', நாகார்ஜுனா கார்த்தி நடித்த 'ஊபிரி', தமிழில் 'தோழா', மகேஷ் பாபு நடித்த 'மகரிஷி' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அனைத்துமே முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள்தான். விஜய் நடித்து சில தினங்களுக்கு முன்பு … Read more

'துணிவு, வாரிசு' – ஏரியாக்கள் விற்கப்பட்ட விலை எவ்வளவு?

விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' ஆகிய இரண்டு படங்களும் மூன்று நாட்கள் முன்னதாக ஜனவரி 11ம் தேதி வெளியாகின. இரண்டு படங்களில் எந்தப் படம் விரைவில் 100 கோடி வசூலைப் பெறப் போகிறது என இருவரது ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் படங்கள் எவ்வளவு விலைக்கு விற்கப்பட்டுள்ளதோ அதைப் பொறுத்தே அவற்றின் லாபம் என்ன என்பது தெரிய வரும். இரண்டு படங்களின் வியாபாரத்திற்கு நிறையவே வித்தியாசம் உள்ளது என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். 'துணிவு' … Read more